1 செ.மீ மழை பெய்தது என்பதன் பொருள் என்ன?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
மழை அளவுக் கருவிகள் (rain gauge) யாவும் நிலத்தில் பெய்த
மழையின் உயரத்தை மட்டுமே அளக்கும். 10 அடிக்கு 10 அடி
உள்ள உங்கள் வீட்டு முற்றம் என்றாலும் சரி, அல்லது
10 ஏக்கர் பரப்புள்ள ஒரு மைதானம் என்றாலும் சரி,
1 செ.மீ மழை பெய்தது என்றால், அந்தந்த நிலத்தில்
1 செ.மீ உயரத்துக்கு மழை பெய்தது என்றுதான் பொருள்.
அதாவது, மழையை அளத்தல் என்பது நிலத்தின் பரப்பளவைச்
சாராமல், உயரத்தை மட்டுமே அளப்பதாகும்.
1 செ.மீ மழை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

1 செ.மீ மழை பெய்தது என்று எடுத்துக் கொள்ளுவோம்.
ஒரு சதுர மீட்டர் பரப்பில் 1 செ.மீ உயரத்திற்கு மழை பெய்தது
என்று வைத்துக் கொண்டால்,ஒரு சதுர மீட்டர் பரப்பில்
10 லிட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது என்று பொருள்.
எளிய கணக்கு:
-------------------------
5 செ.மீ மழை பெய்துள்ளது என்றால், 1 ச.மீ பரப்பில்
எவ்வளவு மழைநீர் சேகரம் ஆகி இருக்கும்?
விடை:
-----------
1 சதுர மீட்டர் = 100 செ.மீ X 100 செ.மீ
எனவே, மழை அளவு = 5 செ.மீ X 100 செ.மீ X 100 செ.மீ
.............................................= 50000 கன செ.மீ
.............................................= 50 லிட்டர்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக