சனி, 13 ஜூன், 2020

எழுவர் விடுதலையைக் கோருவது செயல்தந்திரப் பிழை!
மூவர் விடுதலையை மட்டுமே கோர வேண்டும்!
------------------------------------------------------------------------------------
ராஜிவ் கொலையாளிகள் எழுவரில் மூவர் மட்டுமே
இந்தியர்கள்; நளினியும் பேரறிவாளனும், ரவிச்சந்திரனும்.
மீதி நான்கு பேரும் ஸ்ரீலங்கா நாட்டினர்.

ஸ்ரீலங்கா நாட்டினர் நான்கு பேரையும் விடுதலை செய்யக்
கோரி, ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து இதுவரை எந்தக்
கோரிக்கையும் முன்வைக்கப் படவில்லை.

எங்கள் இலங்கை நாட்டினர் நான்கு  பேர் மீதும் கருணை
காட்டி அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று
சம்பந்தர் ஐயாவோ, வடக்கு மாகாண முதல்வர்
விக்னேஸ்வரனோ இன்னும் தமிழர் தலைவர்கள்
எவருமோ எந்தக் கோரிக்கை மனுவையும் இன்னும்
முன்வைக்கவில்லை.

அவர்களின் சொந்த நாட்டில் இருந்து விடுதலைக்கான
விண்ணப்பம் வராத நிலையில், அவர்களின் விடுதலை
எப்படி பரிசீலிக்கப் படும்? அவர்களின் விடுதலை
அஜெண்டாவிலேயே இல்லை. இதுதான் உண்மை.
இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்
துறை அமைச்சகம் ஆகிய இரண்டும் தமிழக
ஆளுநருக்கு அனுப்பிய குறிப்பில் உள்ளது.

ஏழு பேர் விடுதலை என்ற கோப்புகள் அனைத்தும்
மாற்றப்பட்டு இந்தியர்கள் மூன்று பேரின் விடுதலை
நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன்) என்பதாக
மாற்றப் பட வேண்டும். அதுதான் புத்திசாலித் தனமான
செயல் தந்திரம்.

ஏழு பேருக்கும் ஒரு சேர விடுதலை கோரினால்
ஒருபோதும் அது கிடைக்காது.
மூன்று பேருக்கு விடுதலை என்று கோரினால்
அது எப்படிக் கிடைக்காமல் போகும்? ஏனெனில்
அந்த மூவரும் நம் நாட்டவர்கள்.

முதிய வயதுடைய அற்புதம் அம்மாளை ஏமாற்றி
வருபவர்கள் விளங்க மாட்டார்கள்.
******************************************  



 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக