சனி, 24 ஜூன், 2017

தமிழ்நாட்டில் நீட் எழுதியோர் = 83859
தேர்ச்சி பெற்றவர்கள்= 32570
தேர்ச்சி சதவீதம்=38.83
தமிழகத்தில் முதல் மதிப்பெண் =655
(மாணவர் முகேஷ் கன்னா)
---------------------------------------------------------
நீட் தேர்வை நேரடியாகவோ மறைமுகவோ
எதிர்ப்பது என்பது கல்வித் தந்தைகளின்
கொடிய சுரண்டலுக்கு சேவை செய்யும் பணி.
நீட் தேர்வு எதிர்ப்பு என்பது சங்கராச்சாரி
ஜெயேந்திரர் தலைமையிலான ஜேப்பியார்,
பச்சமுத்து, பங்காரு அடிகளார் இன்ன பிற
கல்வித் தந்தைகளின் நலனுக்காக,
ஜெயேந்திரரால் கட்டமைக்கப் பட்டது.
நீட்டை எதிர்ப்பவர்கள் தனியார்மயத்தின்
கைக்கூலிகளாகச் செயல்படுகிறார்கள்
என்பதே உண்மை.
**
அடுத்து, இந்தியாவின் 29 மாநிலங்களில்
28 மாநிலங்களில் நீட் தேர்வை ஏற்றுக்
கொண்டுள்ளனர். அங்கெல்லாம் யாருக்கும்
சமூகப் பார்வை இல்லையா?
**
இது கல்வியியல் சார்ந்த புலம் சார்ந்த நுட்பங்களை
அறிந்து இருந்தால் மட்டுமே பிடிபடக் கூடிய
விஷயம். "நூற்றாண்டுத் தனிமை" என்ற நாவலை
நான் விமர்சித்தால், அந்த விமர்சனம் எந்தத்
தரத்தில் இருக்குமோ, அதே தரத்தில்தான்
நீட் பற்றிய உங்கள் பார்வை இருக்கிறது.
அப்படித்தான் இருக்க இயலும். இதில் தவறில்லை.
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர்; நாவாயும் ஓடா நிலத்து.

லட்சுமி மணிவண்ணன் அவர்கள் கவனத்திற்கு,

1) நீட் மதிப்பெண் மட்டுமே சேர்க்கைக்கு உதவும்.
2) இந்த அரசாணையில் மாநிலப்படத்திட்ட
மாணவர்களுக்கு (TN state board) 85 சத இடம்
ஒதுக்கப் படுகிறது. அரசாணை இன்னும்
கிடைக்கவில்லை. பத்திரிக்கைச் செய்திகளை
வைத்துக் கூறுகிறேன்.


மண்ணுக்கேற்ற இந்துத்துவக் கட்சி
(palatable hindutva) அதிமுக.
பாஜகவை
ஆதரிக்கக் கூச்சப் படுவோர்
ஆதரிக்கலாம்.

தடித்த எழுத்தில் உள்ள இந்தப் பதிவு ஒரு
கட்டுரை அல்ல.இது ஒரு புள்ளிவிவரத்தைத்
தரும் ஒரு பதிவு. எந்த மாணவரையும் பற்றி
இந்தப் பதிவில் குறிப்பிடவில்லை. நிற்க.
நீட் தேர்வு குலாம் நபி ஆசாத் காலத்தில்
2010இல் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து
வழக்குத் தொடுத்த அத்தனை பேரும்
(100க்கும் மேற்பட்ட வழக்குகள்) தனியார் சுயநிதிக்
கல்வித் தந்தைகள்.
**
நீட் எதிர்ப்பு என்பது
தனியார்மய ஆதரவே. Physics Chemistry Biology
பாடங்களை ஒரு மாநிலம் என்னும் குறுகிய
எல்லையில் யாரும்  அடைக்க முடியாது. அவை
universal தன்மை கொண்டவை. அவற்றுக்கு
உள்ளுர்த்தன்மை கிடையாது. எனவே கற்காத
பாடம் என்பதெல்லாம் அபத்தம். தமிழ்நாட்டின்
கல்வித்தரம் சீரழிந்து இருப்பது மட்டுமே குறை.
அதை எதிர்த்துப் போராடாமல், ஆளுங்கட்சிக்கு
முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதில்
என்ன சமூகப் பார்வை இருக்க முடியும்?
**
எவ்வளவுதான் புத்திசாலித்  தனமாகவோ,
புரட்சிகரமாகவோ வாதிட்டாலும், நீட் எதிர்ப்பின்
பயனை அறுவடை செய்யப் போகிறவர்கள்
ஜெயேந்திரர் தலைமையிலான கல்வித்
தந்தைகளே. தங்களின் வாதம் ஜெயேந்திரருக்கே
ஆதாயம் சேர்க்கும். குளத்தில் கோபித்துக்
கொண்டு கால் கழுவாமல் போவதில் என்ன
சமூகப் பார்வை இருக்க இயலும்?      



சுயநிதிக் கல்வித் தந்தைகளுக்கு கொள்கைப்பற்றோ
கட்சிப்பற்றோ கிடையாது. ஜெயேந்திரர் தலைமையில்
நடைபெற்ற (முன்பு நடந்தது) நீட் எதிர்ப்புக்
கூட்டத்தில் எத்தனை திராவிடக் கல்வித் தந்தைகள்
பங்கேற்றனர் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது.
ஜெயேந்திரர் அகில இந்திய அளவில் செல்வாக்கு
உள்ளவர் என்பதால்தான் பச்சமுத்து, ஜேப்பியார்,
பங்காரு எல்லோரும் அவர் தலைமையை ஏற்றனர்.
இன்று சில திராவிட மற்றும் அதிசூத்திர கல்வித்
தந்தைகள் ஜெயேந்திரரைத்தான் நம்பி
இருக்கின்றனர். இதுவே உண்மை. ஜெயேந்திரரை
விமர்சிப்பது துவேஷம் ஆகாது.

1) தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் =38.83 சதம். 32570 பேர்
தேறி உள்ளனர்.
**
2)தமிழகத்தில் உள்ள இடங்களை
தமிழக அரசு நிரப்பும். அந்தந்த மாநில இடங்களை
அந்தந்த மாநில அரசுகள் நிரப்பும்.
**
3) தமிழகத்தில் நடப்பில் உள்ள 69 சத ஒதுக்கீடு
பிரகாரம் இடங்கள் நிரப்பப் படும்.
**
4) தமிழக இடங்களைப் பெற ஒரு மாணவனுக்கு
இருக்க வேண்டிய தகுதி: அம்மாணவன் தமிழகத்தில்
வசிக்க வேண்டும் (domicile status of Tamilnadu).
**
5) தமிழ்நாட்டில் தமிழக அரசுக்கு உரிய இடங்கள்
3000 என்று வைத்துக் ,கொண்டால், இந்த 3000
இடங்களும் தமிழகத்தில் வசிக்கும் மாணவர்களைக்
கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.
**
6) தற்போது தமிழக அரசின் அரசாணைப்படி, இந்த
3000 இடங்களில் 2415 இடங்கள் ஸ்டேட் போர்டு
மாணவர்களுக்கும், மீதி 585 இடங்கள் CBSE
மாணவர்களுக்கும் வழங்கப்படும். (அதாவது 85 சதம்
மாநிலப் பாடத்திட்ட  15 ;சதம் CBSE மற்றும் பிற
பாடத்திட்ட ஒதுக்கீடு). 


ஏற்கனவே இதற்கு முன்பு நீட் குறித்து பல கட்டுரைகள்
எழுதி இருக்கிறேன் அவற்றையும் படிக்கலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக