தேர்தல் ஆணையத்தின் ஐ ஏ எஸ் தற்குறிகளும்
பெருகி வரும் சிந்தனைக் குஷ்டரோகிகளும்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி
நடக்கும். ஆனால் முடிவு அறிவிக்கப் படும் தேதி மே 2 ஆகும்.
24 நாள் காத்துக் கிடந்து மே 2ல்தான் முடிவை அறிந்து
கொள்ள முடியும். இது மக்களுக்கு எரிச்சலை ஊட்டும்.
ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கான காரணத்தையும்
தேர்தல் அறிவிப்புடன் சேர்த்தே தேர்தல் ஆணையம்
மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். தேர்தல்
ஆணையத்தின் கடமை அது. ஆனால் ஐஏஎஸ் தற்குறிகள்
மக்களுக்குப் பொறுப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள்.
புதுவை உள்ளிட்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல்
நடக்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம்
மற்றும் புதுவையில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்
நடந்தாலும், முடிவு அறிவிப்பு ஒரே தேதியில்தான்; அதாவது
மே 2ஆம் தேதியில்தான். கடைசியாக மேற்கு வங்கத்தில்
ஏப்ரல் 29ஆம் தேதியன்று எட்டாவது கட்டத் தேர்தல்
நடைபெறுகிறது. அடுத்த மூன்றே நாட்களில் , மே 2ஆம்
தேதியில் முடிவு அறிவிக்கப் படுகிறது.
2011ஆம் ஆண்டிலும் இதே போலத்தான். 2011 தமிழக சட்டமன்றத்
தேர்தல் தேதி ஏப்ரல் 13. முடிவு அறிவிப்பு ஒரு மாதம் கழித்து
மே 13ல். அப்போது இந்தியாவின் தலைமைத் தேர்தல்
ஆணையர் சஹாபுதீன் குரைஷி. தமிழ்நாட்டின் தலைமைத்
தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் இருந்தார்.
இந்தத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தலைமைத் தேர்தல்
ஆணையர் சஹாபுதீன் குரைஷி இறுதி செய்து அறிவித்தபோது,
இந்தியப் பிரதமராக இருந்து நல்லாட்சி தந்தவர் டாக்டர்
மன்மோகன் சிங். தமிழக முதல்வராக இருந்தவர்
முத்தமிழறிஞர் கலைஞர்.
தேர்தல் நடந்து ஒரு மாதம் கழித்து முடிவு அறிவிப்பதை
கலைஞர் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. ஒரு மாதம்
தாமதம் நியாயமா என்று தேர்தல் ஆணையத்தை
முத்தமிழறிஞர் கேள்வி கேட்கவில்லை. வாக்காளப்
பெருமக்களும் இதை இயல்பானது என்று உணர்ந்து
ஏற்றுக் கொண்டார்கள்.
காரணம் என்ன? அப்போது அதாவது 2011ல் தமிழ்நாட்டில்
சிந்தனைக் குஷ்டரோகிகள் மிகவும் குறைவு. 2014க்குப்
பிறகு அசுர வேகத்தில் சிந்தனைக் குஷ்டரோகிகள்
தமிழகத்தில் பெருகி விட்டனர்.
2011 சட்டமன்றத் தேர்தலைப் பார்த்தோம். 2019 நாடாளுமன்றத்
தேர்தலைப் பார்ப்போமா? இதுதான் தமிழ்நாட்டில் இதற்கு
முன்பு நடந்த தேர்தல். இந்தத் தேர்தல் அட்டவணை
பசுமையாக நினைவு இருக்க வேண்டும். உங்களுக்கு
நினைவு இல்லையா? அப்படியானால் நீங்கள் ஒரு
சிந்தனைக் குஷ்டரோகி என்பது உறுதிப் படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி தமிழ்நாட்டில்: 18 ஏப்ரல் 2019.
முடிவு அறிவிப்பு : 23 மே 2019.
முடிவைத் தெரிந்து கொள்ள ஒரு மாதத்திற்கும் மேலாகக்
காத்திருக்க நேரிட்டது. இந்தியா போன்ற 130 கோடி
மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முடிவைத் தெரிந்து
கொள்ள இவ்வளவு காலம் ஆவது இயல்பானதே.
ஒரு மாதத்துக்கும் மேல் காலம் நீட்டிப்பதால் ஏதேனும்
தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளதா? இல்லை என்பதை
2019ன் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தமிழ்நாட்டில்
தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் (வேலூர் நீங்கலாக)
திமுக கூட்டணி 37 தொகுதிகளை அதிகமான வாக்கு
வித்தியாசத்துடன் கைப்பற்றியது 38ல் 37 வெற்றி!
2019 நாடாளுமன்றத் தேர்தல்:
தேர்தல்: 18 ஏப்ரல். முடிவு அறிவிப்பு: 23 மே. இடைவெளி: 34 நாள்.
2011 சட்டமன்றத் தேர்தல்:
தேர்தல்: 13 ஏப்ரல். முடிவு அறிவிப்பு: 13 மே. இடைவெளி: 30 நாள்.
தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தல்:
தேர்தல்: 6 ஏப்ரல். முடிவு அறிவிப்பு: 2 மே. இடைவெளி: 25 நாள்.
மேற்கூறிய மூன்று தேர்தல்களிலும் இப்போதைய
தேர்தலில்தான், தேர்தலுக்கும் முடிவு அறிவிப்பதற்கும்
உள்ள இடைவெளி குறைவாக இருக்கிறது.
முன்னர்க் கூறிய ஐந்து மாநிலங்களிலும் மே-ஜூன் மாதத்தில்
சட்ட மன்றங்களின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அந்த
ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருகிறது.
எனவே முடிவு அறிவிப்பதும் ஒரே தேதியில்தான் இருக்க
வேண்டும். அதுதான் நியாயம். அதன்படி மே 2ல் முடிவு
அறிவிக்கப் படுகிறது. இதில் ஏப்ரல் 6ஆம் தேதியிலேயே
நமது தேர்தல் முடிந்து விட்ட படியால், முடிவைத் தெரிந்து
கொள்ள நாம் 24 நாள் காத்திருக்க நேரிடுகிறது/ இது
இயல்பானதே.
தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஐஏஎஸ்
அதிகாரிகளைக் கொண்டு நடத்துவதற்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும். தொழில் நுட்ப அறிவும் அறிவியல்
கல்வியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டே
நிர்வகிக்க வேண்டும். சாம் பித்ரோடா, நந்தன் நிலக்கணி
போன்ற தொழில்நுட்ப அறிஞர்களின் தலைமையில்
தேர்தல் ஆணையம் இயங்க வேண்டும்.
அசுரத்தனமான அறிவியல் வளர்ச்சியில் ஐஏஎஸ் படிப்பு
காலாவதி ஆகி விட்டது. ஒரு Glorified clerkக்கு உரிய
பாடத்திட்டமே இன்று ஐஏஎஸ்சுக்கு இருக்கிறது. எனவே
ஐஏஎஸ் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். அறிவியல்
பட்டதாரிகள் மட்டுமே ஐஏஎஸ் தேர்வெழுத அனுமதிக்கப்
பட வேண்டும்.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்தியாவில்
இந்தக் கருத்தைத் தொடர்ந்து சொல்லி வருகிறது.
தற்போதைய பிற்போக்குத் தனமான ஐஏஎஸ் படிப்பை
முற்றிலுமாக ரத்து செய்து விட்டு, ஐஏஎஸ் படிப்பை
அறிவியல் படிப்பாக மாற்றி அமைக்காமல் இந்தியாவுக்கு
விமோசனம் கிடைக்காது.
இறுதியாக, சிந்தனைக் குஷ்ட ரோகிகளே,
தவறான கருத்துக்களை ஒரு நச்சுக் கதிர்வீச்சு போல
பரப்பிக்கொண்டு இருக்காதீர்கள். தேர்தல் முடிவுகளை
அறிவிப்பதில் நியாயமற்ற தாமதம் இருக்கிறது என்று
நீங்கள் கருதினால், அளிக்கப்பட விளக்கங்கள்
உங்களுக்கு மனநிறைவைத் தராவிட்டால், நீங்கள்
அருகில் உள்ள ரயில் நிலையத்துக்குச் சென்று,
ரயில் வரும் நேரத்தில் உங்கள் தலையைக்
கொடுக்கவும். உங்களுக்கு உயிர் வாழ எந்தத்
தகுதியும் இல்லை.
***************************************************