ஞாயிறு, 29 நவம்பர், 2015

தேசியத் தலைவருக்கு அவர் பிறந்த நாளிலும்
மாவீரர்  நாளிலும் அஞ்சலி!
தமிழகத்தின் ஈழப் போலி ஆதரவாளர்கள்
இனிமேலாவது திருந்த வேண்டும்!
-------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------------------
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன்
அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26. இவ்வாண்டு
2015 நவம்பர் 26 அன்று தேசியத் தலைவரின்
பிறந்த நாளை திருநெல்வேலியில் கொண்டாடிய போது
அந்நிகழ்வில் பங்கேற்றேன்.

1954 நவம்பர் 26இல் பிறந்த தேசியத் தலைவர் அவர்கள்
இன்று (2015 நவம்பர் 26) உயிருடன் இருப்பாரேயானால்
அவருக்கு 62ஆவது அகவை பிறந்திருக்கும்.

தொடர்ந்து மாவீரர் நாளிலும் (நவம்பர் 27,2015)
தேசியத் தலைவர் உள்ளிட்ட மறைந்த அனைத்துப்
போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தப் பட்டது.

ஒவ்வோராண்டும் நவம்பர் 27 அன்று தேசியத் தலைவர்
அவர்கள் மாவீரர் நாள் அஞ்சலியுரை நிகழ்த்துவார்.
2009 நவம்பர் 27 முதல் இன்று 2015 நவம்பர் 27 வரை
முழுசாக ஏழு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இந்த ஏழு ஆண்டுகளிலும் தேசியத் தலைவரின் உரையைக்
கேட்க முடியவில்லை. காரணம் தேசியத் தலைவர்
அவர்கள் 2009 மே 18 அன்று வீரமரணம் அடைந்து
விட்டமை ஆகும்.

இனிமேலும் தமிழ் தேசியப் பிழைப்புவாதிகளும்
ஈழப் போலி ஆதரவாளர்களும் தேசியத் தலைவர்
அவர்கள் இறந்து விட்டார் என்ற உண்மையை மூடி
மறைக்காமலும், தேசியத் தலைவர் அவர்கள் எங்கோ
கண்காணாத இடத்தில் உயிரோடு இருக்கிறார் என்ற
இழிந்த பொய்யைச் சொல்லாமலும் மாவீரர் நாளன்று
தேசியத் தலைவர் உள்ளிட்ட வீர மரணம் அடைந்த
அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி
செலுத்த முன்வர வேண்டும்.
****************************************************************** 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக