வெள்ளி, 6 நவம்பர், 2015

சோனியாவுக்கு நெருக்கமான நாராயணனை 
மோடி அரசு இன்னமும் கைது செய்யாதது ஏன்?
-----------------------------------------------------------------------------
சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர் 
நாராயணன் என்பதால், அவருக்குத் தொடர்ந்து 
பதவிகளை வழங்கிக் கொண்டே வந்தார் சோனியா.
கடைசியாக அவருக்கு மேற்கு வாங்க ஆளுநர் பதவியை 
வழங்கினார் சோனியா.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் பின் , மோடி அரசு பதவி 
ஏற்றவுடன், காங்கிரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை 
வெளியேற்ற முடிவு செய்தது. நாராயணன் மீது, 2005இல் 
இத்தாலிய நிறுவனமான அகஸ்தா-வெஸ்ட்லாண்ட் 
நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் செய்து கொண்டதில் 
உள்ள ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க மோடி அரசு 
முடிவு செய்தது. 
    
மேற்குவங்க ஆளுநராக இருந்த நாராயணனை சி.பி.ஐ 
அதிகாரிகள் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து திஹார் 
சிறையில் களி திங்க வேண்டி இருக்கும் என்று அஞ்சிய 
நாராயணன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தோடு சி.பி.ஐ விசாரணையை மோடி அரசு நிறுத்திக் 
கொண்டு விட்டது.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், நாராயணன் 
மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காற்றில் கரைந்து 
விட்டனவா? இல்லையே.

எனவே மோடி அரசு,  நாராயணனை உடனே கைது செய்து 
திஹார் சிறையில் அடைத்து, ஊழல் புரிந்தவர்களை 
தண்டிக்க வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்க்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக