வியாழன், 25 ஜூன், 2020

குஷ்டரோகியை ஆணழகனாக வர்ணிக்கும்
போலி இடதுசாரிகளின் சீன ஆதரவுக் கட்டுரைகள்!
சீன அடிமைகள் மீது காரி உமிழும் மக்கள்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
இது கட்டுரைகள் வெளியாகும் காலம். சீனாவை ஆதரித்து
நிறையக் கட்டுரைகள் வெளியாகும். குஷ்டரோகியை
ஆணழகன் என்று சொல்லுவதைப் போல,
ஏகாதிபத்திய சீனாவை,
ஆக்கிரமிப்பு வெறி பிடித்த சீனாவை
கம்யூனிச நாடு என்று வர்ணித்து கட்டுரைகள்
வெளியாகும்.

வலதுசாரிகளாகச் சீரழிந்து போன, பெருவாரியான
இந்திய இடதுசாரிகள் இத்தகைய சீன ஆதரவுக்
கட்டுரைகளை எழுதுவதில் முன்னணியில் நிற்பார்கள்.
அதன் காரணமாகவே மக்களிடம் அம்பலமாகி
மென்மேலும் அசிங்கப் படுவார்கள்.

சீன ஆதரவுக் கட்டுரைகளில் முதல் கட்டுரையை எழுதி
வெளியிட்ட பெருமையை மருதையன் அவர்கள் பெறுகிறார்.
மகஇக அமைப்பிலிருந்து விலகிய அதே மருதையன்தான்.
என்றாலும் சீனாவைப் பொறுத்து, மகஇகவின் நிலைபாடும்
மருதையனின் நிலைபாடும் ஒன்றேதான்.

மருதையனின் கட்டுரை அவருடைய இணையதளமான
இடைவெளி என்னும் தளத்தில் (idaiveli.wordpress.com)
வெளியாகி உள்ளது. கட்டுரையின் தலைப்பு:
"இந்திய சீன எல்லை மோதலின் அரசியல்
பின்னணி-அமெரிக்க நிர்ப்பார்"; தேதி: ஜூன் 19, 2020.

மருதையனின் கட்டுரை முழுவதும் சீன ஆதரவு வெட்கம்
கெட்ட முறையில் ததும்பி வழிகிறது. மருதையனும் சரி,
அவரின் மூல அமைப்பும் சரி, தங்களின் ஆரம்ப கால
சீன ஆதரவு நிலையைச் சிறிதும் மாற்றிக்
கொள்ளவில்லை. சீனா தயாரித்து உலகிற்கு 1970களில்
வழங்கிய மூன்று உலகக் கோட்பாட்டை இன்னமும்
கடைப்பிடிக்கும் பித்துக்குளிகள் SOC முட்டாள்கள்
மட்டுமே. அதாவது மருதையனின் பழைய கூட்டாளிகள்
மட்டுமே.

பக்கத்து வீட்டுக் கோழி சமயத்தில் நம் வீட்டுக்கு
வந்து விடுவது போன்றதுதான் என்று சீன ஆக்கிரமிப்பை
மிகவும் downplay  செய்கிறார் மருதையன். கட்டுரை முழுவதும்
பார்ப்பனீயம் நுரைத்துப் பொங்குகிறது.

இத்தகைய கட்டுரைகளை எழுதி, தங்களைத் தாங்களே
அம்பலப் படுத்திக் கொள்ளும் மருதையன் மற்றும்
அவரின் பழைய கூட்டாளிகளான SOC மூடர்களுக்கு
நன்றி கூறுவோம்.
***************************************************** 

இரண்டு விஷயங்கள்.
1. மருதையனுக்கு இந்த உலகளாவிய ஸ்டார்க் மார்க்கெட்
விவகாரமெல்லாம் ஒன்றும் தெரியாது. அவருடைய
விஷய ஞானம் வெகுவாக வரம்புக்கு உட்பட்டது.

2. மாறாநிலைவாதம். சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு
என்று மூளையில் புரையோடிப்போன விஷயம்
நீங்க மாட்டேன் என்கிறது அவருக்கு.





 




     

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக