காஸ்ட்ரோவுக்கு எதிராக மருது பாண்டியன்!!!!
---------------------------------------------------------------------
ஜனநாயகப் புரட்சியா அல்லது சோஷலிசப் புரட்சியா
என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தைக் கட்டமைக்க
மிகுந்த அக்கறையுடன் முயல்கிறார் தோழர்
மருதுபாண்டியன்.
நூறாண்டுகளுக்கு முன்பு பெருத்த பொருத்தப்பாடுடன்
திகழ்ந்தது மேற்கூறிய தலைப்பு. காரணம் அன்றைய
சமூக அமைப்பு அப்படி. இன்று இந்த 2020ல் தோழர்
மருது அவர்களின் தலைப்பை ஒரு பத்தாம்பசலித்
தனமான தலைப்பாக, காலத்துக்கு ஒவ்வாத தலைப்பாக
ஆக்கி விட்டது சமகாலச் சமூகச் சூழல்.
கியூபாவில் புரட்சி நடைபெற்றது எப்படி? பிடல் காஸ்ட்ரோ
புரட்சிக்கு முன் எந்தக் கட்சியில் இருந்தார்?
கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது; தலைவர்கள்
இருந்தனர்; ஆனால் பிடல் காஸ்ட்ரோ கியூபாவின்
கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லை. மாறாக அவர் ஆர்த்தடாக்ஸ்
(Orthodox party) என்னும் ஒரு பழமைவாதக் கட்சியில்
இருந்தார். நம்மூரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி
போன்றதே இந்த ஆர்த்தடாக்ஸ் கட்சி.
கியூபாவில் சமூகவியல் ஆய்வுகள் ஏதேனும் நடத்தினாரா
காஸ்ட்ரோ? வர்க்கம் ஆய்வு நடத்தினாரா காஸ்ட்ரோ?
பிரதான முரண்பாடு என்ன என்று கண்டறிந்தாரா காஸ்ட்ரோ?
புரட்ச்சியின் கட்டம் என்ன ஜனநாயகக் கட்டமா சோஷலிஸக்
கட்டமா என்று நண்பர்களுடன் விவாய்த்தம் நடத்தினாரா
காஸ்ட்ரோ? ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை.
சிலரைச் சேர்த்துக் கொண்டார். ஒரு படகில் வந்து
இறங்கினர். அதிகாரத்தைக் கைப்பற்றினர். புரட்சி
வெற்றி அடைந்தது. அவ்வளவுதான்.
புரட்சி என்பது அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான்.
அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக