புதன், 17 பிப்ரவரி, 2021

 ஊபா சட்டத்தில் கைதான பழங்குடிப் பெண்!

ஊபாவை ஆதரிக்கும் போலி நக்சல்பாரிகளின் 

முதுகுத்தொலி உரிக்கப்படும்!

--------------------------------------------------  

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------  

ஊபா சட்டம் (UAPA) சட்டம் ஒரு பழைய சட்டம்தான்.

(UAPA = Unlawful Activities Prevention Act) . அன்றைக்கெல்லாம் 

அதற்கு இவ்வளவு பல் கிடையாது.


2004ல் சில திருத்தங்கள் இச்சட்டத்தில் மேற்கொள்ளப் 

பட்டன. 2004ல் மன்மோகன்சிங் பிரதமர். அவரின் 

ஆட்சிக்கு CPI, CPM கட்சிகள் ஆதரவு கொடுத்தன.

உண்மையில் அது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி 

ஆட்சியே. மதிப்புக்குரிய சோம்நாத் சட்டர்ஜி 

நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து சிறப்பித்தார்.


2004ஐ அடுத்து 2008. ஊபா சட்டம் மேலும் திருத்தப் 

பட்டது. முன்னிலும் கொடிய ஷரத்துகள் அதில் 

சேர்க்கப் பட்டன. 


பின் 2012ல் மேலும் கொடிய ஷரத்துகள் இதில் சேர்க்கப்பட்டு 

ஊபா சட்டம் மிகக்கொடிய draconian actஆக மாறியது.

டாக்டர் மன்மோகன்சிங், ப சிதம்பரம் ஆகியோரின் 

கைங்கரியத்தால் இச்சட்டம் ஆள்தூக்கிச் சட்டமாக 

மாறியது.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காங்கிரஸ் 

ஆட்சியின்போது நடந்தவை. அடுத்து பாஜக ஆட்சி.

2019ல் பாஜக ஆடசியில் ஒரு திருத்தம் கொண்டு வரப் 

படுகிறது. இதன்படி ஒரு தனி நபரைக்கூட பயங்கரவாதி 

என்று அறிவிக்க முடியும்.


இந்தக் கொடிய சட்டம் ரகசியமாகக் கொண்டுவரப்

படவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 

நன்கு விவாதிக்கப்பட்டு அதன் பிறகே நிறைவேற்றப் 

படுகின்றன. 2019ல் பாஜக ஆட்சியில் திமுக 

எதிர்க்கட்சிதான். என்றாலும் இந்தத் திருத்தத்தை திமுக 

ஆதரித்தது. இதற்கு முன்பு 2004,2008,2012 காலக்கட்டத்தில் 

ஆளும் கூட்டணிக் கட்சியாக காங்கிரசுடன் இருந்த திமுக 

கொடிய திருத்தங்கள் அனைத்தையும் ஆதரித்தது.


ஆக, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க் கட்சியாக 

இருந்தாலும் சரி, ஆள் தூக்கிச் சட்டமான ஊபா சட்டம் 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறுவதற்கு 

திமுக ஆதரவு அளித்துள்ளது. இதுதான் திமுகவின் சாரம்.


குறிப்பாக, மாநிலங்களவையில் 2019ல் பாஜகவுக்கு 

தன் சொந்த பலத்தில் பெரும்பான்மை இல்லை. திமுக

ஆதரவு அளித்ததாலேயே இத்திருத்தம் மாநிலங்களவையில் 

நிறைவேறியது. இல்லாவிட்டால் இச்சட்டம் நிறைவேற்றியே 

இருக்க முடியாது. செய்த்யாளர்கள் கேட்டபோது, 

இச்சட்டத்திற்குத்  தாங்கள் ஆதரவளித்த கயமையை 

நியாயப்படுத்திப் பேசினர் டி ஆர் பாலுவும் ஆ ராசாவும்.

   

ஆக காங்கிரஸ், பாஜக,திமுக ஆகிய கட்சிகளின் கூட்டுப் 

பொறுப்பில் கொடிய ஆள்தூக்கிச் சட்டமான ஊபா  

இன்று மாவோயிஸ்டுகளை வெறி நாயாகக் கடிக்கிறது.  


தங்களை நக்சல்பாரிகள் என்று அழைத்துக் கொள்ளும் 

சில கழிசடைகள் வரும் சட்டமன்றத் தேர்தலில்காங்கிரஸ் 

திமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அறிவித்து 

உள்ளனர். தேர்தல் பாதை திருடர் பாதை என்ற தங்களின் 

முழக்கத்தை கூத்தாடி உதயநிதியிடம் விற்று விட்டனர்.


உதயநிதியிடம் பொறுக்கித் தின்பது இந்தக் 

கழிசடைகளின் திட்டம். அது பற்றி நமக்கு அக்கறை 

இல்லை. ஆனால் மார்க்சிய லெனினியம், நக்சல்பாரி 

என்றெல்லாம் உளறிக் கொண்டு இருந்தால் 

முதுகுத் தொலி உரிக்கப்படும்.  

----------------------------------------------------------------------

பின்குறிப்பு:

ஊபா சட்டத்தைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன்   

கூட்டுச் சேர்ந்து கொண்டு பாசிசத்தை எதிர்ப்பது எப்படி?

கார்முகில்களும் மருதையன்களும் பதில் சொல்வார்களா? 

************************************************  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக