வெள்ளி, 9 ஜூன், 2017

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமாக AITUC
தொடங்கப்பட்டது 1920இல். லாலா லஜபதி ராய்
அதன் முதல் தலைவர். அதற்கும் முன்னதாகவே
MLU (Madras Labour Union) சென்னையில் 1917ஆம்
ஆண்டிலேயே தொடங்கப்பட்டு இருந்தது. திருவிக, சர்க்கரைச்செட்டியார், பி பி வாடியா ஆகியோர்
இச்சங்கத்தை வளர்த்து எடுத்தனர். 1926இல்
இந்தியாவில் Indian Trade Union Act 1926 கொண்டு
வரப்பட்டது. இன்னும் நிறையச் சொல்ல இயலும்.
இவையெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட ஒரு சிலரின்
துளிப் பங்களிப்பும் இன்றி, எஸ் ஏ டாங்கே போன்ற
கம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்களிப்பாலும் 
மகத்தான  நவம்பர் புரட்சியின் தாக்கத்தாலும்
விளைந்தவை.
**
நீங்கள் குறிப்பிட்ட சிலரின் எதிர்மறைப் பங்களிப்பு
பற்றிய வரலாறு இருக்கிறது. அவற்றைப் பற்றிப்பேசி
விவாதத்தை வீணே வளர்த்த விரும்பவில்லை. நன்றி.

ஜமாலன் அவர்களுக்கு,
1) point to point rebuttal கொடுக்க முடியும் என்ற உங்களின்
கருத்தை வரவேற்கிறேன். தொழிற்சங்க வாழ்க்கையில்
 point to point rebuttal குறித்து அடிக்கடி அனுபவம் பெற்றவன்.
ஆனால் ஒரு நீதிமன்றத்தில் வாதாடுகிற தொனியில்
வாதிட வேண்டிய தேவை நம் இருவருக்குமே இல்லை.
எனவே ஒரு hostile atmosphereஐ வலிந்து உருவாக்குவது
தேவையற்றது என்பது என் கருத்து. ஒரு killer instinctஉடன்
நான் வாதிட விரும்பவில்லை. எனவே விவாதத்தின்போது
மனதின் சமநிலையைப் பாவிப்பதில் எனக்கு எந்தக்
கஷ்டமும் இல்லை. நிற்க.
**
பியூசி படித்த 18 வயது முதல் இந்த 64 வயது
வரையிலான, மார்க்சியத்தைப் பிரயோகித்துப்
பார்த்த என் செயல்பாடு அனுபவம் ஆகியவற்றின்
அடிப்படையில் நான் உணர்ந்த தெளிந்த
சரியென்று நம்புகிற கருத்துக்களை இங்கு
முன்வைத்துள்ளேன்.
**
இந்திய அரசியல் குறித்த எனது பார்வை, நான்
ஏற்றுக்கொண்ட மார்க்சிய லெனினிய மாவோ
சிந்தனையில் இருந்து பிறந்தது. அதே போல
இந்திய அரசியல் குறித்த தங்களின் பார்வையானது,
தாங்கள் நம்புகிற தத்துவத்தின் அடிப்படையில்
அமைந்தது என்று நான் கருதுகிறேன்.
**
இருவேறுபட்ட தத்துவங்கள் இருவேறு உலகப்
பார்வைகளை வழங்குகின்றன. இதில் தனிப்பட்ட
மன மாச்சரியங்களை வலிந்து உருவாக்குகிற
தேவை எனக்கில்லை. என்னுடைய பார்வை
தங்களுக்கு ஏற்புடைத்தாக இல்லை என்பதற்காக
நான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள்
விரும்புகிறீர்கள்?
**
தங்களின் கட்டுரையின் முதல் அம்சமாக, தாங்கள்
கூறியவற்றை எடுகோளாக எடுத்துக் கொண்டு
அதன் மீதான என் கருத்துக்களைக் கூறியுள்ளேன்.
தாங்கள் கூறாத எதையும் தங்களின் கூற்றாக
எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை.
jugglery of words போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இதோ நீங்கள் கூறியது:-    
    

தா பாண்டியனை மிஞ்சும்
திருமாவின் அருள்வாக்கு!
தமிழ்நாட்டை தமிழனே
ஆள வேண்டும் என்ற
கோரிக்கை இங்கு எடுபடாது!



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக