ஞாயிறு, 6 ஜனவரி, 2019

இதுதான் நமது காலக்சியில்
நாம் இருக்கும் இடம்.
Please understand how INSIGNIFICANT we are!

நமது காலக்சி இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு
இருக்கிறது? அடுத்து அதைப் பார்ப்போம்.


முயற்சி செய்தாள் என்பது தொடர்புறுத்தும்
மொழியாக இருப்பதால், முயற்சித்தாள் என்பதை
ஏற்க இயலவில்லை.

அது இல்லை, அது அன்று (அதுவன்று) , அது அல்ல
(அதுவல்ல) என்னும் மூன்றில், அது அல்ல என்பது
தவறானதே. ஆயினும் அதுவன்று என்று எழுதினாலும்
அது அன்று என்று எழுதினாலும் பொருள் மயக்கம்
கொள்வோர் 99 .விழுக்காட்டினர். எனவே தவறு என்று
நன்கு தெரிந்தும் அது அல்ல என்றே எழுத வேண்டி
உள்ளது. அப்போதுதான் தொடர்புறுத்த இயலும்.
என்ன செய்ய, தமிழ்ச் சமூகம் இப்படித்தான்
இருக்கிறது.

ஒரு முழு அடைப்புப் போராட்டம் (பந்த்) நடக்கிறது.
"நாளை பந்த் எனவே பேருந்துகள் ஓடாது"
என்று செய்தித்தாளில் செய்தி வெளிவருகிறது.
பேருந்துகள் ஓடா என்று சரியாக எழுதினால்
புரிந்து கொள்ள மாட்டான் இன்றைய தமிழன்.
பேருந்துகள் ஓடாது என்றுதான் எழுத வேண்டி
உள்ளது.

என் தலைமுறையைச் சேர்ந்தவர்களோடு
தமிழைச் சரியாக எழுத வேண்டும் என்ற
அக்கறை போய்விட்டது. யாருக்கும் தமிழ் மீது
பற்று இல்லாமல் இல்லை. ஆனால் தமிழில்
குறைந்தபட்ச அறிவு இல்லாமல் போய்விட்டது.

எனவே மனச்சாட்சியைக் கொன்று விட்டு
பேருந்துகள் ஓடாது என்றுதான் நான் எழுதிக்
கொண்டிருக்கிறேன். தொடர்புறுத்தல்
என்பதற்கு நான் பிரதான முக்கியத்துவம்
அளிக்கிறேன்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் இருந்து
இன்று வரை மாணவர்களுடன் எனக்கு  இழையறாத
தொடர்பு இருந்து வருகிறது. படிப்பறிவில்லாத
தொழிலாளர்களுடன் தொடர்பு இருந்து வருகிறது.
அவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில்தான்
நான் எழுதுகிறேன்.

மறைந்த சி பா ஆதித்தனாரை நான் பின்பற்றுகிறேன்.
அவருடைய நாள் தாள் எழுத்தாளர் கையேடு
என்ற நூலைப் படியுங்கள். அதுதான் என்னுடைய 
பைபிள்.
    

மறைமலை அடிகள் பெரும் மதிப்புக்கு
உரியவர். யாரே மறுக்கவியலும்?
ஆயினும் நான் மறைமலை அடிகளைப்
பின்பற்றுவதில்லை. நான் சி பா ஆதித்தனாரைப்
பின்பற்றுகிறேன்.

பொன்விதி: ஆதித்தனார்  கூறிய பொன்விதி
(Golden rule) இதுதான்: "பேச்சு வழக்கில் இருக்கும்
தமிழே உயிருள்ள தமிழ்; அதைக் கொச்சை
நீக்கி எழுத வேண்டும்".

என்னுடைய 20களில் நான் தனித்தமிழ்
மயக்கம் கொண்டிருந்தேன். பின் தெளிந்தேன்.
மார்க்சியம் என்னைத் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள்
அனைவரும் பின்வருமாறு செய்தி
வாசிக்கின்றனர்; உரையாடுகின்றனர்;
பேசுகின்றனர்;-

1. லட்சக் கணக்கான புத்தகங்கள் புத்தகச்
சந்தையில் விற்பனைக்கு உள்ளது.
(கவனிக்கவும்: உள்ளது= ஒருமை)
2. நாளை பந்த் என்பதால் பேருந்துகள்
ஓடாது; ஆட்டோக்கள் ஓடாது.

இவ்வாறு செய்தி வாசிப்போர் அனைவரும்
தமிழ்ப் பற்று உடைய தமிழர்களே.
1980உடன் பிழையின்றித் தமிழ் எழுத வேண்டும்
என்ற அக்கறை போய் விட்டது. சரியாகத்
தமிழ் எழுதுபவன் அம்மண ஊரில் கோவணம்
கட்டுகிறவன்.
     

வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

வந்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதினால்
வாசிப்பவனால் வாசிக்க இயலவில்லை.
எனவே  "வந்து  கொண்டு  இருக்கிறார்கள்"
என்று எழுத வேண்டிய தேவை இருக்கிறது.
நாம் எழுதுவது வாசிப்பவனுக்குப் புரிய
வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல்
இருந்தால் எப்படி?

என்னுடைய இருபதுகளில் நான் கடைப்பிடித்த
மொழிநடையையும் மொழிக்கொள்கையையும்
என்னுடைய முப்பதுகளில் நான் மாற்றிக்
கொண்டேன். ஆதித்தனாரின் மொழிக்
கொள்கையில் உள்ள "தொடர்புறுத்தல்"
என்னும் அம்சம் நான் பின்பற்றி ஒழுகிய
மார்க்சியத்துடன் பெரிதும் உடன்பட்டது.

1. ஆதித்தனாரின் மொழிக்கொள்கை
2. மார்க்சியம் கூறும் வர்க்கச்
சிந்தனையின்பாற்பட்ட மொழிக்கொள்கை
3. மாணவர்களுடனான என்னுடைய இழையறாத
தொடர்பினால், அவர்களுக்குப் புரியும்
விதத்தில் பேச வேண்டிய தேவையின்பாற்பட்ட
என்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலான
மொழிக்கொள்கை
ஆகிய மூன்றின் ஒருங்கிணைப்பே என்னுடைய
மொழிக்கொள்கை.

இது இலக்கணம் மீறிய மரபு மீறிய
மொழிக்கொள்கை என்று கொள்ளப்படலாம்.
அது பற்றி அக்கறை கொள்ள இயலாது.

மக்களுக்காகத்தான் மொழியே தவிர,
மொழிக்காகத்தான் மக்கள் என்பதை
என்னால் ஏற்க இயலாது.

சர்வம் மனுஷ்யார்ப்பணம் என்று நமது
உபநிடதம் கூறுகிறது. எனவே மொழியும்
மனிதனுக்கே அர்ப்பணம். மனிதனை
மொழிக்கு அர்ப்பணிக்க இயலாது.
---------------------------------------------------------
பின்குறிப்பு: "ஆஹா" என்று எழுதும்போது எனக்கு
மனம் சிறிது வலிக்கத்தான் செய்கிறது. அப்படி
காலங்காலமாக எழுதுபவன் அல்ல நான்.
ஆனால் "ஆகா" என்று எழுதினால் "ஆக்கா"
என்று வாசிக்கிறானே தமிழ் மாணவன்! அதைத்
தவிர்க்கவே "ஆஹா"என்று எழுதித் தொலைக்க
வேண்டி இருக்கிறது. நாங்களெல்லாம்
மாணவர்களாக இருந்தபோது, "ஆஹா" என்ற
 எழுத்தை வாசிக்கும்போது ஒவ்வாமை ஏற்படும்.
இன்று நிலைமை தலைகீழ்.
***********************************    

தலிபானியம் என்பது பழமைவாதம்தானே!
இத்தகைய செயற்கையான காலத்துக்குப்
பின்னால் இழுத்துச் செல்லும் மொழிநடை
நிலவுடைமைச் சிந்தனையின் விளைவு.

விஞ்ஞானத்தை ஒருபோதும் விட்டுக்
கொடுப்பதில்லை. விட்டுக் கொடுக்கப்
போவதும் இல்லை. மானுட வீறு பாடுவதுதானே
சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்று சொன்னான் 
மாக்சிம் கார்க்கி.  "வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா"என்றுதானே கம்பன்
பாடினான்! 

இளம் வயதிலேயே மக்களை நேசிக்கக் கூடிய
ஒரு இயக்கத்தில் போய்ச் சேர்ந்தாச்சு.
அதற்கேற்ற விதத்தில் மூளையை சிந்தனையை
மாற்றிக் கொண்டாயிற்று. இது irreversible process.
எனவே மீண்டும் பழைய மனநிலைக்கோ மன
அமைப்புக்கோ போக முடியாது. 
           
 

இன்று ஞாயிறு 06.01.2019 மாலை 5.30 மணிக்கு
இயங்கியல் கூட்டம். 5, மேற்கு அவென்யூ,
கோடம்பாக்கம். அனைவரும் வருக.
தொடர்புக்கு 94442 30176.

(மேனகா கார்ட்ஸ் எதிரில்)   செந்தழல் ஞானம்
மருதுபாண்டியன் கிருஷ்ணசாமி தியாகராஜன்
திருப்பூர் குணா சிலம்பரசன் சே   த ஜீவானந்தம்


யதார்த்தத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.
அதுதான் சாத்தியமும் ஆகும். எனவே இன்று
என்ன இருக்கிறதோ எப்படி இருக்கிறதோ
அதில் இருந்து தொடங்கி நமது இலக்கை
நோக்கிச் செல்ல வேண்டும். இதுதான் வழிமுறை.
பிற அனைத்தும் கனவுகளே ஆகும்.

வெப்ப இயக்கவியலில் ஒரு விதி உண்டு.
(Law of thermo dynamics). இந்தப் பிரபஞ்சத்தையே
ஆட்டிப் படைக்கிற விதி. அது இதுதான்:
The entropy is always increasing.
Entropy = Disorderliness in a system அதாவது ஒழுங்கீனம்.
நாளாக ஆக ஒழுங்கீனம் அதிகரிக்கும் என்று
கூறும் இந்த விதி, தமிழறிவில் தமிழ் எழுத்தில்
தமிழ் வாசிப்பில்  அதிகரித்துக் கொண்டே
வரும் ஒழுங்கீனத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

1960, 1970..... பிழையின்றித் தமிழ் எழுதுவோர் = 90 சதம்.
1980..90////////    ....... ............ ...................................................      = 60 சதம்
1990-2000/////////////////////////////////////////////////////////........................= 30 சதம்
2000-2010///////////////////////////////////////////////////////////......................= 20 சதம்
2011-2019////////////////////////////////////////////////////..............................= 10 சதம்/

The entropy is on the increase. What to do?

    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக