திங்கள், 8 பிப்ரவரி, 2021

உலகிலேயே இழிந்தவன் தமிழன்தான்.

சிறையில் கம்பி எண்ணி முடித்து வீடு வரும் 

கிரிமினல் சசிகலாவுக்கு வரவேற்பு தடபுடல்!

ஊடகங்களில் மெகா கவரேஜ்!   


அப்போது ஜெயலலிதா இருந்தார். அவரால் 

வழக்கை இழுத்தடிக்க முடிந்தது. இது 

சசிகலாவால் முடியாது. மேலும் சசிகலா 

கல்வி அறிவற்ற புழுத்த தற்குறி! 

ஒரு புழுத்த தற்குறியால் என்ன சாதிக்க முடியும்?


இந்திய அரசியல்வாதிகளில் 99 சதவீதம் பேர் 

ஊழல் செய்பவர்கள்தாம். செய்யும் ஊழலின் 

அளவு வேறுபாடும்; செய்யும் முறை மாறுபடும்.

சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாதபடி ஊழல் 

செய்தால் அது விஞ்ஞான ரீதியான ஊழல் 

எனப்படுகிறது. இதில் கைதேர்ந்தவர் கலைஞர்.


நம்மை எவன் கேட்க முடியும் என்ற ஆணவத்தில் 

இஷ்டத்துக்கு ஊழல் செய்தவர்களும் இந்தியாவில் 

உண்டு. சிறந்த எடுத்துக்காட்டு இரண்டு 

சொல்கிறேன்.

1) லாலு பிரசாத் யாதவ் 

2) ஜெயலலிதா 


இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் 

நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் 

வழங்கப்பட்டு விட்டது. இதில் ஜெயலலிதா 

இறந்து போனார். லாலு பிரசாத் யாதவ்வும் 

சிறையிலேயே செத்தும் போவார். இதை நான் 

பலமுறை சொல்லி இருக்கிறேன்.


நீங்கள் வேறுபாடு என்ன என்று கேட்கிறீர்கள்.

அதாவது ஊழல் புரிந்து தண்டனை 

அடைந்தவனுக்கும்,  ஊழல் புரிந்தும் தண்டனை 

அடையாதவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன 

என்று கேட்கிறீர்கள். 


வேறுபாடு இதுதான். சாமர்த்தியமாகத் 

திருடினால் தப்பிக்கலாம். கருணாநிதிக்கும் 

ஜெயலலிதாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன? 

கருணாநிதி சாமர்த்தியமான திருடன். 

ஜெயலலிதா சாமர்த்தியம் குறைந்த திருடி.


கருணாநிதி மிகவும் அடிமட்ட வாழ்க்கை வாழ்ந்த 

ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர். படிக்காதவர்.

ஆங்கிலம் தெரியாது. தொட்டதெற்கெல்லாம் 

பயப்படுபவர். தாழ்வு மனப்பான்மை நிறையவே 

உண்டு. இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் 

திருடுவார். எனவே மாட்டிக் கொள்ளவில்லை.


ஜெயலலிதா வசதியான குடும்பத்தில் இருந்து 

வந்தவர். நன்றாக ஆங்கிலம் தெரியும். இந்தி 

போன்ற பிற மொழிகளும் தெரியும். தாழ்வு 

மனப்பான்மை கிடையாது. என்றாலும் 

சசிகலாவால் கெட்டார். எச்சரிக்கையுடன் 

ஊழல் செய்வதற்குப் பதிலாக அடாவடியாக ஊழல் 

செய்தார். வளர்ப்பு மகன் திருமணம் என்ற 

பேய்த்தனமான ஆடம்பரம் ஜெயலலிதா ஒரு திருடி 

என்பதற்கு கட்டியம் கூறியது. 


ஆயிரம் தவறுகள் சசிகலா செய்தாலும்,, 

ஜெயலலிதாவால் அவரை விட முடியவில்லை. 

அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஜெயலலிதா 

போனார். காரணம் இருவருக்கும்  இடையிலான 

emotional relationship என்று கருதுகிறேன். ஆக 

ஜெயலலிதாவின் தவறுகளுக்கு புழுத்த தற்குறி 

சசிகலாவே காரணம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக