நிர்மலா சீதாராமனின் சோஷலிச பட்ஜெட்டு!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு. இங்கு சோஷலிஸப்
பொருளாதாரம் எதுவும் கிடையாது. இன்றைய தேதியில்
உலகில் எந்த நாட்டிலும் சோஷலிஸப் பொருளாதாரம்
கிடையாது.
இன்றைய உலகில் 195 நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள்
ஐநாவில் உறுப்பினராக உள்ளன. இந்த 195 நாடுகளிலும்
முதலாளித்துவப் பொருளாதாரம்தான்!
போலி இடதுசாரி pimps சிலர் காலரியில் உட்கார்ந்து கொண்டு
கியூபா கியூபா என்று கூச்சலிடலாம். போலி இடதுசாரித்
தற்குறிகளே, 1995ஆம் ஆண்டில் இருந்தே கியூபா WTOவில்
உறுப்பினராக இருக்கிறது. WTO உருவானதே 1995ல்தான்
என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் பிம்புகளே!
உலக வர்த்தகக் கழகத்தில் அதாவது WTOவில் தற்போது
164 நாடுகள் உள்ளன. எனினும் 14 நாடுகள் WTOவில்
இணையவில்லை. இந்த 14ல், அதாவது WTOவில் உறுப்பினராக
இல்லாத பிரபலமான ஒரு நாடும் இருக்கிறது. அது எந்த
நாடு என்று சொல்லுங்கள்! வாசகர்கள் இதைச் சொல்ல
வேண்டும். போலி இடதுசாரி நாய்கள், போலி மார்க்சிய
நாய்கள், போலி நக்சல்பாரி நாய்கள் ஆகியோர் இதற்குப்
பதில் சொல்ல வேண்டும்.
WTOவில் உறுப்பினராக இல்லாத நாட்டிலும் கூட
முதலாளித்துவப் பொருளாதாரம்தான். அதாவது சந்தைப்
பொருளாதாரம்தான். ஆக இன்றைய உலகில் எந்த ஒரு
நாட்டிலும் சோஷலிஸப் பொருளாதாரம் நடைமுறையில்
இல்லை என்று அடித்துக் கூறுகிறேன். கியூபா, வட கொரியா,
சீனா ஆகிய நாடுகளில் சந்தைப் பொருளாதாரமே உள்ளது.
ஆனால் அதை சோஷலிச சந்தைப் பொருளாதாரம்
என்கின்றன அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள்.
சோஷலிச சந்தைப் பொருளாதாரம், முதலாளித்துவ சந்தைப்
பொருளாதாரம் இரண்டுமே சந்தைப் பொருளாதாரம்தான்.
அதாவது முதலாளித்துவப் பொருளாதாரம்தான். சோஷலிச
சந்தைப் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு அரசின்
கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தில் உண்டு. மேலும் அங்கு
ஜனநாயகம் கிடையாது. ஒரு கட்சி ஆட்சிமுறைதான்.
கியூபா, சீனா,வட கொரியா ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்ட்
கட்சியின் ஒரு கட்சி ஆட்சிமுறைதான்.
சீனாவில் ஸ்டாக் எக்சேஞ்சுகள் உண்டு. ஆனால் வடகொரியாவில்
ஸ்டாக் எக்சேஞ்சு எதுவும் கிடையாது. ஆனால் வடகொரியாவில்
நிலப்பிரபுத்துவ பாணியிலான வாரிசு ஆட்சி முறை உண்டு.
1948ல் கின் இல் சுங் வடகொரியாவின் அதிபர் ஆனார்.
இன்று வரை அவருடைய கிம் வம்சம்தான் (kim dynasty) ஆண்டு
கொண்டிருக்கிறது.
ஆக உலகில் எங்கும் அரசுகளைப் பொறுத்து சோஷலிஸப்
பொருளாதாரம் கிடையாது என்பதை மனதில் பதிக்கவும்.
எனவே ஆண்டுதோறும் வெளியாகும் பட்ஜெட்டுகள்
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வெளிப்பாடுகளே.
எனவே ப சிதம்பரம் பட்ஜெட் போட்டாலும்,
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் போட்டாலும்
சீதாராம் யெச்சூரி பட்ஜெட் போட்டாலும்
அல்லது வேறு யார் பட்ஜெட் போட்டாலும்
ஒரு முதலாளித்துவப் பட்ஜெட்டைத்தான் போட முடியும்.
கடவுளே வந்து பட்ஜெட் போட்டாலும், முதலாளித்துவப்
பட்ஜெட்தான் போட முடியும். சூரியன் கிழக்கே
உதிப்பது போன்ற உண்மை இது. இந்த உண்மையை
உணராதவன் உயிர்வாழத் தகுதியற்ற கயவன்.
எனவே வெவ்வேறு நிதியமைச்சர்கள் போடம் பட்ஜெட்டுகளில்
சாராம்சமாக எந்த வேறுபாடும் இருக்காது. வித்தியாசம்
என்பது அந்தந்த நபர் சார்ந்த தனிப்பட்ட விருப்பு
வெறுப்புதானே தவிர, பட்ஜெட்டின் கொள்கை கோட்பாடுகளில்
ஒரு வித்தியாசமும் கிடையாது.
இந்திய நிதியமைச்சர்களில் முதலாளித்துவ நலன் நாடும்
அம்சத்தில், நம்பர் ஒன் ப சிதம்பரம். நம்பர் டூ மன்மோகன் சிங்.
நம்பர் த்ரீ பிரணாப் முகர்ஜி.
மற்றவர்கள் எல்லாம் குறிப்பாக பாஜகவின்
நிதியமைச்சர்களுக்கு கடைசி பெஞ்சில்தான் இடம்.
மகாரத்னா அந்தஸ்து பெற்ற மாபெரும் BHEL நிறுவனத்தையே
DISINVESTMENT பண்ண வேண்டும் என்று வெறி பிடித்து
அலைவது மன்மோகனுக்கு சாத்தியம் ஆனது.ஆனால்
பாவம், பரிதாபத்துக்கு உரிய நிர்மலா சீதாராமனால்
அப்படி BHELஐ டிஸ்இன்வெஸ்ட்மென்ட் பண்ண
நினைக்கத்தான் முடியுமா? இந்த நிலையில் மன்மோகனைப்
போல் முதல் பெஞ்சில் இடம் கிடைக்குமா நிர்மலாவுக்கு?
போய் கடைசி பெஞ்சில் உட்கார் என்றுதானே சொல்வார்கள்!
*************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக