புதன், 3 பிப்ரவரி, 2021

 நிர்மலாவின் முகத்தில் மன்மோகனைக் காண்கிறேன்!

2050ஆம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டை 

மன்மோகன்சிங் 1995லேயே போட்டு விட்டார்! 

CPI, CPM போலிகளின் முதுகுத் தோலை உரிக்கிறோம்!

---------------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------------------------

ஆண்டுதோறும் பட்ஜெட் போடுவதும் தினந்தோறும் மலம் 

கழிப்பதும் சரிசமம் என்று கூறினேன். மனிதகுல 

வரலாற்றிலேயே இப்படிச் சொன்னவன் நான் ஒருவன் 

மட்டுமே. 


1995ஆம் ஆண்டிலேயே, அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பே 

50 ஆண்டுக்கான  பட்ஜெட் போடப்பட்டு விட்டது. 1995ல் 

அந்த பட்ஜெட்டைத் தயாரித்தவர் மன்மோகன்சிங்.

அது என்ன கணக்கு 1995? ஜனவரி 1, 1995ல்தான் இந்தியா 

WTOவில் உறுப்பினராகச் சேர்ந்தது.


1995 முதல் 2045 வரையிலான 50 ஆண்டுகளின்
பட்ஜெட்டை ஏற்கனவே மன்மோகன்சிங் போட்டு விட்டார்
என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. இன்று நிர்மலா
அம்மையார் தாக்கல் செய்த பட்ஜெட் என்பது மன்மோகன்சிங்
உருவாக்கிய டெம்பிளேட்டில் தேவையான மதிப்புகளை
பிரதியிட்டுக் கொண்டதுதான். எனவே நிர்மலாவின்
பட்ஜெட்டில் யார் ஒருவரும் மன்மோகனைக் காணலாம்.

1995 முதல் 2045 வரை யார் பட்ஜெட் போட்டாலும்,
மன்மோகன்சிங் போட்ட பட்ஜெட்தான் அது என்ற
உண்மை ஒவ்வொருவரின் மண்டையிலும் உறைக்க
வேண்டும். போலி இடதுசாரிகளான
CPI, CPM தற்குறிகளின் மண்டையில் இது உறைக்குமா?
1995ல் LPG கொள்கைகளும் உலகமயக் கொள்கைகளும்
இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது,
இடதுசாரித் தற்குறிகள் மூச்சுத் திணறிப் போனார்கள்.
அவர்களுக்குத் தலையும் புரியவில்லை; வாலும்
புரியவில்லை. இந்தப் புதிய சூழலை ஆதரிப்பதா
எதிர்ப்பதா, எப்படி எதிர் கொள்வது என்று ஒரு இழவும்
புரியவில்லை. புதிய பொருளாதாரத்தை
எதிர்கொள்வதற்கான எந்தவொரு ப்ளூ பிரிண்ட்டையும்
அவர்கள் தயாரிக்கவில்லை; இன்று வரை தயாரிக்க
இயலவும் இல்லை. இவ்வாறு இடதுசாரித் தற்குறிகளின்
நாட்பட்ட மலச்சிக்கலுக்கு கால் நூற்றாண்டு கால (1995-2020)
துர்நாற்ற வரலாறு உண்டு.

பட்ஜெட் என்றால் தனியார்மயம்தான்! இந்தியாவின்
கொள்கை LPG கொள்கை! சரிதானே! இந்த LPG என்பதில்
P என்றால் என்ன? அது எதைக் குறிக்கிறது?

P என்றால் Privatisation என்று பொருள். அதாவது தனியார்மயம்
என்று பொருள். பட்ஜெட் தாக்கல் என்பது அரசின் கொள்கையை
வெளிப்படுத்தும் ஓர் நிகழ்வு. அரசின் கொள்கை தனியார்மயம்
என்று இருக்கும்போது பட்ஜெட்டில் அது வெளிப்படுவது
இயல்புதானே!

எனவே புழுத்த போலி இடதுசாரித் தற்குறிகளே,
பட்ஜெட் என்றால் தனியார்மயம்தான். எனவே ஒவ்வொரு
பட்ஜெட்டிலும் தனியார்மயம் ஆவதும், டிஸ்இன்வெஸ்ட்மென்ட்
ஆவதும் இருக்கத்தான் செய்யும்.

1995ல் LPG கொள்கைகள் வந்தபோது பிரகாஷ் காரத்தும்
சீதாராம் யெச்சூரியும் ஏ பி பரதனும் மயிரைப்
பிடுங்கிக் கொண்டு இருந்தார்களா என்று கோபமாகக்
கேட்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி. அண்ணாச்சி
வீரவநல்லூர்க்காரர். கோபக்காரர்.

இசக்கிமுத்து அண்ணாச்சி கேட்பதில் நியாயம் இருக்கிறதே!
இந்திரஜித் குப்தா, சதுரானந்த் மிஸ்ரா இந்த இருவரும்
யார் தெரியுமா? தெரியாது. இவர்கள் மத்திய அரசில்
1996-1998ல் மத்திய காபினெட் அமைச்சர்களாக இருந்த
கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்ட் இந்திரஜித் குப்தா
இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தவர்.

LPG கொள்கை வந்தது = 1995ல்
கம்யூனிஸ்டுகள் அமைச்சர்களாக இருந்தது = 1996-98ல்
LPG கொள்கைகளை எதிர்த்துப் போராடுவார்கள் என்று
பார்த்தால், இந்தப் போக்கிரிகள் மந்திரிப் பதவிச்
சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள்.

மார்க்சிஸ்டு கயவாளிகளின் யோக்கியதையைப்
பார்ப்போம். LPG கொள்ககை எதிர்க்கவில்லை இவர்களும்.
அதற்குப் பதிலாக, LPGயின் பிதாமகன் மன்மோகன்சிங்கின்
ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் இவர்கள் கட்சியின்
CC மெம்பரான சோம்நாத் சட்டர்ஜி இந்திய நாடாளுமன்றத்தின்
சபாநாயகர் பதவியை அலங்கரித்தார். காரித் துப்புகிறார்
இசக்கிமுத்து அண்ணாச்சி.

LPG கொள்கை வந்தபோது, அதை எதிர்க்கத் துப்பில்லாமல்
LPG பிதாமகன் மன்மோகனுக்கு பாதம் வருடிக் கொண்டிருந்து
விட்டு, இன்று ஐயோ தனியார்மயம் என்று கூச்சல்
போடுவது யாரை ஏமாற்ற?

மானங்கெட்ட தேவடியாப் பசங்கள் என்று திட்டினார்
இசக்கிமுத்து அண்ணாச்சி. அண்ணாச்சி திட்டுவது
நியாயம்தான் என்றார்கள் வீரவநல்லூர் AITUC ஆட்கள்.
நாங்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தது வீரவநல்லூர்
மோர்மடம் அருகில். அருகிலுள்ள சுவரைக் கைகாட்டினார்
இசக்கிமுத்து அண்ணாச்சி. 50 வருஷத்துக்கு முந்தி,1972ல்
அந்தச் சுவரில்தான், "நிலமீட்சிக் கைதிகளை விடுதலை
செய்" என்று செம்மண்ணைக் குழைத்து வைக்கோல் பிரியால்
ஆன பிரஷ்ஷால் நான் எழுதினேன். இசக்கிமுத்து
அண்ணாச்சிதான் ஏணியின் கீழ்ப்படியில் நின்று கொண்டு
செம்மண் வாளியைச் சுமந்தவர்.

அன்று வி எஸ் காந்தி தலைமையில் தாதன்குளம் ஆதித்தனின்
பண்ணையில் இறங்கி செங்கொடியை நட்டவர்களை
கருணாநிதி அரசு கைது செய்து பாளையங்கோட்டைச்
சிறையில் அடைத்தது. அவர்களை விடுதலை செய்யச்
சொல்லித்தான் சுவரெழுத்து.

இசக்கிமுத்து அண்ணாச்சிக்கு பிரகாஷ் காரத் வரை
யாரையும் செருப்பைக் கழட்டி அடிக்க உரிமை உண்டு.
எனவே எந்தத் தேவடியாப் பயலும் சலம்ப வேண்டாம் என்று
எச்சரிக்கிறேன்.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
போலிக் கம்யூனிஸ்டுகளான CPI, CPM கயவாளிகளுக்குச்
சொன்னது போலி நக்சல்பாரிகளுக்கும் பொருந்தும்.
போலி நக்சல்பாரி மருதையன் பாஜகவின் இல கணேசனின்
தயவால் கம்பி எண்ணாமல் தப்பித்தது நக்சல்பாரி
வரலாற்றிலேயே பெருத்த இழிவு.
**************************************************************************


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக