புதன், 11 நவம்பர், 2015

ஐ.ஐ.டி பார்ப்பன மடம் அல்ல! அரசு நிறுவனம்!
ஐ.ஐ.டி.யில் இட ஒதுக்கீடு உண்டு! 
முழுப்பூசணியை சோற்றில் மறைப்பதா?
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------
ஐ.ஐ.டி ஒரு பார்ப்பன மடம்  என்றும் அங்கு சூத்திரனுக்கு 
இட ஒதுக்கீடு இல்லை என்றும் ஒரு அப்பட்டமான பொய்யை 
சில தமிழ் தேசியப் போலிகளும் சில பின்நவீனத்துவக் 
கயவர்களும் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் பல 
சூத்திரப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஐ.ஐ.டி.க்களில் 
சேர்க்கும் வாய்ப்பைத் தவற விடுகின்றனர்.

SC, ST, OBC மாணவர்களுக்கு நாடெங்கும் உள்ள ஐ.ஐ.டி 
நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
SC: 15%, ST: 7.5%, OBC: 27% என்பது இடஒதுக்கீட்டின் அளவாகும்.
இங்கு OBC என்பது கிரீமி லேயர் அல்லாத OBC ஆகும்.    

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கிய SC, ST பிரிவு
மாணவர்களுக்கான இடஒதுக்கீடு (SC:15%, ST:7.5%)
இந்தியாவில் உள்ள எல்லா IITகளிலும் வழங்கப் படுகிறது.
மேற்கூறிய 15+7.5=22.5% என்ற ஒதுக்கீடு அந்தந்த மாநிலத்தின்
SC, ST மக்கள்தொகையைப் பொறுத்து மாறுபடும் என்பதும்
இது அரசமைப்புச் சட்டத்திலேயே கூறப்பட்டு உள்ளது
என்பதும் இங்கு கருதத் தக்கது. இதன்படி, தமிழ்நாட்டில்
SC, ST இட ஒதுக்கீடு 18+1=19 சதம் ஆகும்.
**
IITயில் SC, ST காலியிடங்களில் , போதிய மாணவர்கள்
தேர்வாகா விட்டால், DERESERVATION செய்யப்படுவதில்லை.
மாறாக, 50 சதம் மதிப்பெண் தளர்ச்சி (RELAXATION) வழங்கப்
படுகிறது. அப்படியும் போதிய SC, ST மாணவர்கள் தேர்வாகாமல்
இருந்தால், எவ்வளவு குறைகிறதோ அந்த எண்ணிக்கையைப்
பொறுத்து, அதாவது to the extent of shortfall, அந்த மாணவர்களுக்கு
தயார்நிலைப் பயிற்சி வகுப்புகள் (preparatory courses) நடத்தி
அவர்களைத் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் முயற்சி
மேற்கொள்ளப் படுகிறது.
**
இதன் பிறகும் மிஞ்சி விடும் SC,ST காலியிடங்கள்
பொதுப்பிரிவுக்கு  வழங்கப் படுவதில்லை. அவை அடுத்த
ஆண்டுக்கான SC,ST காலியிடங்களுடன் சேர்க்கப்
படுகின்றன(CARRIED OVER). இதனால் ஒரு குறிப்பிட்ட
ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான
இடங்களில் மாணவர்களைச் சேர்க்க நேர்கிறது.
**
சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களின் அளவு X என்று
வைத்துக் கொண்டால், LESS THAN X மதிப்பெண்கள் பெற்ற
மாணவர்களுக்கும் இதனால் இடம் கிடைத்து விடும் என்பது
வரவேற்கத் தக்கதாகும்.
**
மேற்கூறிய சலுகைகள் யாவும் SC,ST மாணவர்களுக்கு
மட்டுமே. OBC மாணவர்களுக்குக் கிடையாது. இங்கு
OBC என்பது கிரீமி லேயர் அல்லாத (Non creamy layer)
OBC மாணவர்களை மட்டுமே குறிக்கும்.
**
ஆக, இந்த அளவு இடஒதுக்கீடு IITகளில் வழங்கப் படும்
போது, IITயில் இடஒதுக்கீடு இல்லை என்று கூறுவது
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது
போன்றது.
******************************************************************               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக