வெள்ளி, 16 ஜூன், 2017

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை
சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது!
உள்மர்மம் என்ன?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) மலைப் பகுதி மற்றும் கடினமான பகுதிகளில்
(hilly and difficult areas) அரசு மருத்துவ மனைகள் உள்ளன.
இங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு MD, MS 
சேர்க்கையில் எடையூட்டு மதிப்பெண் (weightage)
வழங்க வேண்டும். இதுதான் சட்டம்.

2) மலைப்பகுதி மற்றும் கடினமான பகுதிகளுக்கு
மட்டுமே வழங்காமல், நகர்ப்புற மற்றும்
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு
மருத்துவமனைகளில் பணியாற்றும்
மருத்துவர்களுக்கும் எடையூட்டு மதிப்பெண்களை
வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

3) தற்போது இவ்வாறு முறைகேடாக வழங்கப்பட்ட
மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்ற
மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் ரத்து
செய்துள்ளது.

4) முன்னதாக, ஒவ்வொருவரிடம் இருந்தும் அவரின்
ஒரு மாதச் சம்பளத் தொகையைப் பெற்று,
தேவையான 5சி திரட்டி, உரிய அதிகாரம்
படைத்தவரிடம் வழங்கப் பட்டது என்று கூறப்படுகிறது.. பெற்றுக்கொண்டவர் 
மாவட்டத்து தலைநகரங்களில் பணியாற்றுவோருக்கும்
எடையூட்டு மதிப்பெண் வழங்கினார். இடம் கிடைத்தது.

5) இப்போது அவரிடம் போய், 5சியை திருப்பிக்
கொடுங்கள் என்று எவரும் கேட்க இயலாது.
ஆனால் முறைகேடாக மதிப்பெண்கள் பெற்று,
இடம் கிடைத்து, ஹாஸ்டலிலும் அட்மிட் ஆகி,
இப்போது சீட் இல்லை என்று நீதிமன்றம்
சொல்லும்போது, காலுக்கடியில் பூமி
நழுவுவது நடக்கத்தான் செய்யும்.

6) பாதிக்கப்பட்ட மாணவர்கள் அன்றே நீதிமன்றத்தை
நாட முடிவு செய்தனர். இன்றைய  தீர்ப்பில்
அவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
***************************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக