வெள்ளி, 26 ஜூன், 2020

அரசின் கால்களில் விழுந்து சோரம் போய்
ஜாமீன் பெற்ற போலிப் போராளி!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் (CAA எதிர்ப்பு)
மார்ச் ஏப்ரலில் நடைபெற்றதை நாம் அறிவோம்.

அப்போராட்டத்தில் திருமதி சபூரா சர்கர் (Zafoora Zargar)
என்ற மாணவி கலந்து கொண்டார். இவர் ஒரு குட்டி
முதலாளித்துவப் பெண்மணி. இவர் கல்லூரி
மாணவியும் கூட. திருமணமானவர். ஏப்ரல் 10ல்
இவர் கைது செய்யப் பட்டார். கைதாகும்போது
இவர் கர்ப்பமாக இருந்தார்.

இஸ்லாமியப் பெண்ணான இவர் ஜாமியா மிலியா
இஸ்லாமியா கல்லூரியின் மாணவி. CAA எதிர்ப்புப்
போராட்டத்தில் பங்கேற்ற இவர் கடந்த ஏப்ரல் 10ல்
கைது செய்யப் பட்டார்.  தற்போது டெல்லி உயர்நீதிமன்றம்
ஜாமீன் வழங்கியதை அடுத்து திஹார் சிறையில் இருந்து
ஜூன் 24, 2020 அன்று விடுதலை செய்யப் பட்டார்.
அதாவது 75 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

இவருக்கு ஜாமீன் எப்படிக் கிடைத்தது? மனித குல
வரலாற்றின் சகல இழிவுகளையும் கருக்கொண்ட
கதை அது. அருவருப்பு நிரம்பியது.

குட்டி முதலாளித்துவம் எப்போதும் புகழை விரும்பும்.
அதிலும் தகுதியற்ற புகழுக்கு அது ஏங்கிக் கிடக்கும்.
தன்னைப் பெரும் போராளியாகக் காட்டிக் கொள்ள
நினைத்த இஸ்லாமிய பெண்ணான திருமதி
சபூரா சர்கர்  ஏதோ ஒரு வேகத்தில் போராட்டத்தில்
பங்கேற்று ஓரளவு முக்கியமான பாத்திரமும் ஏற்றுப்
பிரபலம் அடைந்து விட்டார்.

போலீஸ் கைது செய்யும் என்று அவருக்குத் தெரியாது.
கைது செய்ததுமே ஜாமீன் கிடைத்து விடும் என்று
நம்பினார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.
திஹாரில் அடைத்து விட்டார்கள். 75 நாட்கள் கழித்த
பிறகுதான் ஜாமீன் கிடைத்தது.

இந்த 75 நாளிலும் ஜாமீனுக்காக அந்தப் பெண் செலவழித்த
தொகையும் பட்ட பிரயாசையும் அதிகம். 
      
ஐயா, எஜமானே, நான் கர்ப்பம், நீங்கள் ஜாமீன்
கொடுக்கவிட்டால் கர்ப்பம் கலங்கி விடும் என்ற
ரேஞ்சுக்கு ஒவ்வொரு முறையும் நீதிபதியிடம்
அவரின் வழக்கறிஞர் காலில் விழாத குறையாகக்
கெஞ்சினார்.  

கர்ப்பம் என்று இப்போது கெஞ்சும் இந்தப் பெண்மணி
ஏன் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும்?
ஒரு போராட்டத்தில் பங்கெடுத்தால், அதற்கான
பின்விளைவு நிச்சயம் இருக்கும். அந்தப் பின்விளைவைச்
சந்திக்கும் துணிவு இல்லாத கோழைகள் என்ன மயிருக்கு
போராளி வேஷம் போட வேண்டும்?

குட்டி முதலாளித்துவப் போலிக் போராளிகள் எல்லாருமே
இப்படித்தான்! புகழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்து
போலியாக ஆவேசம் அடைவார்கள். தண்டனை கிடைக்கும்
என்றவுடனே காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பிப்பார்கள்.

எத்தனையோ பேர் சிறையில் இருந்தபடியே
குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள். எனவே
கர்ப்பம் என்பதற்காக ஜாமீன் தர முடியாது என்று
திட்டவட்டமாகக் கூறி விட்டது டெல்லி உயர்நீதி மன்றம்.

கடைசியில் அரசு வழக்கறிஞரின் காலில் விழுந்தார்
இந்தப் பெண்ணின் வழக்கறிஞர். இந்தப் பெண்ணின்
ஜாமீனை மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க
வேண்டும் என்று சபூரா சர்கரின் வழக்கறிஞர்
மோடி அரசின் வழக்கறிஞரான துஷார் மேத்தாவின்
காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

இவர்களின் போராளி வேஷம் இவ்வளவுதான் என்று
உணர்ந்த துஷார் மேத்தா, அமித்ஷாவுக்கு உடனே
அலைபேசியில் பேசி அந்தப் பெண் கெஞ்சுவதைத்
தெரிவித்தார். சரி, ஒழியட்டும், ஆட்சேபிக்க வேண்டாம்
என்று அமித்ஷா உத்தரவிட்டதை அடுத்து,  அந்தப்
பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன்
வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை என்று
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதியிடம்
தெரிவித்தார். அதன் பிறகே அந்தப் பெண்ணுக்கு
நீதிபதி ஜாமீன் வழங்கினார். முன்னதாக அந்தப்
பெண்ணின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்
பட்டிருந்தது.

ஆக மோடி அரசின் கருணையினால்,
அமித்ஷாவின் கருணையினால்
அந்தப் பெண் சபூரா சர்கர் ஜாமீன் பெற்றுள்ளார்.

மானங் கெட்ட பிழைப்பு என்பது இதுதான். ஒரு விஷயத்தில்
இறங்கி விட்டால், அதுவும் போராளியாக இறங்கி விட்டால்
Come what may என்று இருக்க வேண்டும். அதாவது என்ன
வந்தாலும் சரி என்று கொள்கையில் உறுதி காட்ட
வேண்டும்.

அதற்குத் துப்பு இல்லாத கோழைகள் என்ன மயிருக்கு
வீராப்புக் காட்ட வேண்டும்? கடைசியில் அமித்ஷாவின்
கருணையினால், அவரின் காலில் விழுந்து இந்த
ஜாமீனைப் பெற வேண்டுமா? சிறையில் இருக்க
முடியாதவர்கள் எதற்காக போராளி வேஷம் போட
வேண்டும்? இன்று சாயம் வெளுத்து சந்தி சிரித்து
அசிங்கப்பட வேண்டுமா? மானத்தோடு வாழ
வேண்டாமா? மானங்கெட்டுப் போய் மலத்தை உண்பதா?
**********************************************************  
அதுவும் நிபந்தனை ஜாமீன்! இனிமேல் போராட
மாட்டேன் என்று எழுதி வாங்கிய பிறகே ஜாமீன்
வழங்கப் பட்டுள்ளது.





 
 


    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக