வெள்ளி, 2 ஜூன், 2017

ஐஐடி மாணவர் சண்டை!
உண்மையில் நடந்தது என்ன?
TNT (Tri Nitro Toulene) கட்டுரை!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
ஓர் அறிவியல் கூட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு
நேற்று (31.05.2017) ஐஐடி சென்றிருந்தேன். கூட்டம்
முடிந்த பிறகு, ஐஐடி  சண்டையில் உண்மை என்ன
என்று அறிய .முற்பட்டேன்.

நூற்றுக் கணக்கிலான ஐஐடி மாணவர்கள் நம்மிடம்,
மின்னஞ்சல், மொபைல் மற்றும் நேரடித் தொடர்பில்
உள்ளனர். ஒரு சில பேராசிரியர்களின் நட்பும் உண்டு.

நமக்குத் தெரிந்த மாணவர்களிடம் முதலில்
விசாரித்தேன். அவர்களில் பலர் சம்பவம் நடந்தபோது
ஸ்தலத்தில் இல்லாதவர்கள். எனவே அவர்கள்
சம்பத்தின்போது ஸ்தலத்தில் இருந்த ஒரு மாணவரிடம்
கூட்டிச் சென்றனர். அவரிடம் பேசினேன்.

பேசிக்கொண்டு இருந்தபோதே வேறு சில மாணவர்கள்
வந்தனர். அவர்கள் சம்பவத்தை நேரில் அறிந்தவர்கள்.
அவர்கள் அனைவரிடமும் கலந்து உரையாடினேன்.
அதன் மூலம் உண்மை என்ன என்பதை உணர
முடிந்தது. அது இதுதான்.

1) கேரள மாணவர் சூரஜ் (வயது 36) என்பவர் தமது
நண்பர்கள் சுமார் 20 பேருக்கு மாட்டுக்கறி விருந்து
கொடுத்துள்ளார்.இது அவருக்கும் அவரின் நண்பர்களுக்கும்
இடையிலான ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஆனால் ஐஐடி
வளாகத்தில் உள்ள  என்ஜிஓ சக்திகள் இதை மோப்பம்
பிடித்து இதைப் பெருமளவில் பிரபலப் படுத்தி
உள்ளனர். சூரஜ்ஜும் அவரின் நண்பர்களுமே
எதிர்பார்க்காத நிகழ்வு இது. 

2) மறுநாள், மாணவர் சூரஜ், ஜெயின் சமூக
மாணவர்களின் சைவ உணவு கவுன்டரை
 ஒட்டியுள்ள சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது
உணவருந்த அங்கு வந்த பீஹாரைச் சேர்ந்த
ஜெயின் சமூக மாணவர், மனிஷ் குமார் சிங்
ஜெயின் (வயது 22) சூரஜ்ஜை, சைவ உணவுக்கான
அந்த இடத்தில் பார்த்து வியப்பு அடைந்துள்ளார்.

"என்னப்பா, நேற்று மாட்டுக்கறி விருந்து நடத்திய
நீ, இன்று சைவ உணவுக் கூடத்தில் சாப்பிடுகிறாயே
என்று .கேட்டுள்ளார். இதற்கு சூரஜ் உடன்
இருந்தவர்கள் மறுமொழி தர, அதைத் தொடர்ந்து
வாக்குவாதம் ஏற்பட்டு  கைகலப்பில் முடிந்துள்ளது.
மாணவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
மனிஷுக்கு கையில் காயம்; சூரஜ்ஜுக்கு கண்ணில்.

மாணவ  சமுதாயத்தைப் பொறுத்த மட்டில், இது
ஒரு சாதாரணமான நிகழ்வு. எளிதில் உணர்ச்சி
வசப் படக்கூடிய இளவயது மாணவர்கள் இது
போன்ற சச்சரவுகளில் ஈடுபடுவதும் பின்னர் அதை
மறப்பதும் இயல்பு.

ஆனால், இரையைக் கொத்தக் காத்திருக்கும் கழுகு
போல, இந்த நிகழ்வை  உற்று நோக்கிக் கொண்டிருந்த
என்ஜிஓ சக்திகள் தங்களுக்குக்  கிடைத்திருக்கும்
இப்பொன்னான வாய்ப்பைத் தவற விடவில்லை.
ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி ஒரு
பிரளயத்தை உண்டு பண்ண முயல்கின்றன.

தங்களின் சம்பளப்  பட்டியலில் உள்ள  கைக்கூலி
ஊடகவியலாளர்கள் மூலம் இப்பிரச்சினையை
ஒரு பக்கச் சார்புடன் மக்களிடம் கொண்டு செல்கின்றன.
இது அவர்களின் அடையாள அரசியல் நலன்களுக்கு 
உகந்தது ஆகும்.

ஏழை எளிய சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள
இறைச்சிக்கூட உரிமையாளர்களின்
வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மோடி அரசின்
சட்டத்தை அம்பலப் படுத்தத் துப்பில்லாமல், இல்லாத
மாட்டுக்கறித் தடையை இருப்பதாகச் சொல்லி
என்ஜிஓ சக்திகள் மக்களை திசை திரும்புகின்றன;
காற்றோடு கத்திச் சண்டை இடுகின்றன.

மக்களின் வர்க்க ரீதியான  அணிசேர்க்கையைத்
தடுப்பதும், மீண்டும் மீண்டும் அடையாள அரசியல்
புதைசேற்றில் மக்களைத் தள்ளுவதும் இந்த
என்ஜிஓ சக்திகளின் வேலை.

ஐஐடியில் பணியாற்றும் ஒரு பார்ப்பனப்
பேராசிரியர்தான் என்ஜிஓக்களின் கைக்கூலியாகச்
செயல்பட்டு வருகிறார் என்பதும் எமது விசாரணையில்
தெரிய வந்தது. ஒரு போலியான  மார்க்சிய அமைப்பின்
ஆதரவாளர் இந்தப் பேராசிரியர்.

இந்தச் சண்டையில்  சம்பந்தப்பட்ட இரு மாணவர்களுமே
எவ்வித அரசியல் கட்சி சார்பும் அற்றவர்கள். சுருங்கக்
கூறின். எல்லா  மேல்தட்டு மாணவர்களையும் போல
அரசியலற்ற போக்கு உடையவர்கள் (apolitical).
ஐஐடி வளாகத்தில் இல்லவே இல்லாத, SFI, AISF, ABVP
போன்ற எந்த வலதுசாரி மற்றும் இடதுசாரி
சங்கங்களுடனும் தொடர்பற்றவர்கள். ஒரு
சாதாரண நிகழ்வை என்ஜிஓ சக்திகள் மக்கள்
விரோதச் செயலாக மாற்றி விட்டன.

பீகார் மாணவர் மனிஷ் மிகவும் பாதுகாப்பற்ற
உணர்வுடன் இருந்து வருகிறார். தமிழகத்தின்
IQ குறைந்த தலைவர்களின் ஆதரவைப் பெற்றதில்
சூரஜ் ஓரளவு நிம்மதியுடன் இருக்கிறார். மனிஷ்,
சூரஜ் என்று கோஷ்டி சேராமல், இருவரையுமே
சமரசப் படுத்துவது நல்லவர்களின் கடமை.  

ஐஐடி வளாகத்தில் இருந்து என்ஜிஓ சக்திகளை
அப்புறப் படுத்தாமல், கல்வி நிலையங்களில்
அமைதி நிலவாது. இதை மோடி அரசு செய்யாது.
எனவே மக்களே அதைச் செய்ய வேண்டும்.
***********************************************************        
          



1) பிடெக் எம்டெக் போன்ற படிப்புகள் இளவயதில்
படிக்கப் படுபவை. ஆனால் சூரஜ் படிப்பது
பிஹெச்டி என்பதால், அதற்கு வயது வரம்பு இல்லை.
2) ஐஐடியில் உள்ள ஹிமாலயன் லான் என்ற இடத்தில்
சூரஜ் தன்  நண்பர்களுக்கு மட்டுமே மாட்டுக்கறி
விருந்து கொடுத்தார், இதை என்ஜிஓ சக்திகள்தான்
வெகுவாகப் பிரபலப் படுத்தின. சூரஜ் பிரபலப்
படுத்தவில்லை.
3)   சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் கழுகுகள்
(IQ குறைந்த தமிழக அரசியல்வாதிகள்) இந்த
அரிய வாய்ப்பை பயன்படுத்தாமல் விடுவார்களா?
இதற்கு சூரஜ் என்ன செய்ய முடியும்? தற்போது அவர்
சூழ்நிலையின் கைதி ஆகி விட்டார். இனி அவரை
ஒரு கட்சியில் சேர்ப்பார்கள்.
4) :விளைவு: எல்லா இடங்களிலும் மாட்டுக்கறி விருந்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக