சனி, 27 ஜூன், 2020

மார்க்சிஸ்ட் கடசியின் இரட்டை வேடம்!
UAPA சட்டத்தை ஆதரிக்கும் கயமை!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
1) ரூபேஷ் என்பவரை மாவோயிஸ்ட் என்று கூறி
UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில்
அடைத்தது கேரள மார்க்சிஸ்ட் அரசு.

2) கேரள உயர்நீதிமன்றமானது ரூபேஷ் மீது
மார்க்சிஸ்ட் அரசு தொடுத்த மூன்று UAPA
வழக்குகளையும் செல்லாது என்று கூறித்
தள்ளுபடி செய்தது.

3) மூன்று UAPA வழக்குகள்!
மூன்றும் தள்ளுபடி!

4) தற்போது உச்சநீதிமன்றத்துக்குச் சென்று
மேல்முறையீடு செய்கிறது கேரள அரசு.
மாவோயிஸ்ட் ரூபேஷ் மீது மீண்டும் UAPA
சட்டப் பிரிவுகளைச் சுமத்த உத்தரவிடுமாறு
உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது பினராயி
விஜயனின் மார்க்சிஸ்ட் அரசு.

5) ஒருபுறம் UAPA சட்டத்தை எதிர்ப்பதாக
போலி வேஷம் போடும் மார்க்சிஸ்ட் கட்சி
தங்களின் ஆட்சி நடக்கும் கேரளத்தில் அதை
முழுவீச்சில் அமல்படுத்தி வருகிறது.

6) மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த இரட்டை வேடத்தை
ஆதரிப்பவர்கள் கயவாளிகளே!
***************************************************
   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக