வெள்ளி, 11 ஜனவரி, 2019

தமிழ்நாடு கூத்தாடிகளின் நாடு!
போலிப் பகுத்தறிவின் நிகர விளைவு இதுதான்!
-----------------------------------------------------------------------------------
நடிகர் அஜித்தின் புதுப்படமான
விசுவாசம் படத்தின் வெற்றிக்காக
நாக்கில் எரியும்  கற்பூரத்துடன்
கடவுளை  வேண்டும் இளைஞர் இவர்!

தமிழ்நாடு போலிப்பகுத்தறிவின் மண்.
இங்கு இப்படித்தான் நடக்கும்.

இன்னொரு இளைஞர் பெத்த தகப்பனை
பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். என்ன காரணம்?
அஜித் படம் பார்ப்பதற்கு தகப்பன் காசு
தராததால்!

ஒரு நடிகரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணும்போது  இன்னொரு இளைஞர்
தவறி விழுந்து இறந்து போனார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதபடி
தமிழ்நாட்டில் ஐந்து முதல்வர்கள் சினிமாத் துறை
ஆசாமிகள். அண்ணா, கலைஞர் என்று சினிமா
வசனகர்த்தாக்களும் மேனன், ஜானகி, ஜெயலலிதா
என்று மூன்று கூத்தாடிகளும் முதல்வராக
இருந்த அசிங்கம்  வேறு எந்த மாநிலத்திலும்
கிடையாது. பற்றாக்குறைக்கு கேப்டனும்
(கூத்தாடி விஜயகாந்த்) எதிர்க்கட்சித் தலைவராக
இருந்து அசிங்கப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு.

இதற்கெல்லாம் மூல காரணம் திராவிட
இயக்கமும் அவர்கள் முன்வைத்த போலிப் பகுத்தறிவும்தான். 
குற்றவாளி திராவிடம்தான்.

போலிப் பகுத்தறிவு இங்குதான் இட்டுச் செல்லும்!
போலிப் பகுத்தறிவுக்கு கயமையில் இருந்து
தமிழ்நாட்டை மீட்டு பொருள்முதல்வாத
மண்ணாக்குவோம்!
*************************************************

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக