ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

நாயன்மார்களும் நாசமாய்ப் போனவர்களும்!

----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------- 

நகரின் பிரபலமான அந்தக் கட்டிடத்தின் முதல் 

மாடியில் ஓர் அறையில் நாலைந்து CBI அதிகாரிகள் 

ஏக மிடுக்குடன் உட்கார்ந்து இருக்கிறார்கள். அதே  

அறையில்  அச்சத்துடன் சரீரம் ஒடுங்கியபடி ஒரு பிளாஸ்டிக் 

நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் தயாளு அம்மாள்.


அது கனிமொழியின் 2ஜி ஊழல் நாட்டையே புரட்டிப் போட்ட 

நேரம். ஆண்டு 2011. காங்கிரஸ் ஆட்சி. டாக்டர் மன்மோகன்சிங் 

பிரதமர். ப சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

CBI அவரின் அதிகாரத்தின் கீழ் அவரின் நேரடி உத்தரவுக்கு 

கட்டுப்பட்டு இயங்கும் அமைப்பு.


முதல் மாடியில் நடுங்கியபடி உட்கார்ந்திருக்கும் 

தயாளு அம்மாளிடம் ஒரு CBI பெண் அதிகாரி சில 

பேப்பர்களைக் காட்டி ஏதோ கேட்க, அரண்டு போன 

தயாளு அம்மாள் அந்த அதிகாரியின் காலில் விழுந்து 

வணங்கப் போனார்.


அதே நேரத்தில் அந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் 

காங்கிரஸ் தலைவர்கள் வந்து கூடி இருக்கின்றனர். 

திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடங்கள் பகிர்வது பற்றிய 

பேச்சு வார்த்தை. கலைஞரும் வந்து விட்டார். பேச்சு 

வார்த்தை தொடங்குகிறது.


ஏக ஏத்தத்துடன் இருக்கும் காங்கிரசார் 234 சட்ட மன்ற 

இடங்களில் தங்களுக்கு சரிபாதி கேட்டனர். பின் 100க்கு 

இறங்கி வந்தனர். கலைஞரோ மானங்கெட்டுப் போய் 

சிதம்பரத்திடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார். கலைஞர் 

எட்டி உதைத்தால், சிதம்பரம் என்ன, டெல்லியில் உள்ள 

சோனியாவே தலைகுப்புற விழுவார்தான். ஆனால் ஊழல் 

செய்து பொறுக்கித் தின்ற கலைஞரால் எட்டி உதைக்க 

முடியுமா? அதற்கான தார்மீக பலம் அவருக்கு உண்டா?


கலைஞர் தொலைபேசியில் பேசினார். சோனியா மிகுந்த 

ஏத்தத்துடன் இருந்தார். கடைசியில் திமுகவுக்கு பெருத்த 

நஷ்டத்துடன் காங்கிரசுக்கு இத்தனை இடங்கள் என்று 

தீர்மானம் ஆனது.


அந்தத் தேர்தலில் திமுகவால் 119 இடங்களில்தான் 

போட்டியிட முடிந்தது. அதிக இடங்களைக் கேட்டுப் 

பெற்ற காங்கிரசால் 5 இடங்களில் மட்டும்தான் ஜெயிக்க 

முடிந்தது. நிற்க.    


இந்தக் கட்டுரையின் பேசுபொருள் இந்த அசிங்கம் பிடித்த 

கூட்டணியின் இடப்பிடுங்கீடு பற்றியது அல்ல. இது ஒரு 

அகாடமிக் கட்டுரை.  


இத்தேர்தலில் காங்கிரசுக்கு கலைஞர் வழங்கிய இடங்கள் 

எத்தனை? இந்தக் கேள்விக்கு பலராலும் சரியான பதிலைச் 

சொல்ல முடியவில்லை. காரணம்: மறதி. எனக்கு 

மறக்கவில்லை. ஈரேழு பதினாலு லோகத்திலும் உள்ள 

அத்தனை பேருக்கும் மறந்து போயிருக்கும் என்றாலும் 

எனக்கு மறக்காது. தேவையான தகவல்களை எனது 

மூளையில் RAM ஆகவும் ROM ஆகவும் சேமித்து வைக்க 

ஆயிரக் கணக்கான உத்திகள் (techniques) எனக்குத் தெரியும்.


அதே போல கலைஞருக்கும் மறக்காது. கலைஞர் 

உயிர்த்தெழுந்து வருவதாக வைத்துக் கொள்வோம்.

 அவரிடம் 2011ல் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்

கொடுத்தீர்கள் என்று கேளுங்கள். துல்லியமான பதிலைச் 

சொல்வார். அவருக்கும் மறந்திருக்காது. ஏனெனில் மறந்து 

போகாமல் இருக்க அவரும் சில உத்திகளைக் 

கையாள்கிறார்.


என்னுடைய உத்திகள் கோட்பாட்டு ரீதியாக (theoretically)

நான் வந்தடைந்தவை. கலைஞரின் உத்திகள் empiricism  

சார்ந்தவை. தியரி, எம்பிரிசிசம் இவ்விரண்டுக்கும் 

என்ன வேறுபாடு என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


சரி, சஸ்பென்ஸை உடைப்போம். காங்கிரசுக்கு 

63 தொகுதிகளைக் கொடுத்தார் கலைஞர் 

அந்த 63 தொகுதிகளிலும் நிறுத்தப்பட்ட 63 வேட்பாளர்களை 

63 நாயன்மார்கள் என்று அறிவித்தார். இது அற்புதமான 

உவமை. நாயன்மார்கள் 63 பேர் என்பது நம் ஒவ்வொருவரின் 

மூளையிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் விஷயம்.

அந்த 63உடன் வேட்பாளர்களின் எண்ணிக்கையான 63ஐ 

இணைத்து என்றும் மறவாமல் நிலைத்திருக்கச் செய்தவர் 

கலைஞர். உளவியலில் association of thoughts என்ற வகைமையில் 

கலைஞரின் இந்த உத்தி வரும். 


கலைஞரை நான் மனசாரப் பாராட்டுகிறேன். கற்றாரைக் 

கற்றாரே காமுறுவர் என்ற அடிப்படையிலானது இது.

நானே ஒரு முட்டாளாகவோ புழுத்த தற்குறியாகவோ 

இருந்தால், கலைஞரின் உத்தியைப் புரிந்து கொள்வதும் 

அவரைப் பாராட்டுவதும் என்னால் ஒருபோதும் இயலாது.


முந்திய பத்திகளில் கலைஞரின் ஊழலை வன்மையாகக் 

கண்டித்து இருப்பேன். ஒரே நேரத்தில் கலைஞரின் 

ஊழலைக் கண்டிப்பதும், அவரின் இலக்கியத் திறமையைப்  

பாராட்டுவதும் எனக்கு கைவந்த கலை. உண்மையில் 

இது ஒரு அற்புதமான quantum superposition.  


இந்தியக் கல்விமுறையில் மனப்பாடம் ஒரு குறிப்பிட்ட 

பாத்திரத்தை வகிக்கிறது. அந்த அளவுக்கு மனப்பாடம் 

அவசியமே. 27 நட்சத்திரங்கள், 60 தமிழ் வருடங்கள், 

பன்னிரு ராசிகள், பன்னிரு ஆழ்வார்கள், தனிம 

அட்டவணையில் (Periodic table)  உள்ள 100 தனிமங்கள், 

கணக்கற்ற தமிழ்ச் செய்யுட்கள்--- முக்கூடல் பள்ளு,

குற்றாலக் குறவஞ்சி முதல் சங்க இலக்கியம் வரை---

இவற்றுடன் English poetry என்று இவ்வாறாக நான் 

SSLC  முடித்து வெளிவரும்போது எனக்கு  பத்தாயிரம் 

செய்யுட்கள் மனப்பாடம். 


இருந்தும் இதற்கான நியாயமான எந்த அங்கீகாரமும் 

அன்று எனக்குக் கிடைக்கவில்லை.  நான் பிறந்து 

வளர்ந்து படித்ததெல்லாம் பட்டியிலும் பட்டி, ஒரு  

பாண்ட பட்டி. நான் படித்த பட்டியோ தாலியறுத்த 

ஒரு பட்டி. அப்படி இருக்கும்போது என்ன மயிரு 

அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்க முடியும்?          

 

அன்பார்ந்த மாணவர்களே,

போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களே,

தேவையான அனைத்தையும் மனப்பாடம் செய்து கொண்டு 

விடுங்கள். ஒரு விஷயத்தை நினைவில் சேமிப்பதற்கு 

உரிய உத்திகளைக் கற்றுக்கொண்டு நினைவில் 

சேமியுங்கள். மனப்பாடக் கல்வியை முறியடிப்போம் 

என்று யாராவது வந்தால், செருப்பைக் கழற்றி 

அடியுங்கள்.


மனப்பாடக் கல்வி என்பதெல்லாம் ARTS GROUP 

படிப்புகளில்தான் சாத்தியம். கணிதம், இயற்பியல் 

படிப்புகளில் மனப்பாடம் பயன்படாது. இயல்பாகவே 

புரிந்து படித்தால் மட்டுமே மனதில் பதியும் படிப்பு 

அறிவியல் பிரிவு படிப்பு. இது மனப்பாடத்துக்கு 

இடம் தராத படிப்பு. நமக்கு வந்து எவனும் பாடம் 

எடுக்கக் கூடாது. எனவே  மனப்பாடக் கல்வியை  

ஒழிக்க வாருங்கள் என்று எவனாவது வந்தால், 

அவனை செருப்பைக் கழற்றி அடியுங்கள்.

***************************************************   -------

  . 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக