சனி, 3 ஜூன், 2017

முகநூலில் தீண்டாமை!
எமது கட்டுரைகளைப்
படிக்காதவர்கள் மீது
சமூக உணர்வு மிக்க போராளிகள்
தீண்டாமை அனுஷ்டிப்பது
வரவேற்கத் தக்கது.

மோடி அரசின் மாட்டுக்கறிச் சட்டம்  குறித்த
மூன்றாவது கட்டுரை இது. வாசகர்கள் மற்ற இரண்டு
கட்டுரைகளையும் எனது டைம்லைனில் சென்று
படிக்குமாறு வேண்டுகிறேன்.

அச்சட்டம் மக்கள் மத்தியில் அவ்வாறுதான் அறியப்
படுகிறது. இதுகுறித்த எமது முதல் இரண்டு
கட்டுரைகளைப் படிக்கவும்.

ஆளுகை (governance) ஆட்சி (rule) என்பவற்றைப்
பொறுத்த மட்டில், மூன்று தூண்களே ஆட்சியை
முடிவு செய்கின்றன. சட்டமன்றம், அதிகார வர்க்கம்,
நீதித்துறை (Legislature Executive and Judiciary) ஆகிய மூன்றுமே
அவை. ஒரு சில விஷயங்களில் நீதித்துறை அரசை
எதிர்த்து தீர்ப்புகளை வழங்கினாலும், அடிப்படையில்
அரசுக்கு ஆதரவாகவே  நீதிமன்றம் செயல்படும். இது
நீதிமன்றத்தின் வர்க்கத் தன்மை. எனவே அறிவியல்
ரீதியாக, அறிவியல் கூறுவதை ஏற்றுக் கொண்டு
நீதிமன்றம் தீர்ப்பு வழங்காது. இதுவே அரசு பற்றிய
மார்க்சிய பால பாடம்.
**
நான் போதிக்கின்ற பரப்புகின்ற அறிவியல் மக்களுக்கானது.
அது மக்களிடம் விழிப்புணர்வை. சுதந்திர சிந்தனையை
உருவாக்கப் பயன்படும். இது விழலுக்கு நீர் இறக்கும்
வேலை அல்ல. எமது கடந்த இருபதாண்டு கால
அறிவியல் பணிகள் காரணமாக, அறிவியல் மக்களிடம்
சென்று சேர்ந்துள்ளது. இனியும் சேரும். ஆனால் அவ்வாறு
சேர்ந்த அறிவியலானது  அரசு சார்பு நீதிமன்றங்களின்
தீர்ப்பைத் திருத்தி எழுதும் வல்லமை  உடையதா
என்பதை காலப்போக்கில், வளர்ச்சியின் போக்கில்தான்
கண்டறிய இயலும்..
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக