வெள்ளி, 30 ஜூன், 2017

GST குறித்து ரத்தினச் சுருக்கமாக!
-------------------------------------------------------------
1) GOODS, SARVICES என்ற இரண்டையும் ஒன்று
சேர்த்து வரிவிதிப்பது கூடாது. ஏழை நாடான
இந்தியாவில், சேவைக்கு வரி விதிப்பு தவறு.
சேவை என்பது முடிந்த அளவுக்கு இலவசமாக
வழங்க வேண்டும்.

2) ஒரே நாடு ஒரே வரி என்பது பொருளாதார
ஏற்றத் தாழ்வு மிகுந்த இந்தியாவுக்குப் பொருந்தாது.
ஜார்க்கண்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரே வரியா?
சட்டிஷ்கருக்கும் மஹாராஷ்டிராவுக்கும் ஒரே வரியா?

3) UNIFORM TAXATION இந்தியாவுக்குத் தேவையில்லை.
DIFFERENTIAL TAXATION தொடர்ந்து நீடிப்பதே
இந்தியாவுக்கு நல்லது.

4)கிராமம்-நகரம், BPL-Above BPL, முன்னேறிய
மாநிலம்-பின்தங்கிய மாநிலம் என்று
பலவாறாக ஏற்றத் தாழ்வு நிரம்பிய நாட்டுக்கு
DIFFERENTIAL TAXATION முறை மட்டுமே பொருந்தும்.

5) அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் GST உள்ளது.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது அங்கு ஏற்றத்
தாழ்வுகள் குறைவு. அங்கு GST கொண்டு வரலாம்.
அது சரியானது. அங்கெல்லாம் HAVES and HAVE NOTSக்கு
இடையிலான வேறுபாடு ஒப்பீட்டளவில் குறைவு.
இந்தியாவில் அப்படியா?

6) மும்பையில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா 
கட்டிய அம்பானியும், கூவம் நதிக்கரையில்
குடிசையில் வாழும் துலுக்காணமும் சமம்
என்று கருதி வரிவிதிப்பது இந்தியாவுக்குப்
பொருந்தாது.
*********************************************************** 

இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளின்
(BJP Cong CPM) படைப்பு GST.
அதை ஏனைய ஆளும் வர்க்கக்
கட்சிகளான மாநிலக் கட்சிகள்
அனைத்தும் ஆதரித்தன.  


GST என்பது இந்திய மக்களின் தேவை அல்ல.
மாறாக இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவை.
எனவே நாடாளுமன்றத்தில் GST எதிர்ப்பின்றி
நிறைவேறியது. தேசியக் கட்சிகளும் மாநிலக்
கட்சிகளும் GSTயை போட்டிபோட்டுக் கொண்டு
ஆதரித்தான். இன்று காட்டும் எதிர்ப்பு
போலியானது. மக்களை ஏமாற்றும் நோக்கம்
கொண்டது.

மாநிலங்களவையில் GSTயை
மார்க்சிஸ்ட்கள் ஏன் எதிர்த்து
வாக்களிக்கவில்லை?
யெச்சூரி ஆதரித்தது ஏன்?

GSTயை எதிர்த்து மாநிலங்களவையில்
காங்கிரஸ் வாக்களித்து இருந்தால்
GST புதைகுழிக்குப் போயிருக்குமே!
ஏன் காங்கிரஸ் செய்யவில்லை?


இந்த 2017இல் இந்தியா GSTக்கு தயாராக இல்லை.
It is highly PREMATURE.

இந்தியாவின் எல்லா மாநிலக் கட்சிகளும்
(முலாயம், மாயாவதி, மமதா, திமுக, அதிமுக
உட்பட) ஆளும் வர்க்கக் கட்சிகளே. இந்திய
ஆளும் வர்க்கம் = பெருமுதலாளித்துவம்)

GSTயை ஆதரித்து வாக்களிக்க முலாயம்சிங் யாதவ்
மற்றும் சிலருக்கு கையூட்டுப்பணம் வழங்கப்
பட்டது என்பதை அம்பலப் படுத்தி எழுதி இருந்தேன்.

இதை மோடிதான் கொண்டு வந்தார் என்று
நீங்கள் நினைத்தால் நீங்கள் பரிதாபத்திற்கு
உரியவர். இது BJP, Cong, CPM  கட்சிகளின் கூட்டுப்
படைப்பு.

  GST குறித்த எமது எல்லா வண்ணப் பதிவுகளையும்
படிக்கவும். அப்போதுதான் முழுச் சித்திரமும்
துலங்கக் .கிடைக்கும்.


இடக்கர் அடக்கலை மனதில் கொண்டு
இக்கட்டுரையை அப்படியே ஆங்கிலத்தில்
தந்துள்ளேன். FART என்ற  ஆங்கிலச் சொல்லுக்கு
அர்த்தம் தெரிந்தால்தான் கட்டுரை புரியும்.
நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் தெரியாத
பிறருக்கு விளக்கிச் சொல்லுமாறு வேண்டுகிறேன்.
பின்னூட்டங்கள் எழுதுவோர் இடக்கரடக்கலை
மனதில் கொண்டே எழுத வேண்டும். இது
கட்டாயம்.
 இடக்கர் அடக்கல் என்றால் என்ன என்று
தெரியாதவர்கள் அருகில் உள்ள பள்ளியின்
தமிழாசிரியரை அணுகவும்.

ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி  
4th optional subject: Biology, PHYSICS, Chemistry, Maths படித்து
இருந்தால் 4th சப்ஜெக்ட் MATHS ஆகும்.
Biology Physics Chemistry Computer science படித்தால் 4th subject
computer science ஆகும்.
**
DD என்பது இரண்டு நோக்கத்திற்காக. ஒன்று
படிவத்தின் விலையான ரூ 500க்கான DD.
படிவத்தை விலை கொடுத்து வாங்கி இருந்தால்
இந்த DD தேவையில்லை. அடுத்து SPECIAL CATEGORY
பிரிவில் SPORTS QUOTA இடங்களுக்கு விண்ணப்பிக்க
ரூ 100க்கு DD எடுக்க வேண்டும். இது நேரடியாக
ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே DDயை
விண்ணப்பத்துடன் அனுப்புவது என்ற நிலை இங்கு
எழவில்லை.
**
மீதி அனைத்தும் HELPLINEஇல் கேட்கவும்.
அடிக்கடி புதிது புதிதாக INSTRUCTION வரும்.
எனவே இணையதளங்களை அடிக்கொருதரம்
பார்க்கவும். நிறையக் கேள்விகள் வருவதால்,
தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பதில்
அளிப்பது நேரம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.     
**
4th optional subject: Biology, PHYSICS, Chemistry, Maths படித்து
இருந்தால் 4th சப்ஜெக்ட் MATHS ஆகும்.
Biology Physics Chemistry Computer science படித்தால் 4th subject
computer science ஆகும். 

வியாழன், 29 ஜூன், 2017

மருத்துவ மாணவர் சேர்க்கை
MBBS மற்றும் BDS  படிப்பில் CBSE ஒதுக்கீடு!
எத்தனை மார்க் எடுத்தால்
ஒரு CBSE மாணவனுக்கு சீட் கிடைக்கும்?
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல்  மன்றம்
--------------------------------------------------------------------------
.
தினமலர்க்காரன் என்னிடம் மன்னிப்பு கேட்டான்!
பார்ப்பன மலத்தைச் சுமந்து திரிந்த 
பார்ப்பன எதிர்ப்பு பேசும் போலிப் போராளிகள்!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) சூத்திரப் பயல்களுக்கும் பஞ்சமப் பயல்களுக்கும்
படிப்பு வராது என்றும், நீட் தேர்வில், ஒட்டு மொத்த
இந்தியாவிலும் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே
89 சதம் தேர்ச்சி பெற்றனர் என்றும் SC, ST, OBC
பிரிவினர் வெறும் 11 சதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்
என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை எழுதினான்
தினமலர்க்காரன். (தினமலர் 24 ஜூன் 2017)

2) மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார்
பெரியார். ஆனால், மானமும் அறிவும் இல்லாத
பல சூத்திர பஞ்சமர்கள், தினமலரின் இந்தப்
பொய்யை சமூகத்தில் தீவிரமாகப் பரப்பினர்.

3) நான் தினமலர் படிப்பதில்லை. இந்தச் செய்தி என்
கவனத்திற்குக் கொண்டுவரப் பட்ட அந்த நிமிடமே
இது பொய் என்று அடித்துச் சொன்னேன். சொன்னது
மட்டுமின்றி நிரூபிக்கவும் செய்தேன். ஓரிரு நாட்களுக்கு
முன்பு எழுதப்பட்ட என் கட்டுரையைப் படிக்கவும்.

4) தொடர்ந்து தினமலரைத் தொடர்பு கொண்டு,
அவர்கள் எழுதிய பொய்யைத் தோலுரித்தேன்.
கேள்வி கேட்டு விளக்கம் பெற்றனர். CBSE NEET
இணையதளத்தில்  உள்ள விவரத்தை தவறாகப்
புரிந்து கொண்டு எழுதியதாகக் கூறி என்னிடம்
மன்னிப்பும் கேட்டனர்.

5) பார்ப்பன எதிர்ப்புப் போராளிகள்(?!) என்ற
பெயரில் பலர் சமூகத்தில் வலம் வருகின்றனர்.
பலர்  அவர்களை ஆதரித்தும் வருகின்றனர்.
இந்த SO CALLED பார்ப்பன எதிர்ப்புப் போராளிகள்
எவரும் தினமலரின் இந்த அநியாயத்தைத்
தட்டிக் கேட்கவில்லை. பலரும் தட்டிக் கேட்டு
இருந்தால், தினமலர் மன்னிப்பு கேட்டிருக்கும்
அல்லவா?

6) மொத்தத் தமிழ்நாட்டிலும் நான் ஒருவன் மட்டுமே
தினமலரின் பொய்யை முறியடித்தேன். வேறு
எவரும் முன்வரவில்லை. ஒருவருக்கும் சுரணை
இல்லை.

7) உப்புப்பெறாத நாராயணன், ரிட்டயர்டு கோமாளியான 
நடிகர் எஸ் வீ சேகருடன், மகா அற்பமான
விஷயத்தில் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும்
SO CALLED போராளிகள், சமூகத்தில் சக்தி மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தும் தினமலரின் பொய்ச்
செய்தியை அம்பலப்படுத்த முன்வரவில்லை.

8) இங்கு மீண்டும் பெரியார் சொன்னதை நினைவு
படுத்துங்கள். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
என்றார் பெரியார். மானம், அறிவு என்ற இரண்டு
விஷயங்களைச் சொன்னார் பெரியார். அறிவு
இருந்தால் மட்டுமே தினமலரின் பொய்யை
பொய் என்று உணர முடியும். அதை முறியடிக்க
முடியும்.

9) சூத்திர பஞ்சம மக்கள்தொகை  முழுவதும்
தாழ்வு மனப்பான்மையில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்தத் தாழ்வு மனப்பான்மை காரணமாக,
தினமலரின் செய்தியை அப்படியே இந்தக்
கூட்டம் நம்பி விடுகிறது. தினமலர் சொன்னதை
சந்தேகப்பட வேண்டும் என்று கூட இவர்களுக்குத்
தோன்றுவதில்லை.

10) சோகத்திலும் பெரிய சோகம் என்னவென்றால்,
OBC சங்கம், SCST சங்கம் என்று சங்கம்  நடத்தும்
பொறுப்பாளர்கள் கூட, தினமலரின் இந்தப்
பொய்யை உணராமல், அதை  உண்மை என்று
நம்பி, அதை வேகமாகப் பரப்பியதுதான்.

11) தினமலரின் இந்தப் பொய்யை எந்தப்
பார்ப்பானும் பரப்பவில்லை. ஏனெனில், இந்தப்
பொய்யை எந்தப் பார்ப்பானும் நம்பவில்லை.
இது தினமலர் கிளப்பி விடுகிற பொய் என்று
ஒவ்வொரு பார்ப்பானுக்கும்  நன்கு தெரியும்.
அட்மிஷனில் OBC மாணவர்கள், பொதுப்பிரிவுக்கான
இடங்களைத் தட்டிச் சென்று விடுவதை
பார்ப்பனர்கள் அறிவார்கள்.

12) ஆக, பொய்யை எழுதியவன் பார்ப்பான் (தினமலர்)
அதைப் பரப்பியவன் சூத்திரன்.

13) பொய்யை எழுதிய தினமலர் பார்ப்பான்
நியூட்டன் அறிவியல் மன்றத்திடம் மன்னிப்புக்
கேட்டு விட்டான். இனி பொய்யைப் பரப்பிய
சூத்திரனும் நியூட்டன் அறிவியல் மன்றத்திடம்
மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதானே நேர்மை!
இல்லையேல் பார்ப்பன அடிவருடி என்றுதானே
அர்த்தம்!   

14) அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
************************************************************    

திங்கள், 26 ஜூன், 2017

மதிப்புக்குரிய ஜமாலன் அவர்களுக்கு,
--------------------------------------------------------------------
தாங்கள் பகிர்ந்துள்ள இந்தப் பதிவில்
கண்டுள்ள செய்திகள் உண்மையல்ல
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வில் ஒட்டு மொத்த இந்தியாவிலும்
முற்பட்ட பிரிவினரே 89 சதம் தேறியுள்ளனர்
என்றும் OBC, SC, ST பிரிவினர் வெறும் 11 சதம்
மட்டுமே தெரியுள்ளனர் என்றும் கூறும்
இந்தப் பொய்ச்செய்தியின் ஊற்று மூலம்   
பார்ப்பன தினமலர் ஏடாகும். 
**
பார்ப்பன தினமலரின்  பொய்ச்செய்தியை
அம்பலப் படுத்தி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
தங்களின் தகவலுக்காக அதை இங்கு தருகிறேன்.
பார்ப்பன தினமலரின் கயமைத்த தனமான
பொய்களை முறியடிக்கும் பணியில் தங்களின்
மேலான ஆதரவை வேண்டுகிறேன். நன்றி.
**
SC, ST, OBC மாணவர்களை முட்டாள்கள் என
இழிவுபடுத்தும் தினமலரின் பொய்ச்செய்தியை
உண்மை என்றே சிலர் நம்பி .விடுகின்றனர்.
 பின், அவர்களும் தினமலரின் கயமையை
முறியடிக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி, வணக்கம்.  
என் RDX கட்டுரை (5000 kg)
"முழுப்பொய்யும் முதுகெலும்பை ஒட்டு மொத்த இந்தியாவிலும்
முறிக்கும் பதிலும்" 
சற்றுமுன் 8.55 PM
வெளியிடப் பட்டு விட்டது. படியுங்கள்!வெளியாகி விட்டது

தினமலரின் பொய்ச்செய்தி இதோ! வாசிக்க
வசதியாக என்லார்ஜ் செய்யப் பட்டுள்ளது.

எது?

நேற்று  சென்னையில் நடந்த தலையங்க
விமர்சனக் கூட்டத்தில் இக் கட்டுரையில்
சொல்லப்பட்ட எல்லாக்
கருத்துக்களையும் விளக்கி ஒரு மணி நேரம்
பேசினேன்.

நல்லது. இனி அழைக்கிறோம்.
முழுப்பொய்யும் முதுகெலும்பை முறிக்கும் பதிலும்!
--------------------------------------------------------------------------------------------
நீட் தேர்வில் முற்பட்ட  வகுப்பினரே
89 சதம் தேறியுள்ளனர்;
முட்டாள்களான சூத்திரனும் பறையனும்
11 சதம் மட்டுமே தேறியுள்ளனர் என்ற
தினமலரின் முழுப்பொய்யும்
அதன் முதுகெலும்பை முறிக்கும் பதிலும்!
(5000 கிலோ RDX கலந்த கட்டுரை)
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) 89 சதம் முன்னேறிய வகுப்பினர் என்ற தலைப்பில்
ஒரு பெட்டிச் செய்தியை தினமலர் ஏடு வெளியிட்டு
உள்ளது (24 ஜூன் 2017).  ஒட்டு மொத்த இந்தியாவிலும்
நீட் தேர்வில், முன்னேறிய வகுப்பினர் (FORWARD Community)
5,43,373 பேர் தேறி உள்ளதாகவும், இது 89  சதம் ஆகும்
என்றும் தினமலர் கூறுகிறது. மேலும் சூத்திர
பஞ்சமர்களில் (OBC, SC, ST) 11 சதம் மட்டுமே தேறியுள்ளனர்
என்று தினமலர் மேலும் கூறியுள்ளது.

2) இது முழுப்பொய்! அப்பட்டமான பொய் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.

3) தினமலர் இதற்கு ஆதாரம் எதையும் தரவில்லை.
என்றாலும், தொலைபேசி மூலம் விசாரித்ததில்,
CBSE NEETஇன் அதிகாரபூர்வ இணையதளத்தில்
இச்செய்தி உள்ளதாகவும், அதைத்தான் தாங்கள்
தமிழில் எழுதியுள்ளதாகவும் விளக்கம் அளித்தது
தினமலர்.

4) CBSE NEET வெளியிட்டுள்ள அந்தச் செய்தி
கீழே காண்க:
Details of the candidates qualified the test on the basis of the
MINIMUM QUALIFYING CRITERIA of NEET-UG are as follows;-

CategoryMarks rangeNo. of Candidates
Others697-131543473
OBC130-10747382
SC130-10714599
ST130-1076018
Others – PH130-11867
OBC-PH130-107152
SC-PH130-10738
ST-PH130-10710
5) மேலே உள்ள செய்தியைப் .படியுங்கள். இதில் 
OTHERS என்ற பிரிவில் உள்ள 5,43,473 பேர் என்பது 
OBC,SC,ST,General உள்ளிட்ட அனைத்துப் பிரிவையும் 
குறிக்கிறது. அது முற்பட்ட பிரிவை மட்டும் 
குறிக்கிறது என்பது தினமலர் தற்குறியின்
முட்டாள்தனமான புரிதல். 131 மதிப்பெண்ணும்  
அதற்கு மேலும் எடுத்த அத்தனை பேரும் அதில் இடம் 
பெற்றுள்ளனர். 

6) OBC பிரிவில் 47,382 பேர் என்பது MINIMUM QUALIFYING 
MARKS எடுத்தவர்களின் எண்ணிக்கையே. 107-130 
ரேஞ்சில் மார்க் எடுத்தவர்கள் மட்டும் 47,382 பேர்.
மற்ற OBCயினர் இந்த மார்க் ரேஞ்சை விட அதிகமாக 
எடுத்தவர்கள். அதே போல, SCயில் 14,599 பேர் என்பதன் 
பொருள் என்ன? MINIMUM MARKS எடுத்த SCயினர் 
மட்டும் 14599 பேர். மற்ற SC மாணவர்கள் மினிமத்திற்கு
மேல் எடுத்தவர்கள்.

7) நன்கு கவனிக்கவும். இந்த 47382 (OBC) மற்றும் 
14599 (SC) ஆகிய எண்ணிக்கை மினிமம் மார்க் 
எடுத்தவர்கள் எண்ணிக்கையே தவிர. OBC, SC, ST 
பிரிவில் தெரியவர்களின் மொத்த  எண்ணிக்கை அல்ல.

8) OTHERS COLUMNஇல் உள்ள 543473 ,பேரில், 107-130 மார்க் 
ரேஞ்சிற்கு மேல் மார்க் எடுத்த OBC,SC,ST மாணவர்கள் 
இடம் பெற்று உள்ளனர். தினமலரின் கூற்றுப்படி,
OBC மாணவரில் ஒருவர்கூட  130  மார்க்கை விட 
அதிகமாக எடுக்கவில்லை என்று பொருள்படுகிறது.
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? 

9) இத்தகைய மினிமம் QUALIFYING STUDENTSஇன் 
 எண்ணிக்கையை CBSE தர வேண்டிய அவசியம் 
என்ன? பல்வேறு கணக்கீடுகளுக்கு இந்தப் 
புள்ளி விவரம் தேவை.

10) ஊடகத்தில் பணிபுரியும் ஒரு செய்தியாளருக்கு 
இது புரியாமல் இருக்கலாம். எனவே அவர்கள் 
சம்பந்தப்பட்ட புலத்தில் அறிவு உடையவர்களைக் 
கேட்டு, உறுதி செய்த பிறகே செய்தி எழுத வேண்டும்.
11) கடந்த ஆண்டு 2016இல் நீட் தேறியவர்களின் 
புள்ளி விவரத்தை நினைவு படுத்துகிறேன். இது 
குறித்த நாலைந்து மாதங்களுக்கு முன்பே எழுதி 
இருந்தேன். அதைப் படித்து இருந்தால், 
வாசகர்களுக்கு இப்போது சொல்வது எளிதில் புரியும்.

12) கடந்த ஆண்டு 2016 நீட் தேர்ச்சி:
--------------------------------------------------------------
பொதுப்பிரிவு (UNRESERVED)= 171329
OBC (Non Creamy Layer)= 175226 ( Unreservedஐ விட அதிகம்)
SC = 47183
ST= 15710
OBC,SC,ST மூன்றும் சேர்ந்து 2,38,119 வருகிறது. இது 
பொதுப்பிரிவை விட, 66790 அதிகம்.

13) தினமலர் கிளப்பி விட்ட இந்தக் கீழ்த்தரமான 
வதந்தியை, சூத்திர பஞ்சம வகுப்பைச் சேர்ந்த 
பல போலி அறிவுஜீவிகள், பல பின்நவீனத்துவ 
அறிவுஜீவிகள், பல போலி மார்க்சிஸ்டுகள் தங்கள் 
தலையில் தூக்கிச் சுமந்து, சமூகத்தில் நச்சுக் 
கருத்தை விதைத்தனர். அவர்களின் முகத்தில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் காரி உமிழ்கிறது.

14) இக்கட்டுரையின் சரித்தன்மைக்கும் உண்மைக்கும் 
பொறுப்பேற்று வெளியிடுகிறேன்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன் (Facebook: IlangoPichandy) 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை.
**************************************************************


                      
தமிழ்நாட்டில்
மொத்த மருத்துவ இடங்கள் 5287.
(எல்லா வகையும் சேர்த்து)
நீட் தேறியோர் 32570.
ஆறில் ஒருவருக்கு மட்டுமே
சீட் கிடைக்கும்!

இந்தப் பதிவில் உள்ள செய்தியில் அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கான இடங்களைக் கழித்தது போக
மீதியுள்ள MBBS மற்றும் BDS இடங்கள் அரசு மற்றும்
தனியார் இடங்களைக் குறிக்கின்றன.  
MBBS BDS படிப்பில் இடம் கிடைக்குமா?
எமது  இரண்டாவது கணிப்பு! (Second Approximation)
முன்னிலும் தெளிவான சித்திரம் மற்றும் கணிப்பு!
பெற்றோர்கள் மாணவர்கள் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1) மாநிலப் பாடத்திட்ட மாணவர்க்கான இடங்களை
மட்டும் இங்கு பரிசீலிப்போம். (TN State Board only)

2) தமிழகத்தில் மொத்த MBBS இடங்கள் = 2867
(அரசு மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின்
அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2203+664=2867)

3) மேற்படி, BDS இடங்கள் = 1011
(அரசு 144+ தனியார் 867=1011)

4) மொத்தம் MBBS+BDS= 2867+1011= 3878 இடங்கள்

5) இந்த 3878 இடங்களும் மாநிலப் பாடத்திட்டத்தில்
படித்த மாணவர்களுக்கு உரிய இடங்களாக
அரசு அறிவித்துள்ளது.

6) இவை போக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்
(MANAGEMENT QUOTA) MBBS மற்றும் BDS 1693 உள்ளன.
அவை கோடிக்கணக்கில் செலவு ஆகக் கூடியவை.
மேலும், இந்த 1693 இடங்களில், சிறுபான்மை சுயநிதிக்
கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான
505 இடங்கள் அனைவருக்குமானவை அல்ல. அவற்றில்
சம்பந்தப்பட்ட சிறுபான்மை இன மாணவர்கள்
மட்டுமே சேர முடியும்.  எனவே அவற்றை இங்கு
பரிசீலிக்கவில்லை.

7) இந்த 6 பத்திகளில் கூறப்பட்ட விஷயங்கள்
அனைத்தும் மாநிலப்படத்திட்டத்துக்குரிய
இடங்கள் ஆகும். இதை கவனத்தில் கொள்க.

8) CBSE மற்றும் பிற  பாடத்திட்டங்களுக்கு உரிய
இடங்களை தனியாகப் பின்னர் காணலாம்.

9) பத்தி 4இல் கூறிய 3878 இடங்களே நமது
பரிசீலனைக்கு  உரியவை.

10) இந்த 3878 இடங்களும் 69 சத இடஒதுக்கீட்டின்
பிரகாரம் பின்வருமாறு அமையும்.
அ) பொது (OPEN) = 1202 இடங்கள்
ஆ) பிற்பட்டோர் (BC) = 1163
இ) மிகவும் பிற்பட்டோர் (MBC) = 776
ஈ) தாழ்த்தப்பட்டோர் (SC) = 698
உ) பழங்குடி (ST)= 39
ஆக மொத்தம்= 3878 இடங்கள்.

11) இங்கு BC என்பது வளமான பிரிவினரையும்
(CREAMY LAYER) உள்ளடக்கியது. அதாவது வளமான
பிரிவினரும் BC ஒதுக்கீட்டுக்கு தகுதி உடையவர்கள்
என்பதை கவனத்தில் கொள்ளவும்.

12) நீட் தேர்வை பொதுப் பிரிவில் (UNRESERVED) எழுதிய
வளமான பிற்பட்டோரும் (CREAMY LAYER BC), தமிழக
அரசு மருத்துவச் சேர்க்கையில் BC ஒதுக்கீட்டுக்கு
அருகதை உடையவர்களே.

13) முஸ்லீம் அல்லாத ஒரு BC மாணவருக்கு இடம்
கிடைக்குமா? கணக்கீடு முறை பின்வருமாறு:-
அ) Non Muslim BCக்கு உரிய இடங்கள்= 26.5%
அதாவது, முஸ்லீம் BCக்கு 136 இடங்கள் போக
(1163 minus 136) = 1027 இடங்கள்.

14)இடம் கிடைக்குமா என்பதைப் பொறுத்த மட்டில்,
எமது முந்தைய கட்டுரையில், தெரிவித்த
முதல் தோராயம் (First Approximation) இப்போது
மேலும் உறுதிப் பட்டுள்ளது. இடங்கள் குறித்த
தெளிவான சித்திரத்தை அரசு தந்துள்ளது.
முஸ்லீம் அல்லாத BCக்கு 1027 இடங்கள் உள்ளன.
(MBBS+BDS சேர்த்து அரசு மற்றும் தனியாரின் அரசு
ஒதுக்கீட்டு இடங்கள்). இந்த எண்னிக்கை தமிழக
வரலாற்றிலேயே முதன் முறையாக  நான்கு
இலக்கத்தைத் தொட்டு விட்டது. 1027 இடங்கள்!

15) இது போக, ஒரு BC மாணவர் பொதுப்போட்டியில்
உள்ள 1202 இடங்களுக்கும் போட்டியிடலாம்.
அதிகமான மதிப்பெண் எடுத்த மாணவர்கள்
(400க்கு மேல்) உறுதியாக பொதுப்பிரிவில் உள்ள
இடங்களை பெற்று விடுவார்கள். எனவே BC பிரிவில்
போட்டியிடும் மாணவர்கள் 225-340 என்ற மதிப்பெண்
ரேஞ்சில் உள்ளவர்களே. இது மிகவும் பொதுவான
ஒரு அனுமானம். 

12) எனவே எமது கணிப்பு (Second Approximation):
----------------------------------------------------------------------------
தயக்கமில்லாமல் விண்ணப்பியுங்கள்.
இந்த 2017 அட்மிஷனில், OPEN plus BC இடங்களான
2365 இடங்களில் BC மாணவர்கள் உறுதியாக 1800
இடங்களைப் பெறுவார்கள் என்று அடித்துக்
கூறுகிறேன். கடந்த கால அட்மிஷன் வரலாற்றையும்
நிகழ்கால மாற்றங்களையும் கணக்கில் கொண்டு
ceteris paribus இவ்வாறு கணிக்கிறோம்.

அ) Ceteris paribus முஸ்லீம் அல்லாத BC மாணவர்
நீட்டில் 240 மதிப்பெண் எடுத்திருந்தால் கண்டிப்பாக விண்ணப்பிக்கவும். MBBS அல்லது BDS அட்மிஷன்
கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆ) தரவரிசைப் பட்டியலை தமிழக அரசு ஜூலை 14
தேதியன்று வெளியிட்ட பிறகே, இன்னும்
நெருக்கமாகக் கணிக்க முடியும். எனவே இந்தக்
கணிப்பு கடைசி நேர  மாற்றத்துக்கு உட்பட்டது.

இ) விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  கண்டிப்பாக
விண்ணப்பிக்கவும். இடம் கிடைக்கிறதோ
இல்லையோ, கண்டிப்பாக விண்ணப்பியுங்கள்.

ஈ) எமது கணிப்புகளின் CONFIDENCE LEVEL
குறைந்த பட்சமாக 87 சதம் ஆகும். எமது
கணிப்புக்கு நாங்கள் .பொறுப்பேற்கிறோம்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன் (Facebook: Ilango Pichandy)
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
இடம்: சென்னை;  தேதி: 26 ஜூன் 2017, IST 1400 hours 
**************************************************************** ,


By central rank

85 Percentile is 300 marks.

78 Percentile is 250 marks.

75 Percentile is 225 marks.

66 Percentile is 190 marks.

50 Percentile is 131 marks.

40 Percentile is 107 marks.

By calculation 400 marks equal 98 Percentile.

All India Ranks Rough

650-700. 100 candidates .
600-650. 500 - 100 ranks.
550-600. 1000-500 ranks.
500-550. 10000-1000 ranks.
450-500. 15000-10000
ranks.
400-450 30000-15000
ranks.
350-400 50000-30000
ranks.
250- 350. 200000 - 50000 ranks.
Less than 250 marks
More than 200000 ranks

All India 1090085 appeared and 611539 cleared.

TN 83859 appeared and 32570 cleared.

In TN only 740 candidates have scored above 400.

All India 30000 students have scored more than 400.

Of 1090085 appeared 30000 have scored above 400.

So as in TN of 83859 appeared the expected scoring as per All India scoring rate must be 2307.
But the actual no of candidates above 400 are only 740 which means only one third of the scoring rate of other state students. 

This may be applicable to next scoring range also ie 300 to 400 marks.
In TN these cleared students have scored between 656 and 131.

All India nearly 20000 candidates have scored between 350 and 400.

Extrapolating this to TN with 83859 candidates and assuming a scoring strength of 33% ie one third of All India scoring strength the actual expected candidates may be 1538 and the really existing candidates with this marks may be 513 only.

All India 150000 candidated have scored between 250 and 350. 

Extrapolating this to TN and considering that the available news indicate that there is a large no of students spread in this range when compared to higher marks range a scoring strength of 40% may be assumed for this mark range, we can expect 40% of expected students of 11540 calculating to 2890 students would have scored between 250 and 350 in TN

All India 98100 candidates have scored between 190 and 225.

Most of the TN students have scored in this range as per available reports.

Extrapolating the All India pattern to TN for the 83859 candidates appeared the no candidates in this mark range may be 7547.

All India 32703 candidates have scored between 225 and 250. Applying the same scoring strength to TN candidates the no of candidates in TN for a total of 83859 is 251.

So the total expected candidates between 190 and 656 are 

740+513+2890+251+7547 = 11941.

All India 174412 candidates have scored between 190 and 131. Extrapolating this to TN total the expected candidates are 13417. 

But actually 20860 candidates may be in this range as the scoring strength for higher marks are only 30 to 40 % the remaining candidates must have scored less marks as in this range.

So at the first stage the expected state rank versus marks may be as below.

Upto 400 marks 740 ranks.

350 marks. 740+513= 1253 rank.

250 mark. 740+513+2890= 4143 rank.

225 mark. 740+513+2890+251=4394 rank.

190 marks. 740+513+2890+251+7547= 11941 rank.

Of these deduce 1000 ranks which would have been scored by CBSE candidates. 

So state rank for state board students with 250 marks may come around nearly 3100.

For 225 marks the state board rank may come around 3400.

Keeping in mind that the no of seats available are only 3000 including both Govt Medical Colleges and Private Medical Colleges, the cutoff for OC may be 400 marks, for BC the cutoff may be 350 marks, for MBC 300 marks and for SC/ST 250 marks.

Of the available management seats we can assume one in five candidates can afford for seats.

So the cutoff expected may be 350 for OC, 300 for BC, 250 for MBC and less for SC/ST.

As the deemed university seats go to All India pool there will be more takers for our seats in many universities like Ramachandra, Savitha, SRM and Mahatma Gandhi from nearby states especially from Kerala. As there is only central reservation followed here the OC have got more chances to get seats and reserved category may get less than expected seats.

Overall the cutoff may be over at 10 marks below the Private Medical Colleges cutoff.

For those candidates who are not able to make up upto this stage the only options left behind are less prominant deemed universities like Vinayaga Mission, Lakshmi Narayana etc.

These are only predictions and are not scientifically based.

There may be lots of faults in this prediction.

This is only to help parents to get ready to what may happen in the next few weeks.

GOOD LUCK.
See Translation
Reply17 mins

சனி, 24 ஜூன், 2017

மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா?
அட்மிஷன் நிலவரம்  என்ன?
உண்மை நிலை விளக்கமும் எமது கணிப்பும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளின்
இடங்கள்  (Govt college seats) = 3050
2) இதில் 15 சதம் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்
(All India Quota seats)= 456
3)மீதி 85 சதம் மாநில  ஒதுக்கீட்டு இடங்கள்
(TN govt seats) = 3050 minus 456 = 2594.
4) இந்த 2594 இடங்களில், மாநிலப்படத்திட்ட
ஒதுக்கீட்டு இடங்கள் (85 சதம்) = 2203.
5) CBSE உள்ளிட்ட பிற பாடத்திட்ட ஒதுக்கீட்டு
இடங்கள் (15 சதம்) = 391
6) மேற்கூறிய அனைத்தும் அரசுக் கல்லூரி
இடங்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
இது போக,  சுயநிதிக் கல்லூரிகள் தரும்
அரசு இடங்கள் = 664.
7) இத்தகவல்கள் அனைத்தும் அமைச்சர்
விஜயபாஸ்கர் அறிவித்த  அதிகாரபூர்வமான
தகவல்கள் ஆகும்.
8) அரசு (2594+664=மொத்தம் 3258 இடங்கள்
இருந்தாலும், இங்கு அட்மிஷன் குறித்து
நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்
இடங்கள் = 2203 மட்டுமே. இந்த 2203 இடங்கள்
மட்டுமே அரசுக் கல்லூரிகளின் மாநிலப் பாடத்
திட்ட இடங்கள் ஆகும்.
9) இந்த 2203 இடங்களும்  பின்வருமாறு
இடஒதுக்கீடு முறையில் வழங்கப்படும்.
அ) திறந்த போட்டி (OPEN) 31% = 683 இடங்கள்
ஆ) NCL BC 30% = 661 இடங்கள் (NCL= Non Creamy Layer)
இ) MBC 20% = 441 இடங்கள்
ஈ) SC 18% = 396 இடங்கள்
உ) ST 1% = 22 இடங்கள்.
ஆக மொத்தம் = 2203 இடங்கள்.
10) அட்மிஷன் கிடைக்குமா என்று கணக்கிடும் முறை:
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மாணவருக்கு அட்மிஷன் கிடைக்குமா என்று
பரிசீலிப்பதற்கு அ) அவரின் நீட் மதிப்பெண்
ஆ) அவரின் சாதிக்குரிய (community) ஒதுக்கீடு
ஆகிய இரண்டு காரணிகளையும் கணக்கில்
எடுக்க வேண்டும்.

உதாரணமாக,
ஒரு BC மாணவர் என்றால், மொத்தமுள்ள 2203 இடங்கள்,
அவரைப் பொறுத்து, 1344 இடங்களாகச் சுருங்கி
விடும். அதாவது MBC/SC/ST இடங்களான 859
இடங்களுக்கு  அவர் போட்டியிட இயலாது.

மேலும், BC க்குரிய 30 சதம் இடங்களில் 3.5 சதம்
முஸ்லீம் மதத்தினருக்குச் சென்று விடும்.
அதாவது, BCக்குரிய இடங்களான 661இல்
முஸ்லிம்களுக்கு 77 இடங்கள் ஒதுக்கப்
படுகின்றன. இது போக, மீதியுள்ள 584 இடங்களில்
மட்டுமே (26.5%) முஸ்லீம் அல்லாத ஒரு BC
போட்டியிட இயலும். கணக்கிடும்போது 
இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு BC என்று குறிப்பிடும்போது, விதிவிலக்கின்றி
அது எல்லா BCயினரையும் குறிக்காது. NCL BC
எனப்படும் 'முன்னேறிய பகுதி அல்லாத' மற்ற
BCயினரை மட்டுமே குறிக்கும். உயர் வருமானம்
உள்ள BCயினருக்கு BC ஒதுக்கீடு கிடையாது.
அவர்கள் பொதுப்போட்டிக்குரிய இடங்களில்
மட்டுமே போட்டியிட இயலும்.

நீட் தேர்வில் 400 மதிப்பெண்ணுக்கு மேல்
எடுத்தவர்கள் மொத்தம் 740 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு ceteris paribus உறுதியாக இடம்
கிடைக்கும். இவர்களுக்கு கிடைத்த இடம்
போக, மீதியுள்ள இடங்களை 400க்கு குறைவாக
எடுத்தவர்கள்  வாய்ப்பு உள்ளது.

எமது முதல்கட்டக் கணிப்பு!
-----------------------------------------------------
1) பொதுவாக, ceteris paribus,  நீட்டில் 225 மதிப்பெண்
அல்லது percentile score 75 உள்ள மாணவர்களுக்கு
அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் அரசு
 ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
2) 300 மதிப்பெண் அல்லது percentile score 85 உள்ள
மாணவர்களுக்கு அரசுக் கல்லூரி இடங்கள்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.
3) இக்கணிப்பு தோராயமானதே. மாநில அரசு
வெளியிடும் தரவரிசைப் பட்டியல் வந்த
பின்னரே, இன்னும் நெருக்கமான தோராயத்துடன்
(still closer approximation) கணிக்க இயலும்.
4) இது ஒரு OPTIMISTIC கணிப்பு.

தோழமையுடன்,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை.

பின்குறிப்பு: 1) இங்கு மாணவர் என்பது மாணவியர்
மற்றும் 3ஆம் பாலினரையும் குறிக்கும்.
2) CETERIS PARIBUS = other things remaining constant.
(நீதிமன்றத் தீர்ப்புகளாலும் பிற காரணிகளாலும்
நிலைமை  மாறக்கூடும்).
********************************************************** 

தமிழ்நாட்டில் நீட் எழுதியோர் = 83859
தேர்ச்சி பெற்றவர்கள்= 32570
தேர்ச்சி சதவீதம்=38.83
தமிழகத்தில் முதல் மதிப்பெண் =655
(மாணவர் முகேஷ் கன்னா)
---------------------------------------------------------
நீட் தேர்வை நேரடியாகவோ மறைமுகவோ
எதிர்ப்பது என்பது கல்வித் தந்தைகளின்
கொடிய சுரண்டலுக்கு சேவை செய்யும் பணி.
நீட் தேர்வு எதிர்ப்பு என்பது சங்கராச்சாரி
ஜெயேந்திரர் தலைமையிலான ஜேப்பியார்,
பச்சமுத்து, பங்காரு அடிகளார் இன்ன பிற
கல்வித் தந்தைகளின் நலனுக்காக,
ஜெயேந்திரரால் கட்டமைக்கப் பட்டது.
நீட்டை எதிர்ப்பவர்கள் தனியார்மயத்தின்
கைக்கூலிகளாகச் செயல்படுகிறார்கள்
என்பதே உண்மை.
**
அடுத்து, இந்தியாவின் 29 மாநிலங்களில்
28 மாநிலங்களில் நீட் தேர்வை ஏற்றுக்
கொண்டுள்ளனர். அங்கெல்லாம் யாருக்கும்
சமூகப் பார்வை இல்லையா?
**
இது கல்வியியல் சார்ந்த புலம் சார்ந்த நுட்பங்களை
அறிந்து இருந்தால் மட்டுமே பிடிபடக் கூடிய
விஷயம். "நூற்றாண்டுத் தனிமை" என்ற நாவலை
நான் விமர்சித்தால், அந்த விமர்சனம் எந்தத்
தரத்தில் இருக்குமோ, அதே தரத்தில்தான்
நீட் பற்றிய உங்கள் பார்வை இருக்கிறது.
அப்படித்தான் இருக்க இயலும். இதில் தவறில்லை.
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர்; நாவாயும் ஓடா நிலத்து.

லட்சுமி மணிவண்ணன் அவர்கள் கவனத்திற்கு,

1) நீட் மதிப்பெண் மட்டுமே சேர்க்கைக்கு உதவும்.
2) இந்த அரசாணையில் மாநிலப்படத்திட்ட
மாணவர்களுக்கு (TN state board) 85 சத இடம்
ஒதுக்கப் படுகிறது. அரசாணை இன்னும்
கிடைக்கவில்லை. பத்திரிக்கைச் செய்திகளை
வைத்துக் கூறுகிறேன்.


மண்ணுக்கேற்ற இந்துத்துவக் கட்சி
(palatable hindutva) அதிமுக.
பாஜகவை
ஆதரிக்கக் கூச்சப் படுவோர்
ஆதரிக்கலாம்.

தடித்த எழுத்தில் உள்ள இந்தப் பதிவு ஒரு
கட்டுரை அல்ல.இது ஒரு புள்ளிவிவரத்தைத்
தரும் ஒரு பதிவு. எந்த மாணவரையும் பற்றி
இந்தப் பதிவில் குறிப்பிடவில்லை. நிற்க.
நீட் தேர்வு குலாம் நபி ஆசாத் காலத்தில்
2010இல் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து
வழக்குத் தொடுத்த அத்தனை பேரும்
(100க்கும் மேற்பட்ட வழக்குகள்) தனியார் சுயநிதிக்
கல்வித் தந்தைகள்.
**
நீட் எதிர்ப்பு என்பது
தனியார்மய ஆதரவே. Physics Chemistry Biology
பாடங்களை ஒரு மாநிலம் என்னும் குறுகிய
எல்லையில் யாரும்  அடைக்க முடியாது. அவை
universal தன்மை கொண்டவை. அவற்றுக்கு
உள்ளுர்த்தன்மை கிடையாது. எனவே கற்காத
பாடம் என்பதெல்லாம் அபத்தம். தமிழ்நாட்டின்
கல்வித்தரம் சீரழிந்து இருப்பது மட்டுமே குறை.
அதை எதிர்த்துப் போராடாமல், ஆளுங்கட்சிக்கு
முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதில்
என்ன சமூகப் பார்வை இருக்க முடியும்?
**
எவ்வளவுதான் புத்திசாலித்  தனமாகவோ,
புரட்சிகரமாகவோ வாதிட்டாலும், நீட் எதிர்ப்பின்
பயனை அறுவடை செய்யப் போகிறவர்கள்
ஜெயேந்திரர் தலைமையிலான கல்வித்
தந்தைகளே. தங்களின் வாதம் ஜெயேந்திரருக்கே
ஆதாயம் சேர்க்கும். குளத்தில் கோபித்துக்
கொண்டு கால் கழுவாமல் போவதில் என்ன
சமூகப் பார்வை இருக்க இயலும்?      



சுயநிதிக் கல்வித் தந்தைகளுக்கு கொள்கைப்பற்றோ
கட்சிப்பற்றோ கிடையாது. ஜெயேந்திரர் தலைமையில்
நடைபெற்ற (முன்பு நடந்தது) நீட் எதிர்ப்புக்
கூட்டத்தில் எத்தனை திராவிடக் கல்வித் தந்தைகள்
பங்கேற்றனர் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது.
ஜெயேந்திரர் அகில இந்திய அளவில் செல்வாக்கு
உள்ளவர் என்பதால்தான் பச்சமுத்து, ஜேப்பியார்,
பங்காரு எல்லோரும் அவர் தலைமையை ஏற்றனர்.
இன்று சில திராவிட மற்றும் அதிசூத்திர கல்வித்
தந்தைகள் ஜெயேந்திரரைத்தான் நம்பி
இருக்கின்றனர். இதுவே உண்மை. ஜெயேந்திரரை
விமர்சிப்பது துவேஷம் ஆகாது.

1) தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் =38.83 சதம். 32570 பேர்
தேறி உள்ளனர்.
**
2)தமிழகத்தில் உள்ள இடங்களை
தமிழக அரசு நிரப்பும். அந்தந்த மாநில இடங்களை
அந்தந்த மாநில அரசுகள் நிரப்பும்.
**
3) தமிழகத்தில் நடப்பில் உள்ள 69 சத ஒதுக்கீடு
பிரகாரம் இடங்கள் நிரப்பப் படும்.
**
4) தமிழக இடங்களைப் பெற ஒரு மாணவனுக்கு
இருக்க வேண்டிய தகுதி: அம்மாணவன் தமிழகத்தில்
வசிக்க வேண்டும் (domicile status of Tamilnadu).
**
5) தமிழ்நாட்டில் தமிழக அரசுக்கு உரிய இடங்கள்
3000 என்று வைத்துக் ,கொண்டால், இந்த 3000
இடங்களும் தமிழகத்தில் வசிக்கும் மாணவர்களைக்
கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.
**
6) தற்போது தமிழக அரசின் அரசாணைப்படி, இந்த
3000 இடங்களில் 2415 இடங்கள் ஸ்டேட் போர்டு
மாணவர்களுக்கும், மீதி 585 இடங்கள் CBSE
மாணவர்களுக்கும் வழங்கப்படும். (அதாவது 85 சதம்
மாநிலப் பாடத்திட்ட  15 ;சதம் CBSE மற்றும் பிற
பாடத்திட்ட ஒதுக்கீடு). 


ஏற்கனவே இதற்கு முன்பு நீட் குறித்து பல கட்டுரைகள்
எழுதி இருக்கிறேன் அவற்றையும் படிக்கலாம்..

வெள்ளி, 23 ஜூன், 2017

சசிகலா புரட்சிக்காரி!
பாஜகவை வளர விடாமல்
அதிமுக தடுக்கும்
என்று சொன்னவர்களே 
RSS வேட்பாளரை அதிமுக  ஆதரிப்பதற்கு
என்ன பதில்?

ஜேடன்ஹிரர்

EPS: ஸ்வாமி, டெல்லிக்கே போய்
ஆதரவு குடுத்துட்டேன், திருப்திதானே!
ஜெயேந்திரர்: பேஷ் பேஷ்
நன்னா பண்ணிண்டடா பழனி.
பன்னீரும் தினகரனும் கூட
ப்ரமாதப் படுத்தீட்டா!பேஷ்!   

அதிமுகவை பாஜக மிரட்டவில்லை!
முந்தானையைச் சரிப்பவளை
கற்பழிக்க வேண்டிய
அவசியம் என்ன?

LOG IN செய்து, PERCENTILE என்ன என்று பார்க்கவும்.
தேர்ச்சி என்பது மார்க்கைப் பொறுத்தது
அல்ல. PERCENTILE ஐ பொறுத்தது. SC/ST/OBC க்கு
40th percentile பிரகாரம் 107 மார்க் எடுக்க வேண்டும்.
அப்போதுதான் தேர்ச்சி (qualify) பெற முடியும்.
பொதுப்பிரிவு என்றால் 50th percentile பிரகாரம்
131 மார்க் எடுக்க வேண்டும். இதற்குக் குறைவான
மார்க் எடுத்திருந்தால் தேர்ச்சி பெறவில்லை
என்று பொருள். கடந்த ஆண்டு 2016இல் SC/ST/OBCக்கு
தேர்ச்சி மதிப்பெண் 118ஆக இருந்தது.தற்போது
2017இல் 11 மார்க் குறைந்துள்ளது.      

அவர் என்ன மார்க் எடுத்துள்ளார்? PERCENTILE அல்ல,
மார்க் என்ன?

அவர் தேர்ச்சி பெற்று விட்டார். இது உறுதி. தமிழக
அரசு ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிடும்.
அது வெளிவந்த பின்னால்தான்  சீட் கிடைப்பது
பற்றி உறுதியாகச் சொல்ல முடியும்.






Language was a big issue in NEET 2017 with many candidates claiming that vernacular papers were easier. The number of candidates registered for different languates in NEET 2017 were: English, 80.16 %; Hindi, 10.59 %; Telugu, 00.15 %; Assamese, 00.33 %; Gujarati, 04.20 %; Marathi, 00.08 %; Tamil, 01.33 %; Bengali, 03.02 %; Kannada, 00.06 %; Oriya,00.03 %; English+Hindi 90.75 %

வியாழன், 22 ஜூன், 2017

1) Proton புரோட்டான் முதன்மம்
2) Neutron நியூட்ரான் நடுமம்
3) electron எலக்ட்ரான் மின்மம்
4) hadron  ஹாட்ரான் கடுமம்
5) lepton லெப்டான் மென்மம்
6) nucleon நியூக்ளியான் உள்மம்
7) photon ஃபோட்டான் ஒளிமம்
8) positron பாசிட்ரான் நேர்மம்
9) neutrino  நியூட்ரினோ நடுமி
10) meson மேசான் இடைமம்
11) baryon பாரியான் வலுமம்   

புதன், 21 ஜூன், 2017

நிகழ்ந்தது யவனப் படையெடுப்பே தவிர
ஆரியப் படையெடுப்பு அல்ல!
அலெக்ஸ்சாண்டர், செல்யூக்கஸ் நிகேடாரின்
படையெடுப்பும், ஆட்சியும் அவற்றின் தாக்கமும்!
(ஆரியர் வருகை குறித்த கட்டுரை: பகுதி-4)
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
உலகத்தின் கூரை எது என்ற கேள்விக்கு
'பாமீர் முடிச்சு' என்று விடையளித்தது நினைவு
வருகிறதா? சிறு வயது பூகோளப் பாடத்தில் படித்தது
நினைவிருக்கிறதா?  (The PAMIR KNOT is the roof of the world).

மத்திய ஆசியா முழுவதும் பெரும் மலைகள் உண்டு.
தியான்ஷன் மலை, காரகோரம் மலை, இந்துகுஷ் மலை
உள்ளிட்ட பெரும் மலைத் தொடர்கள் பாமீர் முடிச்சில்
இருந்து பிரிந்து செல்கின்றன. இமயமலை வரைக்கும்
நீள்கின்றன.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே இந்தியத்
துணைக் கண்டத்தின் மீது அந்நியப் படையெடுப்பு
நடந்தது.இது யவனப் படையெடுப்பு .ஆகும். யவனர்
என்பது கிரேக்கரைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.

கி.மு 326ஆம் ஆண்டில், அதாவது இன்றைக்கு
சற்றேறக் குறைய 2350 ஆண்டுகளுக்கு முன்பே
மகா அலெக்ஸ்சாண்டர் சிந்து சமவெளியின் மீது
படையெடுத்தார்.அலெக்ஸ்சாண்டர் மாசிடோனியா
மன்னர். மிகப்பெரும் ராணுவப் படையெடுப்பு அது.

சிந்து சமவெளி நெடுகிலும் நிறைந்திருந்த
இந்தியப் பழங்குடி இன மக்களின் அரசுகளைப்
போரில் வென்றார். வடமேற்கு இந்தியா முழுவதையும்
கைப்பற்றினார். தமது ஆட்சியை அவர் இங்கு
ஸ்தாபிதம் செய்தார். பல தலைமுறைகளாக
யவனர்களின் ஆட்சி சிந்து சமவெளிப் பகுதியில்
நீடித்தது. இன்றைய குஜராத் வரை
அலெக்ஸ்சாண்டரின் யவனப் பேரரசு பரவி இருந்தது.

யவனர் ஆட்சியின் விளைவாக, இங்கு இனக்கலப்பும்
மொழிக்கலப்பும் நிகழ்ந்தது. இங்கிருந்த சுதேசிப்
பண்பாடு யவனர்களால் அழிக்கப் பட்டது.

என்றாலும் அலெக்ஸ்சாண்டர் விந்திய மலையைத்
தாண்டி, தென்னிந்தியாவுக்குள் நுழையவில்லை;
நுழையவும் இயலவில்லை. இருப்பினும், தமிழகத்தை
யவனர்கள் கைப்பற்றும் அபாயம் உள்ளது என்ற
கருத்தின் மீது சாண்டில்யன் 'யவனராணி' என்ற
வரலாற்று நாவலை எழுதினர். சுமார் 600+600=1200
பக்கங்களைக் கொண்ட இரண்டு பாகங்களால்
ஆன பெரும் நாவல் அது.

என்னுடைய பதினெட்டு வயதில்  யவனாராணியை
முதலில் படித்தேன்.அதன் பின்னரும் பத்தாண்டு
காலம் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டே
இருந்தேன். யவனத்தில் டைபீரியஸ் சீசர் காலத்திலும்
தமிழகத்தில் கரிகால் பெருவளத்தான் காலத்திலும்
கதை நடப்பதாக சாண்டில்யன் அமைத்து இருப்பார்.

அலெக்ஸ்சாண்டர் பாபிலோனில் இறந்தார்.
அவருக்குப்பின், அவரின் படைத்தளபதியாக
இருந்த செல்யூக்கஸ் நிகேடார் பஞ்சாப் பகுதிகளை
வென்றார்; ஆட்சி செய்தார். இவையெல்லாம்
பள்ளிப் பாடங்களில் சொல்லித் தரப்பட்டுள்ளன.

ஆக, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
யவனப் படையெடுப்பே தவிர, கற்பனையான
ஆரியப் படையெடுப்பு இல்லை. வரலாற்றை
பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்வது என்ற
கோட்பாட்டையே அறிந்திராத அறியாமையும்,
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியைப் போற்றும்
அடிமைச் சிந்தனையுமே ஆரியப் படையெடுப்பு
என்ற பொய்யான கட்டுக்கதையை தோளில்
தூக்கிச் சுமந்து கொண்டு இருக்கின்றன.

ஆரியப் படையெடுப்பு என்பது பொய் என்று டாக்டர்
அம்பேத்கார் முன்வைத்த ஆய்வு முடிவுகளை
இன்றுவரை எவரும் மறுக்கவில்லை; எவராலும்
மறுக்க இயலவில்லை.

ஆரியர் என்றோ  திராவிடர் என்றோ எந்த
மனித இனமும் (race) கிடையாது. ஆரிய இனமும்
பொய்! திராவிட இனமும் பொய்! ஆரியம் திராவிடம்
இரண்டுமே வெறும் மொழிக்குடும்பங்கள்.

வில்லியம் ஜோன்ஸ், கால்டுவெல் பாதிரியார்
ஆகிய இரு ஆங்கிலேய காலனி ஆதிக்கவாதிகள்
முறையே ஆரிய திராவிட இனக் கோட்பாட்டை
உருவாக்கினர். இருவருமே அறிவியலுக்கு எதிராக
மொழிக் குடும்பங்களை மனித இனமாக
வரையறுக்கும் பாரிய தவறைச் செய்தனர். பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு
உகந்த கோட்பாடுகளாக இவை இருந்தமையால்,
அவர்கள் இக்கற்பனைக் கோட்பாடுகளை
அரச அதிகாரத்தின் மூலம் மக்களிடம் எளிதாகப்
பரப்பினர்; மக்களை நம்ப வைத்தனர்.

அறிவியல் ஆதாரங்கள் குறித்து!
----------------------------------------------------------
GENETICS என்பது பெரிதும் அறிவியல். ஜீன்களில்
உறைந்துள்ள மரபியல் தகவல்களை
வெளிப்படுத்துதல் (decoding) என்பது முற்றிலும்
அறிவியல் தன்மை வாய்ந்தது.

ஆனால் POPULATION GENETICS என்பது  துல்லியமான
அறிவியல் அல்ல. அது தோராயங்களையும்
அனுமானங்களையும் கொண்டது. கிடைத்த
அறிவியல் தரவுகளைக் கொண்டு கால நிர்ணயம்
செய்வது என்பதில் அனுமானங்களே அதிகம்.

திரு ஜோசப் தமது கட்டுரையில், கிடைத்துள்ள
Y DNA அறிவியல் தரவுகளைக் கொண்டு தவறான
வியாக்கியானம்  மூலம் அபத்தமான முடிவுக்கு
வருகிறார். வெண்கல யுகக் காலத்தில், மத்திய
ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் ஜீன்களின்
வரத்து ( inflow of jeans) இருந்தது என்ற அவரின்
அனுமானத்தில்  உள்ள கால நிர்ணயம் முற்றிலும்
தவறானது.

வாசகர்கள் நன்கு கவனிக்க வேண்டும். Y DNA
ஆய்வுகள் அறிவியல் ஆகும் (PURE SCIENCE).
அதை மரபியல் விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
அதில் குற்றம் கூற முடியாது. ஆனால்
அந்த ஆய்வுகளைக் கொண்டு வியாக்கியானம்
செய்யப்படும் கால நிர்ணயத்தில் அறிவியல்
இல்லை. அனுமானமே ஆட்சி செய்கிறது.
-------------------------------------------------------------------------------------------
இன்னும்  வரும்!
************************************************************

1) புராணம் என்ற சொல்லுக்கு பழமையானது என்று
பொருள். ஆக புராணம் என்பது தொன்மம். மனித
சமூகத்தின் அறிவு குழந்தைப் பருவத்தில்
இருந்தபோது, அக்கால மனிதர்களால் இயற்றப்
பட்டவையே புராணங்கள். அவை அக்கால அறிவு
வளர்ச்சியின் வெளிப்பாடுகள். பூமி உருண்டையானது
என்ற உண்மை சில பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே தெரிய வந்தது. அதற்கு முன்பு பூமி
தட்டையானது என்றே கருதப் பட்டது. எனவே
தட்டையான பூமியை ஒருவன் பாயாகச் சுருட்டிக்
கொண்டு ஓடினான் என்ற கதை எழுதப்பட்டது.
**
2) உலகம் முழுவதும் உள்ள புராணங்கள் ஒரே
மாதிரியாகத்தான் இருக்கும். இந்தியப் புராணங்களும்
பலவேறு அம்சங்களில் உலகின் பிற புராணங்களை
ஒத்தவையே.



 


அவர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள்.
ஆப்பிரிக்காவில் இருந்தோ அல்லது வேறு
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. இந்தியாவில்
பூர்வ குடிகளே இல்லை என்றுதான் கட்டுரையாளர்
டோனி ஜோசப் எழுதி இருக்கிறார். அதை மறுத்தே
எமது கட்டுரைகள் எழுதப் படுகின்றன.

இன்று உலகில் வாழும் 750 கோடி மக்களின்
DNAவை ஆய்வு செய்தால் 99.99 சதம் ஒன்றாகத்
தான் இருக்கும். ஏனெனில் ஒற்றுமைகளே அதிகம்;
வேற்றுமைகள் குறைவு. எனவே பேரளவிலான
சாம்பிள்களே ஓரளவு நெருக்கமான  தோராயத்தைத்
தரும்.
**
ஒரு பரிசோதனை முயற்சி ( a trial) என்ற
அளவில்தான், மிக்க குறைவான அளவு
சாம்பிளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்
பட்டன. இந்த ஆய்வு  முடிவுகள் எவ்வித
திட்டவட்ட நிரூபணத்தையும் (conclusive proof)
தர இயலாது. மேலும் உறுதி செய்யும் பிற
சான்றுகள் (corroborative evidence) தேவை. மானுட
மரபியல் குறித்து இதுவரை, இந்த நிமிடம் வரை
சொல்லப்பட்ட அனைத்தும் தோராயங்களே!
அனுமானங்களே!  எல்லாமே hypothesis தான்.
accepted truth அல்ல.

ஆரியர் வருகை குறித்த
இதுவரை நான் எழுதிய
3 கட்டுரைகளை
படிக்காவிட்டால் ஏற்படும்
அறிவு இழப்புக்கு
நான் பொறுப்பல்ல! 
     



குணா குணா கட்டுரை
-------------------------------------


கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்துக்குசு மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப்போல் ஒப்புவிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்துவந்து சிந்துவெளி பகுதிகளின்மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான். இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக்கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் ‘கரோத்தி’(Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.
பாக்கித்தானிலிருக்கும் பலுச்சித்தானில் போலன் கணவாய்க்கு அருகில் ‘மெஃகர்கர்’ (Mehrgarh) எனும் நகரம் இருக்கிறது. அங்கு தோன்றிய ‘மெஃகர்கர் நாகரிகம்’, கி. மு. 7000க்கும் கி. மு. 3200க்கும் இடையில் சிந்து ஆற்றின் மேற்குப்புறத்தில் விளங்கிய உழவு நாகரிகமெனச் சொல்லப்படுகிறது. ‘மழவர்கள்’ அல்லது ‘மள்ளர்கள்’ (Malava/Malloi/Mallis) எனும் தமிழ்ப் பழங்குடிகள் சிந்துவெளியில் அரண் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கிரேக்க, உரோமானிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பாக்கித்தானின் ‘சுவாத்’ பள்ளத்தாக்கிலிருக்கும் ‘அசுப்பசுயோய்’ (Aspasioi) பழங்குடிகளை எதிர்த்துப் போரிட்டபோது, அவர்களில் ஒருவன் எய்த ஈட்டியால் அலெக்சாண்டர் புண்பட்டான். ‘அசகெனோய்’ (Assakenoi) பழங்குடியினருடன் பல நாட்கள் போரிட்டு ‘மாசகம்’ (Massaga), ‘அரணம்’ (Aornos) முதலான கோட்டைகளைப் படாத பாடுபட்டுப் பிடித்த அலெக்சாண்டர், அங்கெலாம் கொலைவெறியாடினான்.
சீலம் ஆற்றங்கரையில் ‘போரசு’ (Porus) எனும் மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றதாகவும் சொல்கின்றனர். அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, ‘சமற்கிருதம்’ எனும் மொழியே இல்லை. ஆயினும், போரசின் உண்மையான சமற்கிருதப் பெயர் ‘புருசோத்தமன்’ என்று இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் கதை விடுகின்றனர். போரசு, உள்ளபடியே ஒரு தமிழ் மன்னனென ஆய்வுகள் காட்டுகின்றன. தக்கசீலத்தை ஆண்டுவந்த ‘அம்பி’ (Omphis) எனும் மன்னன் தம் சொந்த இனத்தாரையே காட்டிக்கொடுத்துவிட்டு அலெக்சாண்டருக்குத் துணைபோனதாக கிரேக்க, உரோம வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்.
போரசுடன் நடத்திய போருக்குப்பின் பாக்கித்தானிலிருக்கும் சீனாப் ஆற்றங்கரையில் ஆண்டுவந்த ‘மழவர்’ அல்லது ‘மள்ளர்’களின் ‘மழவர்தானத்தை’ அலெக்சாண்டர் தாக்கினான். அம் ‘மழவர்தானம்’தான் இன்று ‘முல்தான்’ எனப்படுகிறது. மழவர்களுடன் போரிடும்போது, முறிந்த கோட்டைச் சுவரிலிருந்து கீழே குதித்த அலெக்சாண்டரின்மேல் மழவன் ஒருவன் அம்பு எய்தான்; சுருண்டு விழுந்த அலெக்சாண்டரை அவனது மெய்க்காவலர்கள் காப்பாற்றினர்.
சிந்துவெளித் தமிழ்ப் பழங்குடிகள் காட்டிய கடும் எதிர்ப்பாலும், போரில் புண்பட்டதாலும் கீழைக்கங்கைக்கரை நாடுகளின்மேல் படையெடுக்கும் அலெக்சாண்டரின் எண்ணம் கைகூடவில்லை. மேலும், மாசிடோனியப் படைஞர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டுமெனக் கலகம் செய்தனர். இதனால், தம் படையெடுப்பைச் சிந்துவெளியுடன் நிறுத்திக்கொண்டு நாடு திரும்பும் வழியில் பாபிலோனில் அவன் இறந்தான். சுருங்க சொல்லின், அலெக்சாண்டரை முறியடித்து நாடு திரும்ப வைத்தவர்கள் தமிழர்களேயாவர்.
 அலெக்சாண்டர் படையெடுப்பின்போது, கீழைக்கங்கைக்கரைப் பகுதியில் கங்கையாற்றில் ஒரு தீவாயிருந்த ‘கங்கரிடை’ (Gangaridae) நாட்டை ‘நந்தர்கள்’ ஆண்டுவந்தனர். ‘கங்கரிடை நாடு’ என்பது தமிழ்ப்பெயர். கங்கரிடை நாட்டைத்தான் ‘மகதநாடு’ என்கின்றனர். ‘நன்னர்’ எனும் தமிழ்ப் பெயரின் திரிபே ‘நந்தர்’ என்பதாகும். நன்னர்கள் தமிழ் வேளிர்க்குடியினராயிருந்திருக்க வேண்டும். அந் நந்தர்களை ‘ஆந்திரக்கோட்டசு’ அல்லது ‘சந்திரக்கோட்டசு’(Andracotus or Sandracotus) என்பான் கைப்பற்றி ‘மோரிய’ அரசை நிறுவியதாக கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 'ஆந்திரக்கோட்டசு' (ஆந்திரக்கோட்டை) ஒரு வடுகன் என்பதைத் ‘தமிழரின் தொன்மை’ எனும் நூலில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.
கடை விரித்தேன், கொள்வாரில்லை!
அலெக்சாண்டருக்குப்பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப்பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் ‘டெமெட்ரியசு’ (Demetrius) எனும் ‘கிரேக்கப் பாக்டீரிய’ (Greeco-Bacteria) அரசன் சிந்துப்பகுதியின்மேல் படையெடுத்து ‘இந்தியக் கிரேக்கப்’ பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான். அவனது ஆட்சிப்பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது. (வரைபடம்)
‘இந்தியக் கிரேக்க’ ஆட்சியின்கீழ்ச் சிந்துவெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது. சிந்துவெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்புமொழிகள் உருவாயின. அதேபோழ்து, கீழைக்கங்ககைக்கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது. ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின. புத்தர்களும் அருகர்(சைனர்)களுமே அதற்குக் காரணமாயினர். புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.
சிந்துவெளிப் பகுதியிலும் கீழைக்கங்கைக்கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும். ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக்கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.
கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (‘செவ்வனே செய்யப்பட்டது’ எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. மகாயான புத்தர்களாலும் அருகர்(சைனர்)களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.
சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்றுவிக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.) வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில்தான் சமற்கிருதம் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.
-- குணா

செவ்வாய், 20 ஜூன், 2017

பஃ றுளி ஆறு கற்பனையா?
குமரிக் கண்டத்தை
கடல் விழுங்கிய வரலாறு பொய்யா?
தமிழன் எப்படி வந்தேறி ஆவான்?

கிழக்கு ஆசியாவில்
இருந்து வந்த வந்தேறிதான்
தமிழனுக்கு நெல் விவசாயம்
கற்றுக் கொடுத்தானா?
இந்து ஏட்டில் ஜோசப் கட்டுரை!


ஆரிய திராவிடப் புதிரை
விடுவித்தேன்! எப்படி?
ஆரியனும் வந்தேறி! திராவிடனும்
வந்தேறி! தமிழனும் வந்தேறி!
எல்லா நாயும் வந்தேறி நாயே!

ஆரியர்கள் அறிந்தவர்களாகவே இருக்கட்டும்.
தமிழன் ஆரியனிடம் இருந்துதான் விவசாயம்
செய்யக் கற்றுக் கொண்டானா?

டோனி ஜோசப் எழுதிய கட்டுரையின் முக்கிய
கருத்தை, அதன்  சாரத்தை கடைசிப் பத்தியில்
எழுதி உள்ளார். நாம் எல்லோருமே வந்தேறிகள்தான்
என்கிறார். ஆங்கிலத்தில் "WE ARE ALL MIGRANTS" என்று
கட்டுரையை முடிக்கிறார்.

இந்தோனேசியா என்பதெல்லாம் 4000, 5000
ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாதான். கடல் கொண்ட
கபாடபுரம், குமரிக் கண்டம்  பற்றிய ஆய்வே
இல்லாமல், வந்தடைந்த முடிவுகள்
அறிவியல்பூர்வமானவை அல்ல.

பரந்து விரிந்த இந்தியத் துணைக்கண்டத்தில்
பூர்வகுடிகளே இல்லை;  எல்லோருமே
வந்தேறிகள்தான் என்பது அறிவியலுக்கு எதிரானது.
இந்தக்

சாம்பிள் என்ன ராணுவ ரகசியமா?
அதை அல்லவா முதலில் சொல்ல வேண்டும்! அதைச்
சொன்ன பிறகுதானே திரு ஜோசப் கட்டுரை எழுத
வேண்டும்! இதை மறைப்பது என்ன நியாயம்?

இந்து ஏட்டில் திரு ஜோசப் எழுதிய கட்டுரையின்
மீதான எதிர்வினையாக இதுவரை இரண்டு
கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றை வாசகர்கள்
படிக்குமாறு வேண்டுகிறேன்.

சிந்து சமவெளி
நாகரிக மக்கள்
பேசிய மொழி என்ன?
இன்ன மொழி என்று
உறுதியாகக் கூற இயலுமா?

   
அறிவியல் கட்டுரை என்பது
குஷ்டரோகியின் சுயஇன்பம் அல்ல!
(ஆரியர் வருகை குறித்த விவாதம்;
கட்டுரையின் இரண்டாம் பகுதி)
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
ஒரு குஷ்டரோகி என்ன நினைப்பானாம் என்றால்,
தனக்கு வந்தது போல எல்லோருக்கும் குஷ்டரோகம்
வர வேண்டும்  என்று நினைப்பானாம். கட்டுரையாளர்
திரு டோனி ஜோசப் மேற்கூறிய குஷ்டரோகியின்
மனநிலையில்  இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
அவர் தம்மை இந்த மண்ணின் மைந்தராகக்
கருதவில்லை போலும்! ஒரு வந்தேறியின்
உளவியலை அவர் தம் சிந்தனைக்குள் கட்டுமானம்
செய்திருக்க வேண்டும்.

எனவே இந்திய மக்கள் எவருமே இந்த மண்ணின்
மைந்தர்கள் அல்ல.ஒருவர் பாக்கி இல்லாமல்  எல்லோருமே  வந்தேறிகள் என்று  திரு ஜோசப்
கூறுகிறார். (பார்க்க: கட்டுரையின் கடைசி வாக்கியம்:
"We are all migrants"). இது எவ்விதத்திலும் உண்மை அல்ல.

திரு ஜோசப் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்:
--------------------------------------------------------------------------
இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் மக்களாகிய
நாம் ஒரு ஒற்றை மூலத்தில் இருந்து தோன்றியவர்கள்
அல்ல; மாறாக பல்வேறு மூலங்களில் இருந்து
தோன்றியவர்கள். நமது பண்பாட்டின் கூறுகள்,
நமது பாரம்பரியம், நமது செயல்பாடுகள்  ஆகிய
அனைத்துமே இந்த மண்ணில் நாம் சொந்தமாக
உருவாக்கியதல்ல. மாறாக, வெளியில் இருந்து
இங்கு குடியேறிய பல்வேறுபட்ட இன மக்களிடம்
இருந்து பெற்றதாகும்.      

திரு ஜோசப் மேலும் கூறுகிறார்:
--------------------------------------------------------
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  ஆப்பிரிக்காவில்
இருந்து வெளியேறிய மக்கள்தான் முதன் முதலில்
இந்தியாவுக்கு வந்தவர்கள். இந்தப் பிரதேசத்தையை
அவர்கள்தான் முதலில்  கண்டறிந்து குடியேறியவர்கள்.
பின்னர் வெளியில் இருந்து வந்தவர்கள் வேளாண்மை
உத்திகளுடன் இங்கு வந்து சிந்து சமவெளி  நாகரிகத்தை
உருவாக்கினர். பின்னர் கிழக்கு ஆசியாவில் இருந்து
வந்தவர்கள் நெல் சாகுபடி முறையுடன் வந்து
இங்குள்ளவர்களுக்கு நெல் சாகுபடியைக் கற்பித்தனர்.
பின்னர் வந்தவர்கள் சமஸ்கிருதம் என்ற
மொழியுடனேயே இங்கு வந்தனர்.

இவ்வாறு உளறிக்கொண்டே போகிறார்.
(பார்க்க: அவரின் கட்டுரையின் கடைசிப் பத்தி).
திரு ஜோசப் முன்வைக்கும் கருத்துக்களில் பலவும்
எவ்வித ஆதாரமும் அற்ற அபத்தமான பொய்கள்
என்பதை விளக்கிச் சொல்லிப் புரிய வைக்க
வேண்டிய தேவை இல்லை. (They are self explanatory)

இந்தக் கட்டுரையை அறிவியல் கட்டுரையாக
ஆங்கில இந்து ஏடு  வகைப் படுத்தி உள்ளது.
உண்மையில் இது ஒரு அரசியல் கட்டுரை.
இதில் அறிவியல் ஆதாரங்கள் குறைந்த அளவில்
கூடத் தரப்படவில்லை. குறியீடு நீக்கம் (decode)
செய்யப்பட்டு, சந்ததித் தகவல்கள்  எழுதப்பட்ட
சாம்பிள் பற்றிய தேவையான போதிய விவரங்களை
வேண்டுமென்றே கட்டுரையாளர் தவிர்த்துள்ளார்.

எந்த ஒன்றுக்குமே  உறுதி செய்யும் ஆதாரங்கள்
(corroborating evidence) இல்லை. 'மக்கள்தொகை மரபியல்'
(population genetics) என்பதே ஒரு தோராயம்தான்
என்பதால், வேறெந்தத் துறையையும் விட,
இங்கு உறுதிசெய்யும் ஆதாரங்கள்
அவசியமானவை. தொல்லியல் சான்றுகள்,
இலக்கியச் சான்றுகள், மானுடவியல் சான்றுகள்
போன்ற எவற்றாலும் திரு ஜோசப்பின் கூற்றுகள்
உறுதி செய்யப் படவில்லை. தமது கூற்றுகளை
நியாயப் படுத்தும் எவ்விதமான வலுவான
தர்க்கங்களையும் கட்டுரையாளர்
முன்வைக்கவில்லை. எனவே இது அறிவியல்
கட்டுரையே அல்ல.

தமிழன் மானுட இனத்தைச் சேர்ந்தவன் என்றே திரு
ஜோசப் கருதவில்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட
சாம்பிளில் தமிழர்களிடம் இருந்து எத்தனை
சாம்பிள்கள் பெறப்பட்டன என்பதை திரு ஜோசப்
விளக்குவாரா?

பஃறுளி ஆறு என்ற ஒன்று இருந்தது பற்றி திரு
ஜோசப்புக்கு என்ன தெரியும்? கடல் கொண்ட
கபாடபுரம் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா?

"பஃறுளி  ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்ற இலக்கிய வரிகள் உணர்த்தும் வரலாறு
பற்றி திரு ஜோசப் என்ன அறிவார்?

செயற்கைக்கோள் புகைப்படங்கள் எடுப்பதன்
மூலம், அவற்றை ஆய்வு செய்வதன் மூலம்
கடல்கொண்ட பண்டைத்  தமிழகம் பற்றி
அறிந்து கொள்ள வேண்டாமா? தென் தமிழகக்
கடலுக்குள் தோண்ட வேண்டாமா? தமிழ்நாட்டில்
பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள
வேண்டாமா? இத்தகு ஆராய்ச்சிகளின் விளைவாகப்
பெற வேண்டிய அந்த அறிவைப் பெறாமல் மானுட
இனம் பற்றிய சரியான எந்த முடிவுக்கும் எவரேனும்
வந்திட இயலுமா?

சமஸ்கிருதம் வெளியில் இருந்து இங்கு
கொண்டுவரப்பட்ட மொழி என்றால், அதன்
தாயகம்தான் எது? மொழியியல் அறிஞர்களின்
பார்வைக்கு இது முற்றிலும் முரண்பட்டது
அல்லவா? நோபல் பரிசு பெற்ற மொழியியல்
அறிஞர் நோம் சாம்ஸ்கியின் கருத்துக்களோடு
இது நூறு சதம் முரண்படவில்லையா?

திரு ஜோசப் அவர்களே,
கேள்விகள் தங்களின் விடைகளுக்காகக்
காத்திருக்கின்றன. எந்தக் கேள்விக்கும்
விடையளிக்காமல், எந்தத் தர்க்கத்தையும்
முன்வைக்காமல், ஆரியர் வருகை பற்றிய
புதிரை விடுவித்து விட்டேன் என்று தாங்கள்
சுயஇன்பம் அனுபவிப்பது அருவருப்பைத் தருகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனமே
தோன்றவில்லையா? அதற்கான சாதகமான
புவியியல் சூழலே இங்கு இல்லையா? இதை
கட்டுரையாளர் திரு ஜோசப் அவர்கள் அறுதியிட்டுக்
கூறி நிரூபிப்பாரா? பஃறுளி ஆறு என்பது கற்பனையா? 

புதிர்கள் நீடிக்கின்றன. என்றாலும் இந்த
மரபினப் புதிர்களை எதிர்கால மானுடம்
விடுவிக்கும்.

"வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா."
-------கம்பர்.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தொடரும்...கட்டுரையின் மூன்றாம் பகுதி
அடுத்து வெளிவரும். அது அறிவியல் செய்திகளை
உள்ளடக்கியதாக இருக்கும்.
******************************************************************

திங்கள், 19 ஜூன், 2017

ஆணும் பெண்ணும் கலப்பது  இனக்கலப்பு ஆகாது.
மனித உடலில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில்
பாலினத்தை நிர்ணயம் செய்வது ஒரே ஒரு
குரோமோசோம்தான். வயிற்றில் கருவாக வளரும்
குழந்தை ஆணா பெண்ணா என்பதை கருத்தரித்த
உடனே ஏன் கண்டறிய இயலவில்லை? ஏன் அதைக்
கண்டறிய சில மாதங்கள் ஆகின்றன? ஏனெனில்
ஆண் பெண் இரு பாலருக்கும் உயிரும் உயிரின்
வளர்ச்சியும் பொதுவானவை. நிற்க.
**
மானுடவியல் (anthropology) இனம் என்பதை எப்படி    
வரையறுக்கிறது என்பதைப் பின்னர் காண்போம்.
தோராயங்களும் அனுமானங்களும்
புதிரை விடுவிக்கவில்லை!
(ஆரியர் வருகை குறித்த விவாதம்:
கட்டுரையின் முதல் பகுதி)
---------------------------------------------------------------
(திரு டோனி ஜோசப் ஆங்கில இந்து ஏட்டில் (ஜூன் 16,2017)
எழுதிய "ஆரியரின் இடம்பெயர்வு பற்றிய சர்ச்சையை
மரபியல் எவ்வாறு தீர்த்து வைக்கிறது?"
"How genetics is settling the Aryan migration debate?"
என்ற கட்டுரையின் மீதான எதிர்வினை)
--------------------------------------------------------------------------------
 நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் அறிவியல்
கைப்பற்றிக் கொண்டு வருகிறது; அத்தோடு
அத்துறைகளை அறிவியல்மயம் ஆக்கியும்
வருகிறது. மானுட மரபியல் (Human Genetics) என்பது
ஒரு துறை. இதைச் சார்ந்த இன்னொரு துறை
மக்கள்தொகை மரபியல் (population genetics).
ஆய்வுகளிலும் பரிசோதனைகளிலும் புதிய
தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தியதன்
விளைவாக, இத்துறைகள் முன்னிலும் அதிகமான
அறிவியல் தன்மையைப் பெற்றுள்ளன.

எனினும்,தற்போதைய நிலையில், 'மக்கள்தொகை
மரபியல்'  துறையின் (population genetics) விதிகள், இயற்பியல் விதிகளைப் போன்று கறார் ஆனதும்
துல்லியம் உடையதும் அல்ல. கிடைத்திருக்கும்
சிறிதளவான சான்றாதாரங்கள் (physical evidence),
திரட்டப்பட்ட தரவுகள் ஆகியவற்றைக் கொண்டு.
உச்ச அளவிலான அனுமானங்களை மேற்கொண்டுதான் (கவனிக்கவும்: உச்ச அளவிலான அனுமானங்கள்)
இத்துறையில் ஒரு கோட்பாட்டு முன்மாதிரியை
(theoretical model) உருவாக்க முடியும்.

கோட்பாட்டு உருவாக்கத்தின் ஒவ்வொரு
கட்டத்திலும் தோராயங்களும் அனுமானங்களும்
இத்துறையில் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல,
இயல்பானவையும் கூட. மிகுந்த ஆரவாரத்துடன்
முன்மொழியப்படும் பல கோட்பாடுகள் நாளடைவில்
போலியாக (fallacy) ஆகி விடுவதும் இத்துறையில்
இயல்பே.

எனவே பாயில் விதி, அவகாட்ரோ விதி போன்றோ,
உந்தம் மாறாமல் இருத்தல் பற்றிய விதி போன்றோ
(Law of conservation of momentum) இத்துறையின்
கோட்பாடுகள் இருப்பதில்லை; இருக்கவும்
இயலாது. இந்த அடிப்படை  உண்மையை மனதில்
பதித்துக்கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில்
உயிரியல் பாடங்களில் ஓரளவேனும் அறிமுகம்
இருத்தல் வேண்டும். அதற்கு உதவியாகச் சில
விஷயங்களை முதலிலேயே பார்த்து விடுவோம்.

1) பொருட்கள் அணுக்களால் ஆனவை. அதுபோல
உயிர்கள் (எல்லா உயிரினங்களும்) செல்களால்
ஆனவை.
2) செல் என்பது ஓர் உட்கருவைக் கொண்டது.
உட்கருவில் குரோமோசோம்கள் உள்ளன.
குரோமோசோமில் மரபணு (DNA) உள்ளது.
DNAவின் கூறுகளில்  ஒன்று ஜீன்கள் ஆகும்.
3) Y குரோமோசோம் என்பது பாலியல் நிர்ணயிப்பு
குரோமோசோம் ஆகும். Y குரோமோசோம்
ஆண்களைக் குறிக்கும்.
4)ஹேப்லோ குழுமம் (Haplogroup): ஒரு மூலப் பெற்றோரிடம்
இருந்து வந்த மனிதர்களின் (அல்லது உயிரிகள்)
உடலில் உள்ள ஜீன்களின் குழு. 
5)R1a: மனித உடலின் ஒரு ஹேப்லோ குழு R1a ஆகும்.
மனித Y குரோமோசோம் DNAவின் ஹேப்லோ குழுக்கள்
A முதல் T வரை வகைப் படுத்தப் .பட்டுள்ளன.
அவற்றில் இது R வகையில் 1a உட்பிரிவு ஆகும்.
6) மக்கள்தொகை மரபியலில் இரண்டு விதமான
ஹேப்லோ குழுக்கள் ஆய்வு செய்யப் படும்.
அ) Y குரோமோசோம் ஹேப்லோ குழு.(Y DNA)
ஆ) மைட்டோ கான்ட்ரியல் ஹேப்லோ குழு.(mtDNA)
7) Y குரோமோசோம் ஹேப்லோ குழு.தந்தையின்
தன்மை உடையது. அதாவது இது தகப்பனிடம்
இருந்து பண்புகளை மகனுக்குக் கடத்தும். இது
PATRILINEAL ஆகும்.
8) மைட்டோ கான்ட்ரியல் ஹேப்லோ குழு: இது
தாய்மைப் பண்பு உடையது. தாயிடம் இருந்து
பிள்ளைகளுக்குக்  கடத்தும். இது MATRILINEAL ஆகும்.
9) Z 95: இது R1a-ஐ மூதாதையாகக் கொண்டு (ancestor)
அதிலிருந்து வந்த (descendant) வம்சம் ஆகும். அதாவது
R1aவின் உட்பிரிவு ஆகும்.
10) இன்றைய மொத்த மனித இனமும் ஹோமோசேப்பியன்
(homosepian) என்னும் வகை ஆகும்.இதற்கு முன்பு
நியாண்டர்தால் இனமும் அதற்கும் முன்பு
ஹோமோஎரக்டஸ் இனமும் இருந்தது.
11)  மரபியல்  ஆதாம் ( Y குரோமோசோம் ஆதாம்):
-----------------------------------------------------------------------------------------
இன்று வாழும் மனித குலத்தின் மிகச் சமீபத்திய
(MOST RECENT) பொது  மூதாதையின் மரபணுக்கள்
அறியப் பட்டுள்ளன. ஆண்தன்மை உடைய இந்த
மூதாதை "மரபியல் ஆதாம்" என்று அழைக்கப் படுகிறது.

12) மரபியல் ஏவாள்: ( Mitochondrial Eve):
---------------------------------------------------------------
இன்று வாழும் மனித குலத்தின் மிகச் சமீபத்திய
பொது மூதாதை மரபியல் ஏவாள் என்று அழைக்கப்
படுகிறது. இது தாய்மைத் தன்மை உடையது.

இந்த அளவிலான அறிமுகத்துடன் கட்டுரைக்குள்
செல்வோம். வாசகர்கள் உரிய பாடநூல்களைப்
படித்து அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

'மக்கள்தொகை மரபியல்' (population genetics) துறையின் 
 கோட்பாடுகளில் நிச்சயமின்மைகள்(uncertainties)
நிறைந்து காணப்படும். எனவே முன்வைக்கப்படும்
எந்த ஒரு கோட்பாடும் எதிர்காலத் திருத்தத்திற்கு
உட்பட்டது. (subject to future revision).

மத்திய ஆசியா, தெற்காசியா (இந்தியா உள்ளிட்டு)
பகுதிகளில் வாழும் மக்கள் குறித்த மரபியல்
ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகாறும் நடைபெற்ற ஆய்வுகளில், தாய்மைப்
பண்பு உடைய மைட்ரோகான்ட்ரியல் மரபணு
(mtDNA) ஆய்வு முடிவுகளின் தரவுகள் பயன்பட்டன.

தற்போது, தந்தைத் தன்மை உடைய Y மரபணு
ஆய்வுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுத் தரவுகளை தற்போது மரபியலில்
பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். mtDNA ஆய்வுகள்
மற்றும் Y DNA ஆய்வுகள் என்று இரண்டு வகையான
ஆய்வுகளும் தற்போது மரபியலில் பயன்படுத்தப்
படுவது வரவேற்கத் தக்கதாகும். இது தோராயத்தை
ஓரளவு குறைத்து துல்லியத்தை ஓரளவு அதிகரிக்கும்.  

BMC Evolutionary Biology என்ற பெயரில் இங்கிலாந்தில்
இருந்து ஒரு அறிவியல் ஏடு வெளிவருகிறது.
BioMed Centre என்ற நிறுவனம் இந்த ஏட்டை
வெளியிட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு
இந்த ஏட்டில் ஒரு கட்டுரை வெளியானது.

பேராசிரியர் மார்ட்டின் பி ரிச்சர்ட்ஸ் என்ற இங்கிலாந்து
விஞ்ஞானி, அந்த ஏட்டில், "A Genetic Chronology for the Indian 
Subcontinent Points to Heavily Sex-biased Dispersals"  என்ற 
தலைப்பில் எழுதிய கட்டுரையே அது.   

இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி,
ஆங்கில இந்து ஏட்டில், திரு டோனி ஜோசப் என்ற
பத்திரிகையாளர் ஒரு கட்டுரையை எழுதி உள்ளார்.
அக்கட்டுரை மீதான  எதிர்வினையே இந்தக் கட்டுரை.

திரு டோனி ஜோசப் எழுதிய கட்டுரையை
படித்துப் புரிந்து கொண்ட பிறகு, வாசகர்கள் எமது
இந்தக் கட்டுரையைப் படிப்பது சிறந்தது. ஆழமான
வாசிப்பு தேவைப்படுவோர் பேராசிரியர் மார்ட்டின்
பி ரிச்சர்ட்ஸ் எழுதிய மேற்குறிப்பிட்ட மூலக்
கட்டுரையையும் படிக்க வேண்டும்.
இக்கட்டுரைகளைப் படித்துப் புரிந்து
கொள்வதற்கு வலுவான அறிவியல் பின்னணியும்
நல்ல ஆங்கிலப் புலமையும் முன்நிபந்தனைகளாக
அமைகின்றன என்பது சொல்லாமலே விளங்கும்.

1) மூலக்கட்டுரையில் பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் என்ன
முடிவுகளை முன்வைத்துள்ளார்?

2) அம்முடிவுகளை அவர் வந்தடைந்தது எப்படி?
அதாவது, அவரின் முடிவுகளில் அறிவியல் தரவுகளின் 
பங்கு எவ்வளவு? தோராயங்களின் பங்கு
எவ்வளவு?  அனுமானங்களின் பங்கு எவ்வளவு?

3) இங்கு பேசப்படும் அனைத்திற்கும் மூல
காரணமாக இருப்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட
மரபணுக்களின் சாம்பிள் (sample). இந்த  சாம்பிளில்
உள்ள மரபியல் தகவல்கள்தான் குறியீடுநீக்கம்
(decode) .செய்யப்பட்டன. எனவே இந்த சாம்பிளின்
அளவு, தரம், பிரதிநிதித்துவத் தன்மை, பெறுமதி
ஆகியவை என்ன? 
என்ற மூன்று கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.

4) அடுத்து, பேரா ரிச்சர்ட்ஸின் கட்டுரையை மேற்கோள்
காட்டிய திரு டோனி ஜோசப் தமது கட்டுரையில்
மூலக் கட்டுரைக்கு எவ்வளவு விசுவாசமாக
இருக்கிறார் அல்லது இல்லை?

5) பேரா ரிச்சர்ட்ஸின் அனுமானங்களுக்கு
திரு டோனி ஜோசப் அளிக்கும் வியாக்கியானங்கள்
(interpretations) என்ன? அவை சரியானவைதானா? 

6) இக்கட்டுரைகளால் இந்தியாவுக்குள் ஆரியர்
வருகை என்ற புதிர் விடுவிக்கப் பட்டு விட்டதா?
அல்லது நீடிக்கிறதா? புதிர் விடுவிக்கப் பட்டு
விட்டதாக கட்டுரையாளர் உரிமை கோருவது சரியா?
ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

மேற்கூறிய ஆறு  கேள்விகளுக்குமான விடையே
எமது கட்டுரை. துரதிருஷ்ட வசமாக தமிழ் வாசகச்
சூழலில் எடுத்த எடுப்பிலேயே ஒரு கட்டுரையை எழுதி
விட இயலாது. கட்டுரையைப் புரிந்து கொள்ள
உதவியாக, சில அடிப்படையான விஷயங்களைச்
சொல்லாமல், கட்டுரையை அப்படியே வாசகர்களுக்கு
முன் வைத்து விட இயலாது. எனவேதான் இந்த
முன்னுரை. மேற்கூறிய ஆறு கேள்விகளுக்கும்
 விடையளிக்கும் கட்டுரையின் சாரப்பொருள்
அடுத்த பகுதியில் வெளியாகும்.
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
போதிய வாசகர்களின் ஆதரவு இருந்தால்
மட்டுமே கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளியாகும்.
******************************************************************
   
 


       



           






ஞாயிறு, 18 ஜூன், 2017

பாவேந்தரை எவரும் சந்தடி சாக்கில்
இணைக்கவில்லை. பாவேந்தர் புதுச்சேரியில்
வாழ்ந்தவர். அங்கு பிரிட்டிஷ் ஆட்சி கிடையாது.
பிரெஞ்சு ஆட்சிதான். பிரிட்டிஷாரை எதிர்த்த
அநேகப் புரட்சியாளர்கள் பலருக்குப் புகலிடமாக
விளங்கியது புதுச்சேரி. புதுச்சேரியில் உள்ள
பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களின்
வலைப்பின்னலில் பாவேந்தரும் ஒரு கண்ணியாக
இருந்தவர். இது வரலாறு.
**
மேலும் வாஞ்சிநாதனுடன் சென்ற இன்னொரு
போராளியான மாடசாமிப்பிள்ளை  தப்பித்து
வந்தபோது அவரைக் கடல் வழிப்பயணமாக
பாதுகாப்புடன் அனுப்பி வைத்தவரும் பாவேந்தரே.
இது வரலாறு.
**
வரலாற்றைப் படிக்காமல், காழ்ப்புணர்ச்சியுடன் 
இருந்தால், இதை புரிந்து கொள்வது கடினம்.     
ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற
வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி கொடுத்தது யார்?
-------------------------------------------------------------------------------------
மறைந்த பேராசிரியர் இளவரசு அவர்கள் சுமார்
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூல் எழுதினார்.
விடுதலைப்போரில் பாவேந்தர் என்பது
அந்நூலின் பெயர்.

சென்னையில் நடைபெற்ற அதன் வெளியீட்டு
விழாவுக்கு நான் சென்று இருந்தேன். மறைந்த
தமிழறிஞர் அரண முறுவல் அவர்கள்
இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்தான்
வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி வாங்கிக்
கொடுத்தார் என்ற  அந்நூலில் ஆதாரத்துடன்
எழுதி இருந்தார் பேராசிரியர்  இளவரசு.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும்
நெடிய வலைப்பின்னலில் பாவேந்தர் ஒரு
கண்ணியாக இருந்தார் என்பது வரலாறு.

வாஞ்சிநாதன் மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராளி என்பதே மார்க்சிய மதிப்பீடு.ஆனால்
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய தாசர்கள் முற்றிலும்
கற்பனையானதும் கீழ்மையானதுமான
அவதூறை வாஞ்சிநாதன் மீது வீசுவது
ஏற்கத் தக்கதன்று.
*******************************************************

paaventhar appothu pirenju

பாவேந்தர் அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு
உட்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்தவர். வாஞ்சியிடம்
பணம் ஏது? அவரால் சொந்தமாக ஒரு துப்பாக்கி
வாங்க இயலாது. எனவேதான் அவர் பாவேந்தரிடம்
இருந்து துப்பாக்கி பெற்றார். இது கட்டுக்கதை அல்ல.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற  சங்கிலியில்
பாவேந்தரும் ஒரு கண்ணியாக இருந்தார்
என்பதை மறுக்க இயலாது.
**
பாவேந்தரை  திராவிட இயக்கக் கவிஞர் என்று
மட்டுமே பார்ப்பதால் வரும் அவநம்பிக்கை இது.
அவரை  பாரதியாரின் தொடர்ச்சியாகவும், பாரதியின்
தேசப்பற்றை   சுவீகரித்துக் கொண்டவராகவும்
பார்க்க வேண்டும்..  

துரதிருஷ்ட வசமாக அந்தப் புத்தகத்தை நான்
தொலைத்து விட்டேன். புத்தகம் எழுதிய
இளவரசு அவர்களும் அரணமுறுவல் அவர்களும்
இன்று உயிருடன் இல்லை. நமது வரலாறு
 முழுமையாகவோ சரியாகவோ எழுதப் படவே
இல்லை என்ற உண்மையின் பின்னணியில் இதைப்
பார்க்க வேண்டும். மேலும் ஆதாரம் கிடைக்குமானால்
சொல்கிறேன்.

மேம்போக்கான குட்டி  முதலாளித்துவ நுனிப்புல்
பார்வைக்கு அப்பால் பார்க்க இயலாதவர்கள்
வாஞ்சிநாதனை மதவெறியனாக மட்டுமே பார்க்க
இயலும்.  வாஞ்சி ஒரு மகத்தான ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராளி என்பது மார்க்சிய மதிப்பீடு.
ஒரு  நூற்றாண்டுக்கு முந்திய சமூக இயக்கம்
எப்படியிருந்தது என்பது பற்றிய பார்வை இல்லாமல்,
இன்றைய 2017இன் சட்டகத்தில் வாஞ்சியைப்
பொருத்துவது பேதைமை.

ரத்தத்திலும் DNAவிலும் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தின்
தாசானுதாசனாக இருப்பவர்களால் மட்டுமே,
ஆஷ் துரை மீது பரிவு காட்ட இயலும். கோபாலகிருஷ்ண
நாயுடுவை படுகொலை செய்த மார்க்சிஸ்ட்
லெனினிஸ்டுகள் அவர் இரவில் தனியே
வரும்போதுதான் கொலை செய்தார்கள்.


வாஞ்சிநாதனின் தியாகத்தை கொச்சைப்
படுத்த முடியும். பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க வேண்டும்
என்ற நிலைப்பாட்டை


இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக
ஆஷ் படுகொலை நடந்தபோது, வாஞ்சிநாதன்
இளைஞர்.(இருபதுகளில் இருந்தார்). அதற்கு முன்பு
பள்ளியில் படிக்கும்போதே, வாத்தியாரை அவர்
ஏன் கொலை செய்யவில்லை, அவருக்கு முன் அனுபவம்
ஏன் இல்லை என்று கேள்வி கேட்டால் யாரிடமும்
பதில் .இருக்காது.   

நக்சல்பாரி இயக்கத்தின் பிதாமகர் சாரு மஜூம்தார்

ஏகாதிபத்திய ஆதரவு ஏகாதிபத்திய எதிர்ப்பு
என்று இரண்டு முகாம்களாக சமூகம் பிளவுபட்டு
இருக்கும்போது, ஏகாதிபத்தியத்தை  எதிர்த்தவர்கள்
மட்டுமே நம் கவனிப்புக்கும் மரியாதைக்கும்
உரியவர்கள். வாஞ்சிநாதனைப் பற்றி ஏகாதிபத்திய
சார்புநிலை எடுத்தவர்களின் அபிப்பிராயம்
கணக்கில் கொள்ளத் தக்கதல்ல.


வாஞ்சிநாதன் ஒரு கோட்பாட்டாளர் (Theoretician) அல்ல.
அவர் ஆயுதம் தாங்கிய ஒரு படைக்குழுவின்
உறுப்பினர். (member or commander of the armed squad)
மேற்கொண்ட செயலைச் சிறப்பாகச்
செய்து முடித்தவர். அதற்காக தம் உயிரையும்
இழக்கச் சித்தமாக இருந்தவர். சமூகம் பற்றிய
அவரின் கருத்துக்கள் என்னவாக இருந்தன என்று
ஆராய்ச்சி செய்தால், அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு
என்னும் கடமையில் அவர் உறுதியாக இருந்தாரா
இல்லையா என்பது மட்டுமே அவரை அளக்கும்
ஒரே காரணி.

ஹிட்லர் அதிகாரத்தில் இருந்தவர். வாஞ்சிநாதன்
அதிகாரத்தை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தவர்.
இருவரையும் ஒப்பிடுவது மனச்சிதைவுக்கு
இலக்கானால்தான் முடியும்.

இதெல்லாம் பொய்யான  கட்டுக்கதை என்பதை
ஆயிரம் முறை .நிரூபித்து இருக்கிறேன்.


கொலை என்பதில் எவ்வித இழிவும் இல்லை.
வாஞ்சிநாதன் ஆஸ்துரையைக் கொன்றதும்
கூலிக்காக ராஜீவைக் கொன்றதும் ஒப்பிடத்
தக்கன அல்ல.

வெள்ளி, 16 ஜூன், 2017

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை
சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது!
உள்மர்மம் என்ன?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) மலைப் பகுதி மற்றும் கடினமான பகுதிகளில்
(hilly and difficult areas) அரசு மருத்துவ மனைகள் உள்ளன.
இங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு MD, MS 
சேர்க்கையில் எடையூட்டு மதிப்பெண் (weightage)
வழங்க வேண்டும். இதுதான் சட்டம்.

2) மலைப்பகுதி மற்றும் கடினமான பகுதிகளுக்கு
மட்டுமே வழங்காமல், நகர்ப்புற மற்றும்
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு
மருத்துவமனைகளில் பணியாற்றும்
மருத்துவர்களுக்கும் எடையூட்டு மதிப்பெண்களை
வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

3) தற்போது இவ்வாறு முறைகேடாக வழங்கப்பட்ட
மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்ற
மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் ரத்து
செய்துள்ளது.

4) முன்னதாக, ஒவ்வொருவரிடம் இருந்தும் அவரின்
ஒரு மாதச் சம்பளத் தொகையைப் பெற்று,
தேவையான 5சி திரட்டி, உரிய அதிகாரம்
படைத்தவரிடம் வழங்கப் பட்டது என்று கூறப்படுகிறது.. பெற்றுக்கொண்டவர் 
மாவட்டத்து தலைநகரங்களில் பணியாற்றுவோருக்கும்
எடையூட்டு மதிப்பெண் வழங்கினார். இடம் கிடைத்தது.

5) இப்போது அவரிடம் போய், 5சியை திருப்பிக்
கொடுங்கள் என்று எவரும் கேட்க இயலாது.
ஆனால் முறைகேடாக மதிப்பெண்கள் பெற்று,
இடம் கிடைத்து, ஹாஸ்டலிலும் அட்மிட் ஆகி,
இப்போது சீட் இல்லை என்று நீதிமன்றம்
சொல்லும்போது, காலுக்கடியில் பூமி
நழுவுவது நடக்கத்தான் செய்யும்.

6) பாதிக்கப்பட்ட மாணவர்கள் அன்றே நீதிமன்றத்தை
நாட முடிவு செய்தனர். இன்றைய  தீர்ப்பில்
அவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
***************************************************************** 


புதன், 14 ஜூன், 2017

2G வழக்கு! 2017 செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு!
சிறப்பு நீதிபதி ஓ பி சைனி தீர்ப்பு வழங்குகிறார்!
----------------------------------------------------------------------------------
1) 2G வழக்கு என்பது மொத்தம் 3 வழக்குகளைக்
கொண்டது. இது ஒற்றை வழக்கு அல்ல.

2) இவற்றில் 2 வழக்குகளை CBI தொடுத்தது.
மூன்றாவது வழக்கை அமலாக்கப் பிரிவு தொடுத்தது.

3) CBI வழக்கில் 2011இலும் அமலாக்கப்பிரிவு வழக்கில்
2014இலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

4) வழக்குத் தொடுத்தல், குற்றப் பத்திரிக்கை
தாக்கல் செய்தல் ஆகிய அனைத்தும் காங்கிரஸ்
(UPA-II) ஆட்சிக் காலத்திலேயே நடந்து முடிந்தன.
இந்தக் காலக்கட்டம் முழுவதும் டாக்டர் மன்மோகன்
சிங் பிரதமராகவும், ப சிதம்பரம் நிதியமைச்சராகவும்,
கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சராகவும்
இருந்தனர்.

5) முதல் வழக்கே பிரதான வழக்கு. இதில் 122
உரிமங்களை வழங்கியதன் மூலம் அரசுக்கு
ரூ 30984 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஆ ராசா
உள்ளிட்டோர் மீது வழக்கு.

6) ரூ ஒரு லட்சத்து 76000 கோடி இழப்பு என்ற
போலித்தனத்தை CBI ஏற்கவில்லை.

7) முதல் வழக்கில் ஆ ராசா, கனிமொழி, கலைஞர்
டி.வி இயக்குனர் சரத்குமார், தொலைத்தொடர்புத்
துறையின் செயலாளர் சித்தார்த்த பெஹுரா,
ஆர் கே சந்தோலியா, தனியார் நிறுவனங்களின்
அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று
நிறுவனங்கள் மீது, ஆக மொத்தத்தில் 17 பேர்
மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்
பட்டுள்ளது.

8) இரண்டாம் வழக்கில்,  சில தனியார் நிறுவன
அதிகாரிகள் மீதும் மூன்று நிறுவனங்கள் மீதும்
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

9) மூன்றாவது வழக்கு அமலாக்கப் பிரிவு
தொடுத்த வழக்கு. இதில்
ஆ ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார்
(கலைஞர் டிவி இயக்குனர்), சில தனியார்
நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சில
தனியார் நிறுவனங்கள் ( 10 நபர்கள் மீதும்
9 நிறுவனங்கள் மீதும்) என மொத்தம் 19 பேர்
மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

10) கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம்
முறைகேடாக ரூ 200 கோடி வழங்கியது என்பதே
இந்த வழக்கின் குற்றச்சாட்டு.

11) இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரின்
மனைவி தினா அம்பானி, நீரா ராடியா ஆகியோர்
சாட்சியம் அளித்தனர்.

12) இந்த வழக்கில் செப்டம்பர் 2017 முதல் வாரத்தில்
தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
*********************************************************

     
.  
அனைத்தையும் தீர்மானிப்பவர் யார்?
------------------------------------------------------------------
ஜகத்குரு ஜெயேந்திரரே!
படங்களில் இந்தியாவின் முதல் குடிமகன்
His Excellency மேதகு பிரணாப் முகர்ஜி அவர்களும்
கழகத்தின் இன்றைய செயல்தலைவர்
அண்ணன் ஸ்டாலின் அவர்களும்.

ஜகதகுருவுடன் மற்றத் தலைவர்கள் உள்ள
புகைப்படங்களும் வெளியிடப் படும்.
***********************************************   

செவ்வாய், 13 ஜூன், 2017

இது இரும்பைப் பிழியும் இடம்: எலுமிச்சம்
பழம் பிழியும் இடம் அல்ல. பெரியார் தம் மீது
எந்தச் சாயமும் பூசாமல், நான் இப்படித்தான்
என்று பட்டவர்த்தனமாக, தனக்கு என்ன
தோன்றியதோ அதை மறைக்காமல் பேசியவர்.
அவர் மீது யாரும் எச்சாயமும் பூச முடியாது. நிற்க.
**
விஷயம் எதுவாயினும் அதை அறிவியல்
வழியில் அணுகும் இடம் இது. இங்கு முன்வைக்கப்பட்ட
கருத்துக்களை எந்த சோதிடராலும் மறுக்க இயலாது.
**
பாரதியாரின் ஆத்திச்சூடி படித்தவர்கள் அவர்
சோதிடம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார்
என்பதை  அறிவார்கள். "சோதிடந்தனை இகழ்"
என்கிறார் பாரதியார். அதன்படி சோதிடம்
இங்கு அறிவியல் முறையில் இகழப் படுகிறது.
**
தென்னாலி ராமன் சோதிடத்தை எப்படிப்
பொய்ப்பித்தார் என்பது தென்னாலி ராமன்
கதைகளில் படித்து அறியலாம்.
**
ராஜாஜி சோதிடர்கள் குறித்து எவ்வளவு
கடுமையாக கூறினார் என்பதற்கு ஆதாரம்
இருக்கிறது. அதையும் வெளியிடுவேன்.
**
தேவாரத்தில், கோளறு பதிகம் என்ன கூறுகிறது
என்பதையும் படித்தறியலாம்.நிற்க.
**
வடிவியலில் (Geometry) Reductio ad absurdum என்று ஒரு
முறை உண்டு. இது ஒருவகைத் தர்க்கம் (logic).
சில தேற்றங்களை நிரூபிப்பதில் இம்முறை
பயன்படுகிறது. இதே முறையைத் தான்
(Reductio ad absurdum) என்னுடைய இந்தக்
கட்டுரையிலும் பயன்படுத்தி உள்ளேன்.
இதற்கும், நீங்கள் உங்களின் கமென்டில்
குறிப்பிட்டவருக்கும் என்ன சம்பந்தம்?
   


இரவு நேர ராகு காலத்தில்
உடலுறவு கொள்ளலாமா?
முதன் முதலில் எனது கண்டுபிடிப்பு!
சந்தேகங்களுக்கு விளக்கம்!
--------------------------------------------------------
சோதிட சாஸ்திரத்தில் ராகு காலம் என்பது
பகல் பொழுதை மட்டும் கொண்டு கணக்கிடப்
படுகிறது. இதற்குக் காரணம் சோதிட சாஸ்திரம்
உருவான காலத்தில் மின்சாரம் கிடையாது.
சூரிய அஸ்தமனத்தோடு மனிதர்களும்
பறவைகளைப்  போல வீடுகளில் முடங்கி
விடுவார்கள்.

இன்று அப்படியல்ல. மின்சாரமானது இரவைப்
பகல் ஆக்கி விட்டது. தொழிற்சாலைகளில்,
IT நிறுவனங்களில் 24 மணி நேரமும் மூன்று
ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. இரவில்
ஒளிவெள்ளத்தில் கிரிக்கெட் நடக்கிறது. 24/7,
24365 என்பது நாட்டின் நடைமுறை ஆகி விட்டது.

எனவே மாறிய காலச் சூழலில், இரவு நேரத்திலும்
ராகு காலத்தை வரையறுக்க வேண்டிய தேவை
எழுந்து விட்டது. சுப காரியங்களை ராகு காலத்தில்
செய்யக் கூடாது என்ற தத்துவம் இரவு நேரத்திற்கும்
பொருந்தும்.

எனவே இரவுப் பொழுதில், எந்தெந்த நேரத்தில்
ராகு காலம் வருகிறது என்று கணித்துள்ளேன்.
உலகிலேயே இந்தக் கணிப்பை முதன் முதலில்
செய்தவன் நான் ஒருவனே.

அதன்படி, இரவுப் பொழுதில் ராகு காலம்
பின்வருமாறு உள்ளது என்று கணித்துள்ளேன்.

ஞாயிறு: நள்ளிரவு 12 முதல் 1.30 வரை
திங்கள்: முன்னிரவு 7.30 முதல் 9 வரை
செவ்வாய்: நள்ளிரவு 1.30 முதல் 3 மணி வரை
புதன்: பின்னிரவு (அதிகாலை) 4.30 to 6
வியாழன்: இரவு 10.30 to 12
வெள்ளி: இரவு 9 to 10.30
சனி: பின்னிரவு 3 to 4.30

நேரவாரியாக:
-------------------------
திங்கள்: 7.30--9
வெள்ளி: 9--10.30
வியாழன்: 10.30--12
ஞாயிறு: 12--1.30
செவ்வாய்: 1.30--3
சனி: 3--4.30
புதன்: 4.30--6 

இதை நினைவில் கொள்ள எளிய வழி:
--------------------------------------------------------------------
பின்வரும் வாக்கியத்தைச் சொல்லுங்கள்.
"திட்டமிட்டு வெளியில் விரட்டியது
ஞாயமான செயலா, சகியே, புறப்பட்டேன்!"

இவ்வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையின்
முதல் எழுத்தும் கிழமையைக் குறிக்கும்.
இரவு 7.30 மணி முதல் ஒன்றரை மணி நேரம்
திங்கள் கிழமையின் ராகு காலம் ஆகும்.
முன்னர்க்கூறிய அட்டவணையை எளிதில்
நினைவில் பதிக்க மேற்கூறிய வாக்கியம் பயன்படும்.

உலகிலேயே இதை என்னுடைய ஞான திருஷ்டியில்
முதலில் கூறுபவன் நான் ஒருவனே.

ராகு காலத்தில் உடலுறவு கூடாது!
---------------------------------------------------------------
இரவு நேர ராகு காலத்தில் சுப காரியமான
உடலுறவு கொள்ளக் கூடாது. இரவு நேர
ராகு காலத்தைக் கணக்கில் கொள்ளாமல்,
உடலுறவு கொள்வதால்தான் இந்தியா
முன்னேறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே, பகல் பொழுதில் மட்டுமின்றி, இரவுப்
பொழுதிலும் ராகு காலம் உள்ளதால், பகலில்
ராகு காலம் பார்ப்பவர்கள் அனைவரும் இரவிலும்
பார்க்க வேண்டும் என்பது மக்களின் கடமை.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அடுத்து, இரவுப் பொழுதில் உள்ள
குளிகை, எமகண்ட வேளைகளையும்
கணித்துள்ளேன்: வெளியிடுவேன்.
*********************************************************