கட்டாய ராணுவ சேவை வேண்டும்!
-------------------------------------------------------
உலகின் பல நாடுகளில் கட்டாய ராணுவ சேவை
உண்டு. குறைந்தது இரண்டாண்டு காலம் ராணுவத்தில்
பணியாற்றுவது கட்டாயம். Conscription என்று இதைச்
சொல்லுவார்கள். Conscription = கட்டாய ராணுவ சேவை.
பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே கட்டாய ராணுவ
சேவை விதிக்கப் படுகிறது.
இந்தியாவில் கட்டாய ராணுவ சேவை எதுவும் கிடையாது.
அரசின் கட்டாயம் இல்லாவிடினும் பஞ்சாபியர்களில்
ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக ராணுவத்தில் சேர்ந்து
விடுவார்கள்.
இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கான NCC கூட
கட்டாயம் கிடையாது. இதன் விளைவாக பள்ளி
கல்லூரிகளில் படிப்பு முடித்தவர்கள் கூட, NCCயில்
சேராமலேயே படிப்பை முடித்துவிட்டு வெளியே
வர முடியும்.
ஆக, ராணுவத்தில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்ட
குடிமக்களைக் கொண்ட இந்தியாவில், ராணுவத்தின்
அருமை உணரப் படுவதில்லை.
இந்த இடத்தில் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்.
மார்க்சிய மூல ஆசான்களில் இரண்டாமவரான பிரடெரிக்
எங்கல்ஸ் ராணுவத்தில் பணியாற்றினார் என்ற உண்மைதான்
அது. தங்களை மார்க்சியர்கள் என்று அழைத்துக்
கொள்ளும் பல மூடர்களுக்கு இந்த உண்மை தெரியாது.
எங்கல்ஸ் பிரஷ்ய ராணுவத்தில் பீரங்கிப் படையில்
பணியாற்றினார் (Artillery Prussian army). மார்க்சியப்
போலிகள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.
உலகிலேயே தன் சொந்த நாட்டு ராணுவத்தை
இகழ்ச்சியாகவும் இழிவாகவும் பார்க்கிற பார்வை
இந்தியாவில் உண்டு. குறிப்பாகத் தமிழ்நாட்டில்
நிறையவே உண்டு. இதற்குக் காரணம் ரத்தத்தில்
ஊறிப்போன அடிமைத்தனமே ஆகும்.
இந்தியாவில் இரண்டாண்டு காலம் கட்டாய ராணுவ
சேவை கொண்டு வரப்பட வேண்டும்.
******************************************************
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக