ஞாயிறு, 21 ஜூன், 2020

IQ அதிகமான இந்தி நடிகர் சுஷாந்த்!
இயற்பியல் ஒலிம்பியாடில் வெற்றி பெற்றவர்!
டி ஷர்ட் வாசகம் இயற்பியலின் வெளிப்பாடு!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
ஒரு டி ஷர்ட்டைப் பார்த்தேன். அதில் ஒரு வாசகம்!
படத்தைப் பாருங்கள்.
Don't be a ds^3/dt^3 என்று இருந்தது.

இந்த டி ஷர்ட்டை அணிந்திருந்தார் அண்மையில்
இறந்து போன இந்தி நடிகர் சுஷாந்த்.   
இந்த டி ஷர்ட் வாசகத்தின் பொருள் அந்த
நடிகருக்குத் தெரிந்து இருந்தது.

அந்த நடிகரைப் பற்றி விசாரித்ததில், அவர்
இயற்பியல் ஒலிம்பியாடில் வெற்றி பெற்றவர்
(Physics Olympiad) என்றும் நிறைய நுழைவுத் தேர்வுகள்
மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்றும்
பொறியியல் படிப்பை விட்டு விட்டு நடிக்க வந்தவர்
என்றும் தெரிய வந்தது.

சரி, அந்த டி ஷர்ட் வாசகத்தின் பொருள் என்ன?
பார்ப்போம்.

மதுரையில் இருந்து ஒருவர் நெல்லைக்குப் போகிறார்.
கணித மொழியில் இது ஒரு displacement ஆகும். இதை
s என்று குறிப்பிடுவோம்.

இந்த displacementஐ differentiate செய்தால் என்ன கிடைக்கும்?
Successive differentiation செய்ய வேண்டும்.
கால்குலஸ் கற்றவர்கள் அறிவார்கள்.
திசைவேகம் (velocity) கிடைக்கும்.
ds/dt = v ஆகும். இது first derivative ஆகும்.

அடுத்து மேலே கூறிய velocityஐ differentiate செய்தால்
என்ன கிடைக்கும்? acceleration கிடைக்கும். அதாவது
ds^2/ dt^2 = a ஆகும். இது second derivative ஆகும்.

தற்போது மேற்கூறிய accelerationஐ differentiate செய்தால்
என்ன கிடைக்கும்? jerk கிடைக்கும்.
ds^3/ dt^3 = j
இது 3rd derivative ஆகும்.
Jerk = rate of change of acceleration ஆகும்.

புரிந்ததா? புரிந்து கொள்ள முயலுங்கள்!
மறைந்த நடிகருக்கு எமது அஞ்சலி.
*************************************************     






          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக