முகநூல் என்பது குட்டி முதலாளித்துவர்களின் சொர்க்கம்.
ஒரு கட்டற்ற சுதந்திரம் (அரசை நேரடியாகப் பகைத்து
sedition chargeக்கு இலக்காகாத வரையில்) இங்கு உள்ளது.
அதனை குட்டி முதலாளித்துவர்கள் இயல்பாக ஒரு
பரிபூரணத்துடன் அனுபவிக்கிறார்கள்.
**
மார்க்சியத்தைக் கற்காத, மார்க்சியத்தைப் பிரயோகிக்காத
பல குட்டிமுதலாளித்துவர்கள் தங்களைத் தாங்களே மாபெரும்
மார்க்சிஸ்டுகளாக வரித்துக் கொண்டு பல்வேறு பதிவுகளை
இட்டு தங்களின் கு.மு அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள்.
**
எத்தகைய சமூகப் பொறுப்பும் இன்றி, பொதுவெளியில்
எழுதுகிறபோது அது படிக்கிறவர்களுக்குப் புரிய வேண்டும்
என்ற அக்கறையின்றி இவர்கள் எழுதுவார்கள். இதில் பலர்
வெறும் சொற்காமுகர்கள் (phrase mongers); வேறு பலர்
வறட்டு மேற்கோள்வாதிகள். வேறு பலர் ஒரு வரி கூட
ஒழுங்காக எழுத இயலாத மூடர்கள்.
**
ஒரு கருத்தை ஆதரிக்கிறானா அல்லது எதிர்க்கிறானா
என்று கூட அவனது பதிவில் இருந்து அறிய முடியாதபடிக்கு
"எழுதும்" கயவர்கள் பலரும் தருக்கித் திரியும் இடம்
முகநூலே. மகஇகவின் கோவன் கலைஞரைச் சந்தித்த
நிகழ்வு பற்றி எழுதும் மஜஇக ஆதரவாளரின் பதிவில்
வெறும் லெனின் மேற்கோள் மட்டுமே இருக்கும். அந்தப்
பதிவில் இருந்து கோவன் கலைஞரைச் சந்தித்ததை
ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்று எவராலும்
கண்டு பிடிக்க முடியாது.
**
இது போன்ற பதிவுகளிடம் பதிவர்களிடம் என்ன விதமான
அணுகுமுறையை மேற்கொள்வது? கைகண்ட மருந்து எது?
நமது பதில், பாசிசம்தான். ஜனநாயகம், மார்க்சிசம்,
பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய எல்லாம் பயன் தராது.
ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் தத்துவம்தான்
இங்கு பயன்படும். நான் அதைத்தான் தீவிரமாகக்
கடைப்பிடிக்கிறேன்.
**
மேற்படி பதிவுகளைப் படிக்க நேர்ந்தால், படித்தபின் காரித்
துப்பி விட்டுச் செல்ல வேண்டும். அல்லது பதிவன் மீது
பாசிசத்தை ஏவ வேண்டும். This is a very simple but effective
solution.
----------------------------------------------------------------------------------------------