திங்கள், 30 நவம்பர், 2015

உயர் அறிவியலைத் தமிழில் சொல்ல இயலாமை
-------------------------------------------------------------------------------
நவீன அறிவியலில், குறிப்பாக கணினியியலில் பெருமளவு
சொற்குறுக்கங்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக,
SMPS (Switch Mode Power Supply), ATM (Asynchronous Transfer Mode),
முதலியன. தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 216 உயிர்மெய்கள்
உள்ளன. எனவே சொற்குறுக்கங்களைக் கையாள ஏதுவானதாக
தமிழ் இல்லை. இயல்பிலேயே தமிழ் அவ்வாறு இல்லை.
ஏனெனில், தமிழ் என்பது pre feudal காலத்து மொழி.
**
நவீன காலப் பேரெண்களைக் குறிக்க தமிழில் சொற்கள் இல்லை.
million, billion, trillion, quadrillion, quintillion, sextillion, septillion, octillion
என்று தொடரும் எண் வரிசையை தமிழில் கூறுவது எங்ஙனம்?
பதின்ம அளவையின் முன்னொட்டுகளான (metric unit prefix)
mega, giga, tera மற்றும் milli, micro, nano, pico, femto ஆகியவற்றுக்கு
இணையான தமிழ்ச் சொற்கள் இல்லை.
**
இன்னும் நிறையக் கூறலாம். தமிழ் வழியில் படிப்பவர்கள்
அப்படியே ஆங்கிலச் சொற்களை எடுத்தாள்கிறார்கள்.
வேதியியலில் அத்தனை தனிமங்களும் ஆங்கிலப் பெயரில்தான்
உள்ளன. வேதியியல் சமன்பாடுகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன.
5 + 3 என்பதை அஞ்சு ப்ளஸ் மூணு என்றுதான் கற்கிறார்கள்;
ப்ளஸ் என்ற சொல்தான் நான் ஆரம்பப் பள்ளியில்
படித்த காலந்தொட்டு இன்றுவரை பயன்படுகிறது.
**
எனவே உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதைத் தவிர்த்து
அறிவுபூர்வமாகச் சிந்திக்கையில் பின்வரும் முடிவுக்கு
ஒருவர் வருவது தவிர்க்க இயலாததே. அது இதுதான்:
உயர் அறிவியலைத் தமிழில் சொல்ல இயலாது.                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக