வியாழன், 8 ஜூன், 2017

எலியும் தவளையும் இணைய முடியுமா?
----------------------------------------------------------------------
தோழர் ஜமாலன் அவர்களுக்கு,
**
1) தங்களது முன்வைப்புகள் ஒரு நல்லெண்ண
சமிக்ஞையின் (bonafide intention) இயல்பான  வெளிப்பாடு
என்பது வரவேற்கத் தக்கது.
**
2) பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய
 சக்திகளின் செயல்பாட்டு ஒற்றுமையை
(functional unity) தாங்கள் வலியுறுத்துகிறீர்கள்.
**
3) தாங்கள் கூறும் செயல்பாட்டு  ஒற்றுமையானது
தொழிற்சங்க அரசியலில் மிகப் பலமுறை
பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டு வெற்றி கண்ட ஒன்று.
இடதுசாரித் தொழிற்சங்களுடன் காங்கிரசின்
INTUC, பாஜகவின் BMS ஆகிய சங்கங்கள், ஒரு
ஒற்றுமையைக் கட்டி, கோரிக்கைகளுக்காக
ஒன்றாகப் போராடி வெற்றி பெற்ற அனுபவங்களை
அன்றாடம் தொழிற்சங்கத்தில் காணலாம்.
**
4) ஆனால் இந்திய அரசியல் என்பதைத் தாங்கள்
தொழிற்சங்க அரசியலாகக் குறுக்கி விடுகிறீர்கள்.
இது ஒரு குறைத்தல்வாதம் ஆகும் (Reductionism).
**
5) இதன் மூலம், இந்தியா ஒரு பலதேசிய இனங்களின்
ஒன்றிணைவு என்பதையும், பன்மைத்துவமும்
பாரதூரமான பல்படித்தான போக்கும் (heterogeneous)
இந்திய அரசியலில் கையாளப்பட வேண்டியதுள்ளது
என்பதையும் தாங்கள்  வசதியாக மறந்து
விடுகிறீர்கள்.
**
6) செயல்பாட்டு ஒற்றுமைக்கான  அத்தியாவசியமான
முன்நிபந்தனையாக கோட்பாட்டு ஒற்றுமை
அல்லது சித்தாந்த ஒற்றுமை உள்ளது என்பதை
மறந்து விட்டுப் பேசுவது இயலாது.
**
7) அடையாள அரசியல் சக்திகளும், அடையாள
அரசியலுக்கு எதிரான வர்க்க அரசியல் சக்திகளும் 
எப்படி இணங்கி வர முடியும்? இது எலியும் தவளையும்
கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு ஓரிடத்துக்குச்
செல்ல முயல்வது போன்றதல்லவா?
**
8) இருக்கின்ற அரசியல் வெளி முழுவதையும் நீக்கமற
நிறைந்து கொண்டு  அடையாள அரசியலும்
என்ஜிஓ அரசியலும் அடைத்துக் கொண்டுள்ள
நிலையில் மார்க்சிய அரசியலுக்கு வெளி (space) ஏது?
**
9) இந்நிலையில் மீண்டும் அடையாள /என்ஜிஓ
அரசியல் சக்திகளுடன் கரம் கோத்துச்  செயல்படுவதால்
மார்க்சியம் என்ன விதத்தில் ஆதாயம் அடையும்?
அடையாள அரசியல்  ஜோதியில் மார்க்சியம்
கலப்பதுதானே நிகழும்!
**
(10) வர்க்க அணிசேர்க்கையை  சாத்தியமற்றதாக்கும்
பெரியாரிய அம்பேத்காரிய சக்திகளுடன் மார்க்சியம்
ஒரு கோட்பாடற்ற ஒற்றுமையைப் பேணுவதன் மூலம்,
இச்சமூகத்திற்கு நிகழும் நன்மை என்ன?
**
11) Are you so NAIVE  to make these proposals?
---------------------------------------------------------------------------------------   
         
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக