செவ்வாய், 10 நவம்பர், 2015

மகள் மிசாபாரதிக்கு துணை முதல்வர் பதவி!
லாலு பிடிவாதம்! நித்திஷ் கலக்கம்!
--------------------------------------------------------------------------
தமது மகள் மிசாபாரதிக்கு துணைமுதல்வர் பதவி
கண்டிப்பாகத் தர வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ்
நித்திஷ் குமாருக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளார். இதனால்
நித்திஷ் கலக்கம் அடைந்துள்ளார்.

இத்தேர்தலில் லாலுவின் இரு மகன்களும் தேர்தலில்
வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகி உள்ளனர்.
தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரசாத் யாதவ் ஆகிய இரு
மகன்களில் மூத்த மகனுக்கும் அமைச்சர் பதவி
கேட்டு நெருக்குகிறார் லாலு.

இத்தேர்தலில் மிசாபாரதி போட்டியிடவில்லை. ஆனாலும்
அவர் மிகச் சுலபத்தில் மேலவை உறுப்பினர் ஆகி விடுவார்.
பீகாரில் மேலவை உள்ளது.

மிசாபாரதியை துணை முதல்வர் ஆக்கினால் என்ன நடக்கும்?
தன் மகளுக்குப் பதிலாக லாலுவே துணை முதல்வராகச்
செயல்படுவதுதான் நடக்கும். இதற்கு முன்பு, தம் மனைவி
ராப்ரி தேவியை பெயருக்கு முதல்வர் ஆக்கி விட்டு, லாலு தாமே
நிஜமான முதல்வராக (defacto Chief Minister) பீகாரை ஆண்டார்
அல்லவா, அதுதான் நடக்கும்.   

இதனால் நித்திஷ்குமார் மிகவும் கலங்கி நிற்கிறார்.
ஆனால் பதவிகளை அடையாமல் லாலு ஓய மாட்டார்.
********************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக