வியாழன், 8 ஜூன், 2017

கோவலனைப் பிரிந்த கண்ணகியின் நிலையை
வருணிக்கும் இளங்கோவடிகள்,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி மகிழாள்
என்பார். மங்கல அணி என்பது தாலியன்றோ! 

நீட்டை எதிர்க்காத கேரளம்
மாட்டுக்கறி சட்டத்தை எதிர்க்கிறது.
தமிழகம் தலைகீழ்
செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க செய்யாமையானும் கெடும் 
நீட் ஆதரவு கேரளம்

எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்க்கின்றன
கேரளத்துக் கட்சிகள். மார்க்சிஸ்டுகள்,  காங்கிரஸ்
இரு கட்சிகளும் மாட்டுக்கறிச் சட்டத்தை
 எதிர்க்கின்றன. ஆனால் இதே கட்சிகள்
நீட்டை ஆதரித்தன. எதை எதிர்க்க வேண்டுமோ
அதை எதிர்ப்பதும், எதை ஆதரிக்க வேண்டுமோ
அதை ஆதரிப்பதும் கேரளத்தின் கட்சிகளுக்கு
கைவந்த கலை. தமிழக  அரசியல் கட்சிகள்
முட்டாள்தனமான கட்சிகள்.

எடப்பாடி அமைச்சரவை முழுசாக மாற்றம்!
செய்திகளை முந்தித் தருவது யாமே!
கணித நிபுணரிடம் ஒப்படைத்த கட்சி!
எத்தனை விதமாய் அமைச்சரவையை அமைக்கலாம்?
---------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
எடப்பாடி அவர்களிடம் 128 சட்டமன்ற உறுப்பினர்கள்
உள்ளனர், அவர் உட்பட. இந்த 128 பேரில் இருந்து
புதிய அமைச்சரவையை உருவாக்க கட்சித்  தலைமை
விரும்புகிறது. 128 பேரில் எவர் வேண்டுமானாலும்
முதல்வர் ஆகலாம். 128 பேர் கொண்ட அமைச்சரவை
அது என்பதாக கட்சித் தலைமை முடிவு செய்கிறது.
இதை எத்தனை விதங்களில்  செய்யலாம் என்று
கண்டறியும் பொறுப்பை கட்சித் தலைமை ஒரு
கணித நிபுணரிடம் ஒப்படைத்தது.

இப்போது கேள்வி இதுதான்!  மொத்தம் எத்தனை
விதங்களில் இதைச் செய்ய இயலும்? 

விடைகள்   வரவேற்கப் படுகின்றன.
இது என்ன sum என்று சிலர் நினைக்கக் கூடும்.
But a sum is a sum!
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக