திங்கள், 2 நவம்பர், 2015

சீக்கிய இனப் படுகொலை காங்கிரசாரால் திட்டமிட்டு
நடத்தப் பட்டது. முன்னின்று நடத்தியவர்கள் அனைவருமே 
காங்கிரஸ் தலைவர்கள்தான். அதில் மற்ற யாருக்கும் 
பங்கு கிடையாது. கமல்நாத், சஜ்ஜன்குமார் ஆகியோர் 
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்ல. கமல்நாத் 2014 இறுதிவரை 
மன்மோகன்சிங்கிடம் அமைச்சராக இருந்தவர்.
**
இது குறித்த விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் மற்றும் 
நீதிமன்ற ஆவணங்கள், தீர்ப்புகள் யாவும் காங்கிரசாரை 
ஐயமின்றிச் சுட்டிக் காட்டி உள்ளன. எனவே வரலாற்றைத் 
திரிக்க இயலாது.
**
நெருக்கடிநிலைக் காலத்தில் இருந்தே பொற்கோவில் 
பலவேறு அரசியல் செயல்பாடுகளின் மையமாக இருந்தது.
நெருக்கடிநிலையின் போது, போலிசாரால் தேடப்பட்ட,
பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பொற்கோவிலில் புகுந்து 
தப்பித்தனர். டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பொற்கோவிலில் 
பதுங்கி இருந்து தப்பித்தார். இது ஒரு உதாரணம்.
**
இது இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. எனவே நடவடிக்கை 
எடுத்தார். இருதரப்பும் பழிக்குப் பழி வாங்கினர் என்பது 
வரலாறு.
**
அதே போல், நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டமன்றத்தில் 
தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே 
கலைஞர் மட்டும்தான் என்பதால்தான் திமுக ஆட்சி 
கலைக்கப் பட்டது.
**
காங்கிரசை மிஞ்சிய பாசிஸ்டுகள் இந்தியாவில் வேறு 
யாரும் கிடையாது. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் 
அந்தக் கொடுமை தெரியும்.
**
சீக்கியர்களின் கட்சி தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் 
இருந்து வருகிறது. சீக்கியர்களை கலவரத்தில் உயிரோடு 
எரித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றால் அவர்கள் 
பாஜகவுடன் கூட்டணி வைப்பார்களா? சீக்கியர்கள் 
முட்டாள்கள் அல்லர்; அவர்கள் போராளிகள்.
**
நெருக்கடி நிலைக் கொடுமைகள் என்றால் என்ன என்று 
தெரியாத ஒரு தலைமுறை இன்று இருக்கிறது. அவர்களுக்குக் 
காங்கிரசின் பாசிசம் பற்றி ஒன்றுமே தெரியாது. தெரிந்த 
எங்களைப் போன்றவர்களால் காங்கிரசை மன்னிக்க முடியாது.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக