புலிகளும் ஹோமியோபதியும்
-----------------------------------------------------
1) யுத்தத்தில் இறுதி வரை ஊன்றி நின்றவர்கள் புலிகள்.
சாதியை அவர்கள் பேணி இருப்பார்களேயானால்,
ஒரு எஃகு உறுதி கொண்ட ஒற்றுமையைக் கட்டி இருக்க
முடியாது. நீண்ட காலம் யுத்தம் நடத்தி இருக்க முடியாது.
ஒரு நீதியான யுத்தம் போராளிகளின் சகல மாசுகளையும்
சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நிற்க. முகநூலில் பதிவு
இடும் குட்டி முதலாளித்துவ நபர்களை வைத்துக் கொண்டு
புலிகளை மதிப்பிட இயலாது. புலிகள் ஆயுதப் போராட்டத்தை
நடத்தியவர்கள். புலிகள் பற்றிய மதிப்பீடு என்பது அவர்களின்
மக்கள் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றிய
மதிப்பீடுதான். தோழர் ஏ.எம்.கே அவர்களின் புரட்சிகர
வழிகாட்டுதலின் கீழ் மஜஇக அமைப்பு புலிகள் மற்றும்
ஈழ விடுதலை குறித்து மிகச் சரியான கருத்துக்களைக்
கொண்டிருந்தது என்பது நாம் அறிந்ததே.
2) பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி, அதே நூற்றாண்டின்
இறுதியில் போலி மருத்துவம் என்று நிரூபிக்கப் பட்டதுதான்
ஹோமியோபதி. இது ஒரு போலி அறிவியல் ( pseudo science)
ஆகும். இதற்கும் மார்க்சிய இயங்கியலுக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. உலக நாடுகளாலும் மக்கள் சமூகத்தாலும்
தொடர்ந்து நிராகரிக்கப் பட்டு வருகிறது ஹோமியோபதி.
3) மேற்சொன்ன இரு கருத்துக்களையும் விளக்கி தனிக்
கட்டுரையோ அல்லது தொடர் கட்டுரையோ எழுதினால்தான்
கருத்து விளக்கம் பெறும். ஓரிரு வாக்கியங்களால் ஆன
பின்னூட்டத்தில் கருத்து விளக்கம் உறுதல் இல்லை.
சில நாட்களில் தனிக்கட்டுரை எழுத உள்ளேன். நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக