செவ்வாய், 20 ஜூன், 2017

அறிவியல் கட்டுரை என்பது
குஷ்டரோகியின் சுயஇன்பம் அல்ல!
(ஆரியர் வருகை குறித்த விவாதம்;
கட்டுரையின் இரண்டாம் பகுதி)
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
ஒரு குஷ்டரோகி என்ன நினைப்பானாம் என்றால்,
தனக்கு வந்தது போல எல்லோருக்கும் குஷ்டரோகம்
வர வேண்டும்  என்று நினைப்பானாம். கட்டுரையாளர்
திரு டோனி ஜோசப் மேற்கூறிய குஷ்டரோகியின்
மனநிலையில்  இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
அவர் தம்மை இந்த மண்ணின் மைந்தராகக்
கருதவில்லை போலும்! ஒரு வந்தேறியின்
உளவியலை அவர் தம் சிந்தனைக்குள் கட்டுமானம்
செய்திருக்க வேண்டும்.

எனவே இந்திய மக்கள் எவருமே இந்த மண்ணின்
மைந்தர்கள் அல்ல.ஒருவர் பாக்கி இல்லாமல்  எல்லோருமே  வந்தேறிகள் என்று  திரு ஜோசப்
கூறுகிறார். (பார்க்க: கட்டுரையின் கடைசி வாக்கியம்:
"We are all migrants"). இது எவ்விதத்திலும் உண்மை அல்ல.

திரு ஜோசப் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்:
--------------------------------------------------------------------------
இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் மக்களாகிய
நாம் ஒரு ஒற்றை மூலத்தில் இருந்து தோன்றியவர்கள்
அல்ல; மாறாக பல்வேறு மூலங்களில் இருந்து
தோன்றியவர்கள். நமது பண்பாட்டின் கூறுகள்,
நமது பாரம்பரியம், நமது செயல்பாடுகள்  ஆகிய
அனைத்துமே இந்த மண்ணில் நாம் சொந்தமாக
உருவாக்கியதல்ல. மாறாக, வெளியில் இருந்து
இங்கு குடியேறிய பல்வேறுபட்ட இன மக்களிடம்
இருந்து பெற்றதாகும்.      

திரு ஜோசப் மேலும் கூறுகிறார்:
--------------------------------------------------------
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  ஆப்பிரிக்காவில்
இருந்து வெளியேறிய மக்கள்தான் முதன் முதலில்
இந்தியாவுக்கு வந்தவர்கள். இந்தப் பிரதேசத்தையை
அவர்கள்தான் முதலில்  கண்டறிந்து குடியேறியவர்கள்.
பின்னர் வெளியில் இருந்து வந்தவர்கள் வேளாண்மை
உத்திகளுடன் இங்கு வந்து சிந்து சமவெளி  நாகரிகத்தை
உருவாக்கினர். பின்னர் கிழக்கு ஆசியாவில் இருந்து
வந்தவர்கள் நெல் சாகுபடி முறையுடன் வந்து
இங்குள்ளவர்களுக்கு நெல் சாகுபடியைக் கற்பித்தனர்.
பின்னர் வந்தவர்கள் சமஸ்கிருதம் என்ற
மொழியுடனேயே இங்கு வந்தனர்.

இவ்வாறு உளறிக்கொண்டே போகிறார்.
(பார்க்க: அவரின் கட்டுரையின் கடைசிப் பத்தி).
திரு ஜோசப் முன்வைக்கும் கருத்துக்களில் பலவும்
எவ்வித ஆதாரமும் அற்ற அபத்தமான பொய்கள்
என்பதை விளக்கிச் சொல்லிப் புரிய வைக்க
வேண்டிய தேவை இல்லை. (They are self explanatory)

இந்தக் கட்டுரையை அறிவியல் கட்டுரையாக
ஆங்கில இந்து ஏடு  வகைப் படுத்தி உள்ளது.
உண்மையில் இது ஒரு அரசியல் கட்டுரை.
இதில் அறிவியல் ஆதாரங்கள் குறைந்த அளவில்
கூடத் தரப்படவில்லை. குறியீடு நீக்கம் (decode)
செய்யப்பட்டு, சந்ததித் தகவல்கள்  எழுதப்பட்ட
சாம்பிள் பற்றிய தேவையான போதிய விவரங்களை
வேண்டுமென்றே கட்டுரையாளர் தவிர்த்துள்ளார்.

எந்த ஒன்றுக்குமே  உறுதி செய்யும் ஆதாரங்கள்
(corroborating evidence) இல்லை. 'மக்கள்தொகை மரபியல்'
(population genetics) என்பதே ஒரு தோராயம்தான்
என்பதால், வேறெந்தத் துறையையும் விட,
இங்கு உறுதிசெய்யும் ஆதாரங்கள்
அவசியமானவை. தொல்லியல் சான்றுகள்,
இலக்கியச் சான்றுகள், மானுடவியல் சான்றுகள்
போன்ற எவற்றாலும் திரு ஜோசப்பின் கூற்றுகள்
உறுதி செய்யப் படவில்லை. தமது கூற்றுகளை
நியாயப் படுத்தும் எவ்விதமான வலுவான
தர்க்கங்களையும் கட்டுரையாளர்
முன்வைக்கவில்லை. எனவே இது அறிவியல்
கட்டுரையே அல்ல.

தமிழன் மானுட இனத்தைச் சேர்ந்தவன் என்றே திரு
ஜோசப் கருதவில்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட
சாம்பிளில் தமிழர்களிடம் இருந்து எத்தனை
சாம்பிள்கள் பெறப்பட்டன என்பதை திரு ஜோசப்
விளக்குவாரா?

பஃறுளி ஆறு என்ற ஒன்று இருந்தது பற்றி திரு
ஜோசப்புக்கு என்ன தெரியும்? கடல் கொண்ட
கபாடபுரம் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா?

"பஃறுளி  ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்ற இலக்கிய வரிகள் உணர்த்தும் வரலாறு
பற்றி திரு ஜோசப் என்ன அறிவார்?

செயற்கைக்கோள் புகைப்படங்கள் எடுப்பதன்
மூலம், அவற்றை ஆய்வு செய்வதன் மூலம்
கடல்கொண்ட பண்டைத்  தமிழகம் பற்றி
அறிந்து கொள்ள வேண்டாமா? தென் தமிழகக்
கடலுக்குள் தோண்ட வேண்டாமா? தமிழ்நாட்டில்
பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள
வேண்டாமா? இத்தகு ஆராய்ச்சிகளின் விளைவாகப்
பெற வேண்டிய அந்த அறிவைப் பெறாமல் மானுட
இனம் பற்றிய சரியான எந்த முடிவுக்கும் எவரேனும்
வந்திட இயலுமா?

சமஸ்கிருதம் வெளியில் இருந்து இங்கு
கொண்டுவரப்பட்ட மொழி என்றால், அதன்
தாயகம்தான் எது? மொழியியல் அறிஞர்களின்
பார்வைக்கு இது முற்றிலும் முரண்பட்டது
அல்லவா? நோபல் பரிசு பெற்ற மொழியியல்
அறிஞர் நோம் சாம்ஸ்கியின் கருத்துக்களோடு
இது நூறு சதம் முரண்படவில்லையா?

திரு ஜோசப் அவர்களே,
கேள்விகள் தங்களின் விடைகளுக்காகக்
காத்திருக்கின்றன. எந்தக் கேள்விக்கும்
விடையளிக்காமல், எந்தத் தர்க்கத்தையும்
முன்வைக்காமல், ஆரியர் வருகை பற்றிய
புதிரை விடுவித்து விட்டேன் என்று தாங்கள்
சுயஇன்பம் அனுபவிப்பது அருவருப்பைத் தருகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனமே
தோன்றவில்லையா? அதற்கான சாதகமான
புவியியல் சூழலே இங்கு இல்லையா? இதை
கட்டுரையாளர் திரு ஜோசப் அவர்கள் அறுதியிட்டுக்
கூறி நிரூபிப்பாரா? பஃறுளி ஆறு என்பது கற்பனையா? 

புதிர்கள் நீடிக்கின்றன. என்றாலும் இந்த
மரபினப் புதிர்களை எதிர்கால மானுடம்
விடுவிக்கும்.

"வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா."
-------கம்பர்.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தொடரும்...கட்டுரையின் மூன்றாம் பகுதி
அடுத்து வெளிவரும். அது அறிவியல் செய்திகளை
உள்ளடக்கியதாக இருக்கும்.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக