ஞாயிறு, 4 ஜூன், 2017

குவான்டம் விசையியலைப் புரிந்து கொள்ள....
----------------------------------------------------------------------------------
நியூட்டன்  அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
குவான்டம் விசையியலைப் புரிந்து கொள்ள
சில எளிய அடிப்படைகளைத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.

நியூட்டனின் இயற்பியலில் எல்லாமே
முன்தீர்மானிக்கப் பட்டது. (pre determined)
நியூட்டனின் சமகாலத்தவரான லாப்லேஸ்
படுபயங்கர முன்தீர்மானவாதியாக இருந்தார்.
அவரிடம் நியூட்டனின் தாக்கம் மிக .அதிகம்.

குவான்டம் விசையியலில் இது கிடையாது.
உறுதியாக இந்த நிகழ்வுதான் நடக்கும் என்று
குவான்டம் இயற்பியல் .கூறுவதில்லை. மாறாக,
பல்வேறு வாய்ப்புகளில் ஏதாவது  ஒன்றுதான்
நிகழும் என்கிறது குவான்டம் இயற்பியல். எந்த
ஒன்று என்பதை முன்னரே  தீர்மானிக்க முடியாது
என்கிறது கு.இ.

ஒரு பகடையை உருட்டுகிறீர்கள். சகுனி உருட்டிய
பகடைதான். 5 விழுகிறது.

5 விழுவது என்பது ஒரு  நிகழ்வு (event). ஒவ்வொரு
நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்
என்பது நமது பொதுப்புத்தி (common sense).
அப்படியானால், 5 விழுவதற்குக் காரணம் என்ன?

ஒரு காரணமும் இல்லை அல்லவா? இதே போல,
கதிரியக்கச் சிதைவை (radioactive decay) எடுத்துக்
கொள்ளுவோம். பொதுவாக 82க்குப் பின்னரான
தனிமங்கள் கதிரியக்கச் சிதைவு அடையக்
கூடியவை. இங்கு 82 என்பது அணுஎண் 82ஐக்
கொண்ட காரீயத்தைக் குறிக்கும் (Lead).

கதிரியக்கச் சிதைவை அடையும் ஒரு தனிமம்
நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம்.
அந்த சாம்பிளில் 100 அணுக்கள் இருப்பதாக
வைத்துக் கொள்ளுவோம். ஒவ்வொரு அணுவுக்கும்
1 முதல் 100 வரை எண்கள் கொடுத்து, அடையாளப்
படுத்தி வைத்திருப்பதாகக் கருதுவோம். ஒரு
நிமிடத்துக்கு ஒரு அணு வீதம் சிதைவடைவதாகக்
கருதுவோம்.

10ஆவது நிமிட ஆரம்பத்தில் எந்த அணு சிதையும்
என்று எவராலும் முன்கணிக்க முடியுமா?
48ஆவது அணு சிதையலாம். அல்லது 82ஆவது
அணு சிதையலாம். அல்லது 13ஆவது அணுவும்
சிதையலாம்.

சிதையும் என்பதுதான் உறுதியே தவிர, எந்த அணு
எப்போது சிதையும் என்று முன்கணிக்க முடியாது.

10ஆவது நிமிட ஆரம்பத்தில், 48ஆவது அணு
சிதைகிறது என்று கொள்ளுவோம். இது ஒரு
நிகழ்வு (event). இது நிகழக் காரணம் என்ன?
What has caused the decay of 48th atom?

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்க
வேண்டும் அல்லவா? காரண-காரியப்  பொருத்தம்
உலகில் உள்ளதா இல்லையா?(cause and effect relationship).
எனில், 10ஆவது நிமிட ஆரம்பத்தில் 48ஆவது அணு
சிதைந்ததன் காரணம் என்ன? எக்காரணமும்
இல்லை என்பதுதானே உண்மை!

பின்குறிப்புக்கள்:
-------------------------------
1) இக்கட்டுரையில் குவான்டம் விசையியலை நான்
விளக்கவில்லை. அதைப் புரிந்து கொள்ள வசதியாக
சில விளக்கங்களைத் தந்துள்ளேன்.

2) வழக்கமாக நான் எழுதும் rigorous standard
அடிப்படையில் இக்கட்டுரை எழுதப் படவில்லை.
Science chat என்ற அடிப்படையில்தான் எழுதியுள்ளேன்.

3) நியூட்டனின் இயற்பியல் CERTAINTIES பற்றிப்
பேசுகிறது. குவான்டம் இயற்பியலில் CERTAINTIES
கிடையாது. அதற்குப்  பதிலாக PROBABILITIES தான்
உண்டு.

4) குவான்டம் விசையியலில் CAUSE AND EFFECT
கிடையாது.

5) இப்பொருள் குறித்த எமது முந்திய கட்டுரையைப்
படிக்கவும்.

6) அடுத்து கஸிமிர் விளைவு (Cassimer effect)பற்றிப்
பார்ப்போம்.

7) Non science அன்பர்களும் புரிந்து கொள்ள ஏதுவாக
மிக எளிமையாக இக்கட்டுரையை எழுதி
இருக்கிறேன்.படியுங்கள்!
**************************************************************   
மெதுவான நியூட்ரான்கள், வேகமான நியூட்ரான்கள்
என்ற வகைமை உண்டு. தேவைக்கேற்ப அவை
பயன்படுத்தப் படும். 82க்குப் பின்னரான தனிமங்கள்
யாவுமே .நிலையற்றவை. எனவே அவை கதிரியக்கச்
சிதைவுக்கு ஆட்படுவது இயல்பே. யுரேனியங்கடந்த
(transuranic) தனிமங்களின் பீட்டா சிதைவில் காரண-காரியப்
பொருத்தம் இல்லை என்று நீங்கள் கூறுவதாகவே
நான் எடுத்துக் கொள்கிறேன். நான் இங்கு பேசுவது
quantum physics: நீங்கள் பேசுவது Nuclear physics, உங்களின்
வலைப்பூவின் கட்டுரை காத்திரமானது. நிதானமாகப்
படிப்பேன். நிற்க.
**
காரண-காரியப் பொருத்தம் குறித்தும் QM குறித்தும்
கருத்துக் கூறவும்.
      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக