புதன், 14 ஜூன், 2017

2G வழக்கு! 2017 செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு!
சிறப்பு நீதிபதி ஓ பி சைனி தீர்ப்பு வழங்குகிறார்!
----------------------------------------------------------------------------------
1) 2G வழக்கு என்பது மொத்தம் 3 வழக்குகளைக்
கொண்டது. இது ஒற்றை வழக்கு அல்ல.

2) இவற்றில் 2 வழக்குகளை CBI தொடுத்தது.
மூன்றாவது வழக்கை அமலாக்கப் பிரிவு தொடுத்தது.

3) CBI வழக்கில் 2011இலும் அமலாக்கப்பிரிவு வழக்கில்
2014இலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

4) வழக்குத் தொடுத்தல், குற்றப் பத்திரிக்கை
தாக்கல் செய்தல் ஆகிய அனைத்தும் காங்கிரஸ்
(UPA-II) ஆட்சிக் காலத்திலேயே நடந்து முடிந்தன.
இந்தக் காலக்கட்டம் முழுவதும் டாக்டர் மன்மோகன்
சிங் பிரதமராகவும், ப சிதம்பரம் நிதியமைச்சராகவும்,
கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சராகவும்
இருந்தனர்.

5) முதல் வழக்கே பிரதான வழக்கு. இதில் 122
உரிமங்களை வழங்கியதன் மூலம் அரசுக்கு
ரூ 30984 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஆ ராசா
உள்ளிட்டோர் மீது வழக்கு.

6) ரூ ஒரு லட்சத்து 76000 கோடி இழப்பு என்ற
போலித்தனத்தை CBI ஏற்கவில்லை.

7) முதல் வழக்கில் ஆ ராசா, கனிமொழி, கலைஞர்
டி.வி இயக்குனர் சரத்குமார், தொலைத்தொடர்புத்
துறையின் செயலாளர் சித்தார்த்த பெஹுரா,
ஆர் கே சந்தோலியா, தனியார் நிறுவனங்களின்
அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று
நிறுவனங்கள் மீது, ஆக மொத்தத்தில் 17 பேர்
மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்
பட்டுள்ளது.

8) இரண்டாம் வழக்கில்,  சில தனியார் நிறுவன
அதிகாரிகள் மீதும் மூன்று நிறுவனங்கள் மீதும்
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

9) மூன்றாவது வழக்கு அமலாக்கப் பிரிவு
தொடுத்த வழக்கு. இதில்
ஆ ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார்
(கலைஞர் டிவி இயக்குனர்), சில தனியார்
நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சில
தனியார் நிறுவனங்கள் ( 10 நபர்கள் மீதும்
9 நிறுவனங்கள் மீதும்) என மொத்தம் 19 பேர்
மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

10) கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம்
முறைகேடாக ரூ 200 கோடி வழங்கியது என்பதே
இந்த வழக்கின் குற்றச்சாட்டு.

11) இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரின்
மனைவி தினா அம்பானி, நீரா ராடியா ஆகியோர்
சாட்சியம் அளித்தனர்.

12) இந்த வழக்கில் செப்டம்பர் 2017 முதல் வாரத்தில்
தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
*********************************************************

     
.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக