MBBS BDS படிப்பில் இடம் கிடைக்குமா?
எமது இரண்டாவது கணிப்பு! (Second Approximation)
முன்னிலும் தெளிவான சித்திரம் மற்றும் கணிப்பு!
பெற்றோர்கள் மாணவர்கள் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1) மாநிலப் பாடத்திட்ட மாணவர்க்கான இடங்களை
மட்டும் இங்கு பரிசீலிப்போம். (TN State Board only)
2) தமிழகத்தில் மொத்த MBBS இடங்கள் = 2867
(அரசு மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின்
அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2203+664=2867)
3) மேற்படி, BDS இடங்கள் = 1011
(அரசு 144+ தனியார் 867=1011)
4) மொத்தம் MBBS+BDS= 2867+1011= 3878 இடங்கள்
5) இந்த 3878 இடங்களும் மாநிலப் பாடத்திட்டத்தில்
படித்த மாணவர்களுக்கு உரிய இடங்களாக
அரசு அறிவித்துள்ளது.
6) இவை போக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்
(MANAGEMENT QUOTA) MBBS மற்றும் BDS 1693 உள்ளன.
அவை கோடிக்கணக்கில் செலவு ஆகக் கூடியவை.
மேலும், இந்த 1693 இடங்களில், சிறுபான்மை சுயநிதிக்
கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான
505 இடங்கள் அனைவருக்குமானவை அல்ல. அவற்றில்
சம்பந்தப்பட்ட சிறுபான்மை இன மாணவர்கள்
மட்டுமே சேர முடியும். எனவே அவற்றை இங்கு
பரிசீலிக்கவில்லை.
7) இந்த 6 பத்திகளில் கூறப்பட்ட விஷயங்கள்
அனைத்தும் மாநிலப்படத்திட்டத்துக்குரிய
இடங்கள் ஆகும். இதை கவனத்தில் கொள்க.
8) CBSE மற்றும் பிற பாடத்திட்டங்களுக்கு உரிய
இடங்களை தனியாகப் பின்னர் காணலாம்.
9) பத்தி 4இல் கூறிய 3878 இடங்களே நமது
பரிசீலனைக்கு உரியவை.
10) இந்த 3878 இடங்களும் 69 சத இடஒதுக்கீட்டின்
பிரகாரம் பின்வருமாறு அமையும்.
அ) பொது (OPEN) = 1202 இடங்கள்
ஆ) பிற்பட்டோர் (BC) = 1163
இ) மிகவும் பிற்பட்டோர் (MBC) = 776
ஈ) தாழ்த்தப்பட்டோர் (SC) = 698
உ) பழங்குடி (ST)= 39
ஆக மொத்தம்= 3878 இடங்கள்.
11) இங்கு BC என்பது வளமான பிரிவினரையும்
(CREAMY LAYER) உள்ளடக்கியது. அதாவது வளமான
பிரிவினரும் BC ஒதுக்கீட்டுக்கு தகுதி உடையவர்கள்
என்பதை கவனத்தில் கொள்ளவும்.
12) நீட் தேர்வை பொதுப் பிரிவில் (UNRESERVED) எழுதிய
வளமான பிற்பட்டோரும் (CREAMY LAYER BC), தமிழக
அரசு மருத்துவச் சேர்க்கையில் BC ஒதுக்கீட்டுக்கு
அருகதை உடையவர்களே.
13) முஸ்லீம் அல்லாத ஒரு BC மாணவருக்கு இடம்
கிடைக்குமா? கணக்கீடு முறை பின்வருமாறு:-
அ) Non Muslim BCக்கு உரிய இடங்கள்= 26.5%
அதாவது, முஸ்லீம் BCக்கு 136 இடங்கள் போக
(1163 minus 136) = 1027 இடங்கள்.
14)இடம் கிடைக்குமா என்பதைப் பொறுத்த மட்டில்,
எமது முந்தைய கட்டுரையில், தெரிவித்த
முதல் தோராயம் (First Approximation) இப்போது
மேலும் உறுதிப் பட்டுள்ளது. இடங்கள் குறித்த
தெளிவான சித்திரத்தை அரசு தந்துள்ளது.
முஸ்லீம் அல்லாத BCக்கு 1027 இடங்கள் உள்ளன.
(MBBS+BDS சேர்த்து அரசு மற்றும் தனியாரின் அரசு
ஒதுக்கீட்டு இடங்கள்). இந்த எண்னிக்கை தமிழக
வரலாற்றிலேயே முதன் முறையாக நான்கு
இலக்கத்தைத் தொட்டு விட்டது. 1027 இடங்கள்!
15) இது போக, ஒரு BC மாணவர் பொதுப்போட்டியில்
உள்ள 1202 இடங்களுக்கும் போட்டியிடலாம்.
அதிகமான மதிப்பெண் எடுத்த மாணவர்கள்
(400க்கு மேல்) உறுதியாக பொதுப்பிரிவில் உள்ள
இடங்களை பெற்று விடுவார்கள். எனவே BC பிரிவில்
போட்டியிடும் மாணவர்கள் 225-340 என்ற மதிப்பெண்
ரேஞ்சில் உள்ளவர்களே. இது மிகவும் பொதுவான
ஒரு அனுமானம்.
12) எனவே எமது கணிப்பு (Second Approximation):
----------------------------------------------------------------------------
தயக்கமில்லாமல் விண்ணப்பியுங்கள்.
இந்த 2017 அட்மிஷனில், OPEN plus BC இடங்களான
2365 இடங்களில் BC மாணவர்கள் உறுதியாக 1800
இடங்களைப் பெறுவார்கள் என்று அடித்துக்
கூறுகிறேன். கடந்த கால அட்மிஷன் வரலாற்றையும்
நிகழ்கால மாற்றங்களையும் கணக்கில் கொண்டு
ceteris paribus இவ்வாறு கணிக்கிறோம்.
அ) Ceteris paribus முஸ்லீம் அல்லாத BC மாணவர்
நீட்டில் 240 மதிப்பெண் எடுத்திருந்தால் கண்டிப்பாக விண்ணப்பிக்கவும். MBBS அல்லது BDS அட்மிஷன்
கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆ) தரவரிசைப் பட்டியலை தமிழக அரசு ஜூலை 14
தேதியன்று வெளியிட்ட பிறகே, இன்னும்
நெருக்கமாகக் கணிக்க முடியும். எனவே இந்தக்
கணிப்பு கடைசி நேர மாற்றத்துக்கு உட்பட்டது.
இ) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக
விண்ணப்பிக்கவும். இடம் கிடைக்கிறதோ
இல்லையோ, கண்டிப்பாக விண்ணப்பியுங்கள்.
ஈ) எமது கணிப்புகளின் CONFIDENCE LEVEL
குறைந்த பட்சமாக 87 சதம் ஆகும். எமது
கணிப்புக்கு நாங்கள் .பொறுப்பேற்கிறோம்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன் (Facebook: Ilango Pichandy)
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
இடம்: சென்னை; தேதி: 26 ஜூன் 2017, IST 1400 hours
**************************************************************** ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக