சனி, 20 ஜூன், 2020

சூரிய கிரகணத்தில் முரண்பாடு! அறிவியலின் பதில்!
கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கக் கூடாது என்று
சொல்லும் அறிவியலாளர்களே, கிரகணத்தின்போது
வெளியில் வரலாம் என்று சொல்கிறீர்களே, வெளியில்
வந்தால் பாதிப்பு ஏற்படாதா? பதில் என்ன?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
1) நமது கண்ணில் ஒரு லென்ஸ் உள்ளது. இது காமிராவில்
உள்ள லென்ஸ் போன்றது. இதற்கு விழிலென்ஸ் என்று பெயர்.
இந்த விழிலென்ஸ் ஒரு ஒருங்கு குவிக்கும் லென்ஸ் ஆகும்.
அதாவது CONVERGING LENS ஆகும். எந்த ஒளியையும்
ஒரு புள்ளியில் குவிப்பதே இந்த விழிலென்சின் வேலை.

2) எனவே ஒருங்கு குவிக்கப்பட்ட ஒளியானது நமது
விழித்திரையில் படுமானால், அது பார்வையைப்
பறித்து விடும். எனவே வெறுங்கண்ணால் பார்க்கக்
கூடாது என்று சொல்ல்கிறோம்.

3) அதே நேரத்தில் கிரகணத்தின்போது வெளியில் வந்தால்
நம் உடலின் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால்
பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் நமது உடலில், கண் தவிர்த்த
பிற பாகங்களில், சூரிய ஒளியை ஒரு புள்ளியில் குவித்துத்
தரும் லென்ஸ் எதுவும் இல்லை. No converging lens.

4) நமது மார்பில் ஏதாவது லென்ஸ் உள்ளதா? நமது
வயிற்றில் ஏதாவது லென்ஸ் உள்ளதா? நமது
தொடையிலோ காலிலோ  ஏதாவது லென்ஸ் உள்ளதா?
கண்ணில் உள்ளது போல ஏதாவது converging lens
உள்ளதா? இல்லை.

5) கிரகணத்தின்போது நமது உடலில் படுகிற சூரிய
ஒளி வழக்கமான சூரிய ஒளிதான். இது எப்போதுமே
சிதறடிக்கப் பட்ட குவிக்கப்படாத ஒளிதான். அதாவது
diverge ஆன ஒளிதான். இந்த ஒளி நம் மீது பட்டால்
பாதிப்பு இல்லை.

6) கண்ணில் convergence நடக்கிறது.
உடலின் பாகங்களில் divergence நடக்கிறது.
எனவே கண்ணுக்கு மட்டும் பாதிப்பு. பிற பாகங்களுக்கு
பாதிப்பு இல்லை.

7) கிரகணத்தின்போது உள்ள சூரியன் வழக்கமான
சூரியன்தான். எப்போதும் உள்ள சூரியன்தான்.
எனவே கிரகணத்தின்போது வழக்கத்தை விட
அதிகமாக சூரியனில் இருந்து கதிர்வீச்சு எதுவும்
ஏற்படுவதில்லை.

8) அப்படியானால் ஒரு கிரகணத்தின்போது என்னதான்
நடக்கிறது? கிரகணம் அல்லாத நேரங்களில், சூரியன்
சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமையாத
(non collinear) மூன்று புள்ளிகளில் இருக்கும். அதாவது
இம்மூன்றின் நிலையிடமானது (position) ஒரு முக்கோண
வடிவில் இருக்கும்.

9) கிரகணத்தின்போது இம்மூன்றும் ஒரே நேர்கோட்டில்
வந்து விடுகின்றன. இவற்றின் நிலையிடமானது (position)
collinear pointsஆக அமைந்து விடுகிறது. அதாவது
relative position மாறுகிறது. இதுதான் கிரகணம்.

10) கிரகணத்தின்போது வெளியில் வரலாம். உணவு
உண்ணலாம். வழக்கமாகச் செய்யும் எல்லா
வேலைகளையும் செய்யலாம். சூரிய கிரகணத்தை
உரிய கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும்.
அல்லது கிரகணத்தின் reflected imageஐப் பார்க்கலாம்.
பின்ஹோல் காமிராவை நீங்களே உருவாக்கலாம்.
அதன் மூலம் பார்க்கலாம்.
***********************************************       
8)      

மருதுபாண்டியன்

கிரகணத்தின்போதும் சரி, கிரகணம்
இல்லாத நேரத்திலும் சரி, சூரியனை வெறுங்கண்ணால்
தொடர்ந்து பார்க்கக் கூடாது. இது கண் பார்வைக்கு
ஆபத்து. சூரியனை மட்டுமல்ல எந்த ஒரு
பிரகாசமான ஆற்றல்  மிக்க ஒளியையும் வெறுங்கண்ணால்
தொடர்ந்து பார்ப்பது கண் பார்வையைப் பாதிக்கும்.

இதெல்லாம் இயல்பான விஷயம்தான். என்னுடைய
இளமைக் காலத்தில் எந்தப் பிடிமானமும் இல்லாமல்
ஒரு புழுங்கல் அரிசிப் பானையை அந்தரத்தில்
ஒரு குச்சியின் பிடியில் நிறுத்தி இருக்கிறேன்.


சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில்   ஏர்  பேர் பார்த்தனர்  வரை
solar filter மூலம் நியூட்டன் அறிவியல் மன்றம்
சூரிய கிரகணத்தை 1000 பேருக்குக் காட்டியது!
பள்ளி மாணவர்கள் பலர் பார்த்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக