குமுகம், மாந்தம் என்று எழுதினால் புரியுமா?
புரியாமல் எழுதுவதா மார்க்சியம்?
பிழையுடன் எழுதுவது குளிக்காமல்
அழுக்குடன் இருப்பது போன்றது!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
பரவலாகக் காணப்படும் பிழைகள், common misconceptions
ஆகியவை களையப்பட்ட, அதாவது அழுக்கு நீங்கிக்
குளித்தது போன்ற ஒரு மொழிநடையை,
தமிழ் மற்றும் ஆங்கில மொழிநடையை அனைவரும்
எழுத வேண்டும் என்ற நோக்கில், ஒரு சிறிய
முயற்சியாக பிழை திருத்தம் குறித்த வினாக்களைப்
பதிவிட்டேன். அதற்கு பெரும் வரவேற்பு
இருப்பதைக் காண முடிகிறது.
எனினும் வரவேற்பு இருப்பதாலேயே இத்தகைய
பதிவுகளைத் தொடர்ந்து எழுத முடியாது. இது
யாம் ஏற்றுக்கொண்ட பணிகளில் அடங்குவதன்று.
இது எமது வேலைத்திட்டத்திலோ நிகழ்ச்சி நிரலிலோ
கிடையாது.
TET உள்ளிட்ட தேர்வெழுதும் மாணவர் மற்றும்
ஆசிரியர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில்
இப்பதிவுகள் அமையும். எனினும் இதைத் தொடர்வது
எமக்குக் கட்டுப்படி ஆகாது. எனவே இன்றுடன்
மொழியிலக்கணப் பதிவுகளை நிறுத்திக்
கொள்கிறோம்.
தமிழ்ப்பற்று மிகுதியும் கொண்டுள்ள பலரும்
தமிழில் பிழையின்றி எழுத இயலாதவர்களாகவே
இருக்கின்றனர் என்பது கண்கூடு. இந்நிலையில்
தனித்தமிழ் என்ற பெயரில் குமுகம்
(குமுகம் = சமூகம்), மாந்தம் (humanity) போன்ற
சொற்களைப் பெய்து எழுதப்படும் மருட்சியூட்டும்
மொழிநடையால் என்ன பயன் விளையும்? எனவே
தொடர்புறுத்தும் மொழிநடையையே (communicable)
தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்று
வேண்டுகோள் விடுக்கிறேன்.
நான் தனிப்பயிற்சி மையங்களில் வெகுகாலம்
பணியாற்றினேன். அங்கு பணியாற்றும் பலரும்
அப்போதுதான் பட்டம் பெற்று வெளியில் வந்த
இளைஞர்கள். விடுமுறையின்போது சொந்த
ஊர் சென்று திரும்பும் அவர்கள் தங்களின்
வகுப்புகளை ஓரிரு நாட்கள் எடுக்குமாறு என்னைக்
கேட்டுக் கொள்வது உண்டு.
நான் மிகுதியும் X std CBSE Maths, XI CBSE Physics,
XII State board physics ஆகியவற்றையே எடுப்பது உண்டு.
Chemistry வகுப்பு எடுக்கும் இளைஞர் அவரின்
வகுப்பை எடுக்கச் சொல்வார். அதாவது பரவாயில்லை.
Biology எடுக்கும் இளைஞர் அவரின் biology வகுப்பை
எடுக்கச் சொல்வார். Biology வகுப்புகளை நான்
எடுப்பது முறையாகாது. நன்கு தயாரித்துக்
கொண்ட பிறகுதான் அந்த வகுப்பை எடுக்க
முடியும் என்றாலும், நான் பட்டம் பெறாத
பாடங்களில் வகுப்பு எடுப்பதை நான்
விரும்புவதில்லை.
ஆங்கில வகுப்பு எடுக்கும் இளைஞர்களும்
அவர்களின் வகுப்புகளை நமது தலையில்
கட்டுவார்கள்.எந்த ஒரு பயிற்சி மையத்திலும்
நிலவும் சூழ்நிலை என்னவெனில், ஒரு ஆசிரியர்
வராத நிலையில், இருக்கும் பிற ஆசிரியர்கள்
அந்த வகுப்புகளை எடுக்க வேண்டும் என்பதே.
எனவே தனிப்பயிற்சி மைய ஆசிரியர் ஒரு சகல
கலா வல்லவனாக இருக்க வேண்டும் என்பது
எதிர்பார்ப்பு. இதை உணர்ந்து கொள்ள எனக்குச்
சிறிது காலம் .பிடித்தது. உணர்ந்து கொண்டதும்
என் மீதான எதிர்பார்ப்பை வெகு சிறப்பாக
நிறைவேற்றினேன். இதன் பயன் என்னவெனில்,
இன்று இத்தனை வயதுக்குப் பிறகும், பள்ளிப்
பாடங்களில் ஆழமான பரிச்சயமும் புரிதலும்
இருப்பதுதான்.
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான். அவன்
சமூகத்திற்குப் பயன்படுவான்.
எனவே தமிழ் ஆங்கிலம் இந்தி சமஸ்கிருதம்
உள்ளிட்ட மொழிகளையும் கணிதம் அறிவியல்
போன்ற பாடங்களையும் !படியுங்கள்!
படியுங்கள்! எதையும் ஒதுக்காதீர்கள்!
படிப்பதற்கும் படிப்பிப்பதற்கும் எதிராக உள்ள
பிற்போக்குச் சக்திகளை முறியடியுங்கள்.
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக