அறிவியல் ஒளி ஏட்டுக்குச் சந்தா செலுத்துக!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
இன்று 10.01.2019 புத்தகச் சந்தைக்குச் சென்றேன்.
தமிழ்மண் பதிப்பகம் (கடை எண் 276) சென்று
அறிவியல் ஒளி ஆசிரியர் சிதம்பரம் அவர்களைச்
சந்தித்தேன்.
எமது வேண்டுகோளை ஏற்று அறிவியல் ஒளி
ஏட்டுக்குச் சாந்த செலுத்திய தோழர்களுக்கு
நன்றி.
எனினும் மதியம் முதல் இரவு வரை உட்கார்ந்து
இருந்தாலும், ஓரிருவர் வந்து சந்தா செலுத்தினால்
பெரிய விஷயம் என்பதே நிலை.
ஆசிரியர் சிதம்பரம் அவர்களுக்கு இதனால் நேரம்
கெடுகிறது. பிப்ரவரியில் வெளியாக உள்ள
அறிவியல் ஒளி ஆண்டு மலர் தயாரிப்பு வேலை
பாதிப்படைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் போதிய அளவு சந்தா
சேர்த்தால்தான் இதழை வெளிக்கொண்டு வர
முடியும்.
தினமும் ஆயிரக் கணக்கில் புத்தகச் சந்தைக்கு
ஆட்கள் வருகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு
ஓரிருவர் வந்தாலே அபூர்வம் என்ற நிலை உள்ளது.
இது லாப நோக்கில் நடத்தப்படும் இதழ் அல்ல.
எனவே புத்தகச் சந்தைக்குச் செல்லும் அன்பர்கள்
அறிவியல் ஒளி ஏட்டுக்குச் சந்தா செலுத்தும்படி
வேண்டுகிறேன்.
தோழர் சிலம்பரசன் சே அவர்கள் சந்தா
செலுத்தியுள்ளார்.அவருக்கு நன்றி.
**************************************************
தமிழ்மண் பதிப்பகம் சென்று அறிவியல் ஒளி
ஏட்டுக்குச் சந்தா செலுத்துக!
கடை எண் 276.
விஞ்ஞானி டில்லிபாபுவின் அறிவியல் நூல்கள்!
கிடைக்கும் இடம் புத்தகச் சந்தை YMCA நந்தனம்.
கடை எண்: 672 முரண்களரி பதிப்பகம்.
அறிவியல் நூல்களை வாங்குங்கள்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
அறிவியல் கற்றவர்களுக்கு தமிழில் புலமையோ
மொழியாளுமையோ இருப்பதில்லை. தமிழ்
கற்றவர்களோ அறிவியலில் பூஜ்யமாக உள்ளனர்.
இதுதான் தமிழ்ச் சமுகத்தின் நிலை.
அறிவியலும் கற்று தமிழில் மொழியாளுமையும்
கைவரப் பெற்றவர்கள் வெகு சிலரே. அந்த
வெகுசிலரில் ஒருவர் விஞ்ஞானி டில்லிபாபு.
எளிய தமிழில் பாமரரும் புரிந்து கொள்ளும்
விதத்தில் அறிவியலைத் தமிழில் சொல்பவர்
இவர். டாக்டர் அப்துல் கலாம் பணியாற்றிய
DRDO நிறுவனத்தில் விஞ்ஞானியாகப்
பணியாற்றி வரும் டில்லிபாபு அவர்கள்
இதுவரை மூன்று அறிவியல் நூல்களை
எழுதி உள்ளார்.
1. எந்திரத் தும்பிகள்
2. போர்ப்பறவைகள்
3. ஏவுகணையும் கொசுக்கடியும்.
இவை முரண்களரி பதிப்பகத்தில் விற்பனைக்கு
உள்ளன. கடை எண்: 672.
நூல்களை வாங்குங்கள்! படியுங்கள்!
குழந்தைகளுக்கு (சிறுவர் சிறுமியருக்கு)
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாங்கிக்
கொடுங்கள்.
துண்டு சால்வைகளுக்குப் பதில் விஞ்ஞானி
டில்லிபாபுவின் அறிவியல் நூல்களை அளித்து
மரியாதை செய்யுங்கள்.
அறிவியல் வளராமல் நீங்கள் வளர முடியாது.
அறிவியலை வளர்ப்பது உங்களின் கடமை!
நம் ஒவ்வொருவரின் கடமை!
அறிவியல் நூல்கள் உங்களின் புத்தக அலமாரியை
அலங்கரிக்கட்டும்!
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக