திங்கள், 30 நவம்பர், 2015

உயர் அறிவியலைத் தமிழில் சொல்வது என்பதில் உள்ள
சிக்கல்கள் குறித்து பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட
என் கருத்துகள் மொழியியல் அறிஞர் திரு தெய்வசுந்தரம்
அவர்களை நோக்கி முன்வைக்கப் பட்டவை ஆகும்.
பேசப்படுகிற சிக்கல் குறித்த விவாதம் 1) அறிவியலிலும்
2) தமிழிலும் 3) மார்க்சியத்திலும் தக்க புலமையைக்
கோருகிறது. திரு தெய்வசுந்தரம் அவர்கள்  இம்மூன்றிலும்
குறிப்பிடத்தக்க அளவு புலமை வாய்ந்தவர் என்னும் தகுதி
பற்றியே அவரிடம் இச்சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்
படுகின்றன. அதற்கு அவர் சில விடைகளைத் தந்துள்ளார்.
**
நிற்க. இம்மூன்றிலும் (அறிவியல், தமிழ், மார்க்சியம்)
தக்க புலமை இன்றி, அறியாமை மிக்கு உள்ளோர்
இந்த விவாதத்தில் மேலெழும் கருத்துக்களைப் புரிந்து
கொள்ள இயலாமல் பிறழ் புரிதலுக்கு ஆளாக நேரிடும்.
அவ்வாறு பிறழ் புரிதலுக்கு இலக்காகி நிற்போர் தமது
வக்கிர மனநிலையை பிறர் மீது சுமத்த முற்படுவர்.
**
திரு தெய்வசுந்தரம் அவர்களின் கண்ணோட்டப்படி,
இப்பதிவும் இம்முகநூல் பக்கமும் Academic Lingustics
மற்றும் அறிவுசார் துறையினருக்கானது. எனவே இதில்
லாவணி பாடுவதைத் தவிர்க்க வேண்டுமாறு கோருகிறேன்.
**
லாவணியில் பெருவிருப்பம் உடையோர் என்னுடைய
முகநூல் பக்கத்துக்கு வருமாறு வேண்டுகிறேன். இதே
கருத்துக்களை அங்கு மறுபிரசுரம் செய்துள்ளேன்.
தமிழறிஞர் தெய்வசுந்தரம் அய்யா அவர்களுக்கு
சிரமம் தர வேண்டாம் என்று வேண்டுகிறேன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக