மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா?
அட்மிஷன் நிலவரம் என்ன?
உண்மை நிலை விளக்கமும் எமது கணிப்பும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளின்
இடங்கள் (Govt college seats) = 3050
2) இதில் 15 சதம் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்
(All India Quota seats)= 456
3)மீதி 85 சதம் மாநில ஒதுக்கீட்டு இடங்கள்
(TN govt seats) = 3050 minus 456 = 2594.
4) இந்த 2594 இடங்களில், மாநிலப்படத்திட்ட
ஒதுக்கீட்டு இடங்கள் (85 சதம்) = 2203.
5) CBSE உள்ளிட்ட பிற பாடத்திட்ட ஒதுக்கீட்டு
இடங்கள் (15 சதம்) = 391
6) மேற்கூறிய அனைத்தும் அரசுக் கல்லூரி
இடங்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
இது போக, சுயநிதிக் கல்லூரிகள் தரும்
அரசு இடங்கள் = 664.
7) இத்தகவல்கள் அனைத்தும் அமைச்சர்
விஜயபாஸ்கர் அறிவித்த அதிகாரபூர்வமான
தகவல்கள் ஆகும்.
8) அரசு (2594+664=மொத்தம் 3258 இடங்கள்
இருந்தாலும், இங்கு அட்மிஷன் குறித்து
நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்
இடங்கள் = 2203 மட்டுமே. இந்த 2203 இடங்கள்
மட்டுமே அரசுக் கல்லூரிகளின் மாநிலப் பாடத்
திட்ட இடங்கள் ஆகும்.
9) இந்த 2203 இடங்களும் பின்வருமாறு
இடஒதுக்கீடு முறையில் வழங்கப்படும்.
அ) திறந்த போட்டி (OPEN) 31% = 683 இடங்கள்
ஆ) NCL BC 30% = 661 இடங்கள் (NCL= Non Creamy Layer)
இ) MBC 20% = 441 இடங்கள்
ஈ) SC 18% = 396 இடங்கள்
உ) ST 1% = 22 இடங்கள்.
ஆக மொத்தம் = 2203 இடங்கள்.
10) அட்மிஷன் கிடைக்குமா என்று கணக்கிடும் முறை:
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மாணவருக்கு அட்மிஷன் கிடைக்குமா என்று
பரிசீலிப்பதற்கு அ) அவரின் நீட் மதிப்பெண்
ஆ) அவரின் சாதிக்குரிய (community) ஒதுக்கீடு
ஆகிய இரண்டு காரணிகளையும் கணக்கில்
எடுக்க வேண்டும்.
உதாரணமாக,
ஒரு BC மாணவர் என்றால், மொத்தமுள்ள 2203 இடங்கள்,
அவரைப் பொறுத்து, 1344 இடங்களாகச் சுருங்கி
விடும். அதாவது MBC/SC/ST இடங்களான 859
இடங்களுக்கு அவர் போட்டியிட இயலாது.
மேலும், BC க்குரிய 30 சதம் இடங்களில் 3.5 சதம்
முஸ்லீம் மதத்தினருக்குச் சென்று விடும்.
அதாவது, BCக்குரிய இடங்களான 661இல்
முஸ்லிம்களுக்கு 77 இடங்கள் ஒதுக்கப்
படுகின்றன. இது போக, மீதியுள்ள 584 இடங்களில்
மட்டுமே (26.5%) முஸ்லீம் அல்லாத ஒரு BC
போட்டியிட இயலும். கணக்கிடும்போது
இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கு BC என்று குறிப்பிடும்போது, விதிவிலக்கின்றி
அது எல்லா BCயினரையும் குறிக்காது. NCL BC
எனப்படும் 'முன்னேறிய பகுதி அல்லாத' மற்ற
BCயினரை மட்டுமே குறிக்கும். உயர் வருமானம்
உள்ள BCயினருக்கு BC ஒதுக்கீடு கிடையாது.
அவர்கள் பொதுப்போட்டிக்குரிய இடங்களில்
மட்டுமே போட்டியிட இயலும்.
நீட் தேர்வில் 400 மதிப்பெண்ணுக்கு மேல்
எடுத்தவர்கள் மொத்தம் 740 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு ceteris paribus உறுதியாக இடம்
கிடைக்கும். இவர்களுக்கு கிடைத்த இடம்
போக, மீதியுள்ள இடங்களை 400க்கு குறைவாக
எடுத்தவர்கள் வாய்ப்பு உள்ளது.
எமது முதல்கட்டக் கணிப்பு!
-----------------------------------------------------
1) பொதுவாக, ceteris paribus, நீட்டில் 225 மதிப்பெண்
அல்லது percentile score 75 உள்ள மாணவர்களுக்கு
அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் அரசு
ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
2) 300 மதிப்பெண் அல்லது percentile score 85 உள்ள
மாணவர்களுக்கு அரசுக் கல்லூரி இடங்கள்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.
3) இக்கணிப்பு தோராயமானதே. மாநில அரசு
வெளியிடும் தரவரிசைப் பட்டியல் வந்த
பின்னரே, இன்னும் நெருக்கமான தோராயத்துடன்
(still closer approximation) கணிக்க இயலும்.
4) இது ஒரு OPTIMISTIC கணிப்பு.
தோழமையுடன்,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை.
பின்குறிப்பு: 1) இங்கு மாணவர் என்பது மாணவியர்
மற்றும் 3ஆம் பாலினரையும் குறிக்கும்.
2) CETERIS PARIBUS = other things remaining constant.
(நீதிமன்றத் தீர்ப்புகளாலும் பிற காரணிகளாலும்
நிலைமை மாறக்கூடும்).
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக