வியாழன், 18 ஜூன், 2020

ராஜிவ் கொலையாளிகளின் குடும்பம்:
வாழ்க்கைச் செலவுகளும் பராமரிப்பும்!
ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் சிறந்த பணி!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------

ஏஜெண்டுகள்

எந்த நீதிபதியும் பேரறிவாளனை நிரபராதி என்று
கூறவில்லை. தடா சட்டப் பிரிவுகளின் கீழ்
வழங்கப்பட்ட இரண்டு ஆயுள் தண்டனைகளை
மட்டும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
(காரணம்: இது பயங்கரவாதச் செயல் அல்ல என்று
உச்ச நீதி மன்றம் முடிவு செய்ததால்)

பேரறிவாளன் குற்றவாளி என்பதும் கொலைச்சதியில்
பங்காளி என்பதும் மூன்று நீதிபதிகளாலும்
உறுதி படுத்தப்பட்டு உள்ளது. மூன்று நீதிபதிகளும்
ஏகமனதாக மரண தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தனர்.


அடையாள அரசியல் பிழைப்புவாதிகளின்
கயமையை முறியடிப்போம்!
கொற்றவை அவர்களைப் பாதுகாப்போம்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
கடைந்தெடுத்த பிற்போக்குச் சக்திகளால்
ஆணாதிக்க வக்கிரத்துடன் தோழர் கொற்றவை
தாக்கப் பட்டு வருகிறார். திமுகவின் சபரீசனிடம்
ரூ 10 கோடிக்கு விலை போன போலி மார்க்சிஸ்டுகளில் 
சிலர் இவ்வாறு வக்கிரத் தாக்குதல் தொடுத்து
வருகின்றனர்.

அம்பேத்கரைக் கற்காமலேயே தங்களை
அம்பேத்கரியர்களாக முன்னிறுத்தும் சில போலி 
வேடதாரிகளும் போலி மார்க்சிஸ்டுகளுடன் சேர்ந்து
கொண்டு தோழர் கொற்றவை தோழர் வசுமித்ர
ஆகிய இருவர் மீதும் தாக்குதல் தொடுத்து
வருகின்றனர்.

இது மிகவும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
அடையாள அரசியல் முன்னெப்போதையும் விட,
தமிழ்நாட்டில் தலைதூக்கி நிற்பதையும் தாக்குதல்
தொடுப்பதையும் அனுமதிக்க முடியாது.

கொற்றவை வசுமித்ர ஆகிய இருவருக்கும் துணை
நிற்பது ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரின்
கடமை ஆகும். உறுதியுடன் துணை நிற்போம்.
************************************************  
எழுவர் விடுதலை என்பது ஒருநாளும் சாத்தியமற்றது.
எழுவரில் நால்வர் வெளிநாட்டவர்; இலங்கைப்
பிரஜைகள். வெளிநாட்டவரின் விடுதலையும்
இந்தியர்களான மூவரின் விடுதலையும் ஒன்றிணைந்து
இருப்பதால்  யாருக்கும் விடுதலை கிடைக்காது.

முருகன் முதலான இலங்கைப் பிரஜைகளின் விடுதலையை
வேண்டி, இலங்கை அரசு ஏதேனும் விண்ணப்பம்
அனுப்பியதா? இல்லை. அதைப்பெற எவரேனும்
முயற்சி எடுத்துள்ளனரா?

  
 
     இல்லை. எவ்வளவு பித்தலாட்டம்?  இப்போது புரிந்ததா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக