சனி, 27 ஜூன், 2020

அலைக்கற்றையும் சீன மொபைல் நிறுவனமும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
முற்றிலும் அபத்தமாகவும் highly misleading ஆகவும்
தங்களின் பதிவு உள்ளது என்பதை மிகுந்த
வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்குக் கொண்டு
வருகிறேன்.

1) இந்தியாவில் 4G LTE மற்றும் 4G அலைக்கற்றைகள்  
பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து
விட்டன. தொலைதொடர்பு அமைச்சராக கபில் சிபல்
இருந்தபோதே 4G பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
எனவே நாலுக்கே அதாவது 4Gக்கே நாக்கைத் தொங்கப்
போட்டுக் கொண்டு நிற்பது என்பதெல்லாம்
உண்மை அல்ல. மிகுந்த அறியாமையுடன் 
இப்படிப் பொய்களை எழுதுவது தவிர்க்கப்பட
வேண்டும்.    

2) 5G அலைக்கற்றைக்கான ஏலம் இந்தியாவில்
எப்போதோ அறிவிக்கப் பட்டு விட்டது. அதற்கான
trialsம் நடந்து கொண்டிருந்தன. ஆனால்
கொரோனா வந்து விட்டதால் ஏலமானது
அடுத்த ஆண்டுக்கு (2021க்கு) தள்ளி வைக்கப்
பட்டுள்ளது. உலகில் எங்கும் இந்தக் கொரோனா
காலத்தில் அலைக்கற்றை ஏலமோ ஒதுக்கீடோ 
நடக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

3) அடுத்து Huawei நிறுவனம் தொழில்நுட்பத்திற்கான
நிறுவனம் அல்ல. அது வெறும் மொபைல் போன்
தயாரிப்பு நிறுவனம். அவ்வளவே. ஒரு மொபைல்
போனில் என்ன இருக்கும்? வழக்கமான சாதனங்கள்
போக, அதில் ஒரு FILTER (வடிகட்டி) இருக்கும்.
தேவையில்லாத frequencyஐ வடிகட்டி, தேவையான
frequencyஐ மட்டும் தரும். இதுதான் ஒரு செல்போன்.
எனவே Huawei நிறுவனம் தொலைத்தொடர்பு
தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் அல்ல.

4) அமெரிக்காவே சீனாவிடம்தான் வாங்க வேண்டும்!!!
எதை? அப்படி எதுவும் சீனாவிடம் தொலைதொடர்பு
சார்ந்து இல்லை. சீனா தொலைத்தொடர்பைப் பொறுத்து
ஏகபோகம் (monopoly) அல்ல.

 5) அறிவியல் தொழில்நுட்ப அறிவும் இன்றைய
தொலைதொடர்பு குறித்த பரிச்சயமும்
உள்ளவர்கள் மட்டுமே அலைக்கற்றை குறித்துப்
புரிந்து கொள்ள முடியும்; எழுத முடியும்.
-------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக