வெள்ளி, 2 ஜூன், 2017

பண்பாட்டு அம்சங்களில்
மோடி அரசின் மாட்டுக்கறிச் சட்டம்
ஏற்படுத்தும் தாக்கம்  என்ன?
டைனமைட் கட்டுரை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
1) மாட்டு இறைச்சி உண்பதற்கு மோடி அரசு தடை
எதுவும்  விதிக்கவில்லை என்பதை முன்னரே பார்த்து
விட்டோம்.

2) சில்லறை வர்த்தகம் என்ற அளவில்
மாடு அறுக்கும் சிறு சிறு இறைச்சிக் கூடங்களை
நடத்திப் பிழைப்பவர்களின் வாழ்வாதாரம் மோடி
அரசின் இச்சட்டத்தால் முற்றிலும் பாதிக்கப்
பட்டுள்ளது என்பதையும் முந்திய கட்டுரையில்
பார்த்தோம்.

3) தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி ஒரு பிரதான உணவாக
இல்லை. அதற்கேற்ப இங்கு மாடறுப்புக் கூடங்களும்
சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே
தமிழ்நாட்டில் வசிக்கும் சராசரித் தமிழர்களால்,
மோடி அரசின் இச்சட்டம் எத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தும் என்பதை சொந்த அனுபவத்தின்
மூலம் உணர வாய்ப்பில்லை. படித்துத்தான் தெரிந்து
வேண்டும்.

4) உபி, அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களைக்
கருதுவோம். குறிப்பாக உபியை எடுத்துக் கொள்வோம்.
இங்கு பல சமூக மக்களும் மாட்டுக்கறி உண்கின்றனர்.

5) சுமார் 15,000 பேர் வசிக்கும், உபியின் ஒரு  ஊரை
எடுத்துக் கொள்ளுங்கள். 15,000 மக்கள் தொகை
உள்ள ஊர் நம் தமிழ்நாட்டில் ஒரு நகரப் பஞ்சாயத்து
ஆகும். உபியில் இது போன்ற சின்னஞ்சிறு
ஊர்களில் எல்லாம் ஒரு மாடறுப்புக் கூடம்
இருக்கும். அதை ஒரு சிறிய  வியாபாரி நடத்துவார்.

6) சந்தையில் சென்று மாடு பிடித்து வருவது, மாட்டுத்
தரகர்களிடம் மாட்டை விலைக்கு வாங்குவது,
விவாசாயிகள் விற்கும் மாடுகளை வாங்குவது
என்று மாட்டுக் கொள்முதலை இந்தச் சிறு
வியாபாரி செய்வார். வாங்கிய மாடுகளை
தமது மாடறுப்புக் கூடத்தில் அறுத்து, இறைச்சியை
கசாப்புக் கடை வியாபாரிகளுக்கு வழங்குவார்.

7) உபியில் எல்லா மாவட்டங்களிலும், மேற்கூறியபடி,
பல்வேறு சிறு சிறு ஊர்களில் எல்லாம் இத்தகைய
மாடறுப்புக் கூடங்கள் உண்டு. இவற்றை நடத்துபவர்கள்
பெரும்பாலும் சில்லறை வியாபாரிகளே. பல லட்சக்
கணக்கான சிறு சிறு மாடறுப்புக்கூட
உரிமையாளர்களின் பிழைப்பு இப்படிப் பட்டதுதான்.
இதுதான் அவர்களின் வாழ்வாதாரம். உபியின்
பொருளாதாரத்தில் ஒரு பங்கு இதன் மூலமாகத்தான்.

8) இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போர்  மிகுதியும்
முஸ்லிம்கள்.மேலும் தலித்துகள், கீழடுக்கில்
உள்ள இடைநிலைச் சாதிகள், கீழ்த்தட்டு சீக்கியர்கள்
என்று பிறரும்  இத்தொழிலை நம்பி உள்ளனர்.

9) மோடி அரசின் சட்டம் முழுவீச்சில் நடைமுறைக்கு
வரும்போது, மேற்கூறிய அத்தனை பேரும்,
தங்களின் வாழ்வாதாரத்தை  இழந்து ஒரே நாளில்
தெருவுக்கு வந்து விடுவார்கள்.

10) மாடறுப்புத் தொழிலில் இருந்து இவர்களை
அப்புறப் படுத்திய பிறகு, சிறு சிறு மாடறுப்புக்
கூடங்கள் ஒழிக்கப்பட்டு விடும். அதற்குப் பதிலாக,
பேரளவிலான நிறுவனமயப் பட்ட  நிறுவனங்களும்
கார்ப்பொரேட் நிறுவனங்களும் இத்தொழிலைத்
தங்கள் வசம் எடுத்துக் கொள்வார்கள்.

11) சுருங்கக் கூறின், குடிசைத் தொழில் தன்மையில்
நடந்து வந்த மாடறுப்புத் தொழில் பெரும்
நிறுவனங்களிடம் போய் விடும். அவர்கள் பெரும்
பொருட்செலவில்   மாடறுப்புக் கூடங்களை
நிறுவுவார்கள். நவீன எந்திரங்களைப் பயன்படுத்தி
மாடறுப்பு நடைபெறும். குளிர்பதன நிலையங்களும்
நிறுவப்படும். இந்தப் பெரு நிறுவன முதலாளிகளிடம்
மாடறுப்புக்கூட உரிமையாளர்கள் அத்துக்கூலியாகச்
சேர வேண்டிய நிலை ஏற்படும்.

12) அப்படிச் சேர்வதற்கு எல்லாரும் தயாராக
இருந்தாலும், பெரு நிறுவனங்கள் அவர்களில்
ஒரு மிகச் சிறு பகுதியினரை மட்டுமே சேர்த்துக்
கொள்வார்கள். ஏனெனில் இத்தொழில் முற்றிலும்
நவீனமயம் ஆகி விடுவதால், அதற்கேற்ற
நவீனமான கல்வி கற்ற, இயந்திரங்களை இயக்கத்
தெரிந்த திறன் வாய்ந்த (skilled labourers) ஒரு சிலருக்கு
மட்டுமே வேலை கிடைக்கும்.

13) இதன் விளைவாக  பெருவாரியான மக்கள்
வேலையிழப்பார்கள். நேற்று வரை தங்கள்
சொந்த மாடறுப்புக் கூடங்களின் அதிபர்களாக
வலம் வந்த அனைவரும் ஒரே நாளில் வேலையிழந்து
வீதிக்கு வந்து விடுவார்கள்.

14) மாடு கொள்முதல், மாடு விற்பனை,மாடு அறுப்பு
என்று ஒட்டு மொத்தத் தொழிலும் பெரு
நிறுவனங்களிடம் போய்விடும். சில்லறை
விற்பனை செய்யும் கசாப்புக் கடைக்காரர்கள்
இனிமேல் இந்தப் பெரு நிறுவனங்களிடம்
இருந்துதான் இறைச்சியைப் பெற முடியும்.

15) இத்தொழில் உள்ள படுமோசமான சுகாதாரக்
கேடுகளும், சூழலை மாசு படுத்துவதும் முற்றிலும்
இல்லாமல் போய்விடும் என்றும் மாடறுப்புத்
தொழிலை நவீனமயம் செய்கிறோம் என்று
சொல்கிறது மோடி அரசு.

16) நல்லது மோடி பெருமகனாரே, இதனால்
வாழ்வாதாரத்தை இழக்கும் பல லட்சக் கணக்கான
சில்லறை வியாபாரிகளின் பிழைப்புக்கு  என்ன
மாற்று ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள்?

17) ஒரு மயிரும் இல்லை என்பதுதானே உண்மை!
முஸ்லிம்கள் வாழ்வாதாரத்தை இழந்தால்
எங்களுக்கு என்ன என்பதுதானே உங்களின்
எண்ண ஓட்டம்?

18) இந்த விபரீதமான சிந்தனை சமூகத்தின்
சமநிலையைக் குலைத்து விடும். வேலையில்லாப்
பட்டாளம் பெருகும்போது, சமூக விரோதக்
செயல்களும் குற்றங்களும் பெருகும். வெவ்வேறு
மதம் சார்ந்த மக்களுக்கு இடையில் நிலவும்
வகுப்பு சௌஜன்யம் சீர்குலைந்து விடும்.
கலவரச் சூழலானது  நிரந்தரமாக  சமூகத்தில்
நிலை கொண்டிருக்கும்.

19) இன்னும் பல்வேறு எதிர்மறை விளைவுகள்
ஏற்படும். அவற்றை எல்லாம் இக்கட்டுரையில்
விவரிக்க இயலாது.

20) எனவே மாண்புமிகு மோடி அவர்களே,
இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யுஙகள்.
மெய்யான தேச பக்தர்களும், மெய்யான
இடதுசாரி ஜனநாயக சக்திகளும் இது விஷயத்தில்
மோடி அரசுக்கு வலுவான நிர்ப்பந்தம் கொடுக்க
முன்வர வேண்டும். வெறுமனே மாட்டுக்கறி
உண்ணும் நிகழ்வுகளை நடத்துவதால் எப்பயனும்
இல்லை.
------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இக்கட்டுரையில் மாடறுப்பு என்பது
பிற பெரிய விலங்குகளை (ஒட்டகம்) அறுப்பதையும்
சேர்த்துக் குறிக்கும்.
********************************************************   

  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக