செவ்வாய், 10 நவம்பர், 2015

லாலு நித்திஷ் ஒப்பீடு!
---------------------------------------
நித்திஷ் குமார் நல்ல அறிவாளி; சிறந்த அரசியல்
சாணக்கியர் (political strategist). சிறந்த நிர்வாகி.
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் ஆகியவற்றை
மேற்கொள்ளாதவர். தனிப்பட்ட ஒழுக்கம் உள்ளவர்.
மது, மாது, சூது, ஊழல் ஆகிய தீமைகள் இல்லாதவர்.
பெரு முதலாளிகளிடம் இருந்து பணம் வாங்குவார்;
கட்சி நடத்துவதற்காக, சுவிஸ் வங்கியில்
போடுவதற்காக அல்ல.

ஆனால் நித்திஷ் மிகக் கறாரான சுயநலவாதி. அதாவது
அரசியல் சுயநலவாதி. தன் அரசியல் ஆதாயம் ஒன்றிலேயே
குறியாக இருப்பவர். இந்தத் தேர்தலில் கூட, பாஜக எதிர்ப்பில்
அவர் லாலு அளவுக்குத் தீவிரமாக இருக்கவில்லை.
மோடியின் பொருளாதாரக் கொள்கைகளையே பீகாரில்
பின்பற்றியவர்; பின்பற்றப் போகிறவர். யாரையும் தீவிரமாக
எதிர்க்கவில்லை என்பதால் நித்திஷுக்கு எதிரிகள் குறைவு.

ஆனால் லாலு அப்படி அல்லர். ஊழல் பேர்வழி. குடும்ப
அரசியலை மிக இழிவான முறையில் மேற்கொள்பவர்.
அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், ஆகியவற்றை
பகிரங்கமாகக்  கைக்கொள்பவர். இந்துத்துவ எதிர்ப்பு,
ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பில் உறுதி மிக்கவர்.
யாதவ சாதி வெறியர். வெறி பிடித்த தலித் எதிரி.
எனவே இவருக்கு எதிரிகள் அதிகம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக