திங்கள், 30 நவம்பர், 2015

ரஷ்ய, பிரெஞ்சு மொழிகள் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகள்
யாவும் ஆங்கிலம் உட்பட காலத்தால் பிந்திய மொழிகள்.
தமிழ் தொன்மையான மொழி. தமிழ் pre feudal காலத்து மொழி.
இனக்குழுச் சமூகமாக தமிழர்கள் வாழ்ந்த காலத்தில்
தோன்றி, நிலவுடைமைச் சமூகக் காலத்தில் உச்சக்கட்ட
வளர்ச்சியை எட்டிய தமிழ், அதன் பின்னான முதலாளிய
சமூகக் காலத்தில் வளரவில்லை. ஆனால் ரஷ்ய மொழி
ஆங்கிலம் போன்றவை post feudal காலத்தவை. எனவே நவீன
அறிவியலை அம்மொழிகளில் சொல்வது எளிது. மொழிக்கும்
சமூகத்தின் உற்பத்தி முறைக்கும் உள்ள உயிரோட்டமான
தொடர்பு குறித்த அறிவு இல்லாமல், மொழிகளின் இயக்கத்தைப்
புரிந்து கொள்ள இயலாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக