செவ்வாய், 30 ஜூன், 2020

8 நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டினால்
குறைந்தது 6 தலை விழுவதற்கான நிகழ்தகவு
(probability) என்ன? 

இது கணிதத்தில் ப்ளஸ் 2 (XII std) லெவலில்
உள்ள கணக்கு. மிக எளிய கணக்குதான்
என்றாலும் தரமான கணக்கு. சாதாரண
probabilityஐத் தாண்டி probability distribution பற்றித்
தெரிந்தால்தான் இக்கணக்கைப் போட இயலும்.
XII std Board examல் கேட்கப்படக் கூடும் என்ற
அளவிலான கணக்கு.


கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் குறைந்தது
50 கணக்குகளாவது probabilityல் கொடுத்திருப்பேன்.
அனைத்தும் ஒரு குறிப்பிட்ட eventன் நிகழ்தகவைக்
கண்டறியக் கோரும் கணக்கே ஆகும்.

இப்போது இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் கணக்கு
Probability Distribution சார்ந்தது. இதுவரை இந்தத்
தலைப்பில் கணக்கு கொடுத்தது இல்லை அல்லது
ஒரே ஒரு கணக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்.
கொடுத்து விட்டு பின்வாங்கி விட்டேன். கரணம்
யாருக்கும் புரியவில்லை.

தற்போது வெகுகாலம் கழித்து Probability Distributionல்
ஒரு கணக்கு கொடுத்துள்ளேன். Probability Distribution
என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?
அதன் பயன்கள் என்ன என்றெல்லாம் தெரியாத
யாரும் அறிவுடையோர் அல்லர்.

ஒரு Normal Distribution Curveன் படத்தைப் பார்த்தால் 
அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்து
கொள்ள வேண்டும். தற்போது கொரோனா சார்ந்து
பல்வேறு mathematical modelsஐபி பலரும் உருவாக்கி
உள்ளனர். இந்த விஷயத்தில் அதாவது கொரோனா
தாக்குதலில் Probability Distribution பெரிதும் apply ஆகும்.

Poisson distribution என்றால் என்ன என்று தெரியுமா?
சைமன் டெனிஸ் பாய்சன்  (Simeon Denis Poisson) என்பவர்
பிரெஞ்சு கணித நிபுணர்; இயற்பியலாளர். இவர் 19ஆம்
நூற்றாண்டினர்.

ஆக வாசகர்களே, Probability Distribution குறித்து
அறிந்து கொள்ளுங்கள். அது பற்றித் தெரியாதவர்கள்
நாகரிகமான குடிமக்கள் அல்லர்.




நாகரிகம் அடையுங்கள் நண்பர்களே!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பதிவுகளைப்
படிக்காத யார் எவரும் நாகரிகம் அடைய முடியாது.
நீங்கள் வேறெந்த வழியிலும் நாகரிகம் அடைய
முடியாது. எமது பதிவுகளைப் படியுங்கள்!
நாகரிகம் அடையுங்கள்!


விடையை முன்கூட்டியே கொடுக்கிறேன்!
-----------------------------------------------------------------
1) இந்தக் கணக்கின் விடை:
Required probability = 0.1445.
It is sufficient if the student gives the answer correct to 2 decimal places.

2) இந்தக் கணக்கை Binomial Distribution முறையில்
செய்ய வேண்டும். அதற்கான ஃபார்முலா
comment sectionல் கொடுத்துள்ளேன்.

3) Events ஆனவை large scaleல் வரும் இடங்களில்
Probability distribution பிரயோகிக்கப் படும். இங்கு
விடை மிகவும் தோராயமாக வருமானால்
அது பாரதூரமான தவறுக்கு இட்டுச் செல்லும்.

4) எனவே வாசகர்கள் கொடுக்கப்பட்ட பார்முலாவைப்
பயன்படுத்தி கணக்கைச் செய்து என்னுடைய விடையை
வந்து அடையவும். அல்லது என்னுடைய விடை
தப்பு என்று நிரூபிக்க வேண்டும்.

5) இந்தக் கணக்குகளை புறக்கணிக்கிறவன்
கொரோனா வந்து சாவதற்கான நிகழ்தகவு = 0.999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
*******************************************************************    








     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக