செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

 நண்பர்களே உங்கள் எல்லோருக்கும், உதவியாக இருக்கும் என்று இந்த செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியன் போஸ்டல் டிபார்ட்மென்ட் ல், ஒரு புது SYSTEM, அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இந்த SYSTEM பற்றி இப்போது தான் எனக்கு தெரிந்தது. இது மிகவும், உபயோக மாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது.
அந்த சிஸ்டத்தின் பெயர் "AEPS",
"AADHAR ENABLED PAYMENT SYSTEM ". நீங்கள், இந்தியாவின் எதோ ஒரு கிராமத்திற்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களிடம், BANK (ANY BANK), ATM கார்டு இருக்கிறது. ATM கார்டு இருந்தும், நீங்கள், பணம் எடுக்க, ATM க்கு போக வேண்டும், அது, அந்த கிராமத்தில், எங்கோ தொலைவில், இருக்கிறது என்று வைத்து கொள்வோம், அல்லது, உங்களிடம் ATM கார்டு இல்லை, ஆனால் நீங்கள் பணம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கவலையே வேண்டாம்.
உங்களிடம் இருக்க வேண்டியது ஆதார் கார்டு, அதனுடன் இணைத்த, மொபைல், போதும். அருகில் உள்ள post office க்கு போனால். அவர்கள் AEPS, செயலியை வைத்திருக்கிறார்கள், அவர்களிடம், சொன்னால், உடனே உங்களுக்கு, அவர்கள் பணம் கொடுத்து விடுவார்கள். எப்படி?
நீங்கள் account வைத்திருக்கும், bank branch ஐ (any bank), சொல்ல வேண்டும், அவர்கள், உடனே அந்த, AEPS, செயலியில் அந்த BRANCH ஐ பிடிப்பார்கள், உங்கள் பெயர், ஆதார் கார்டு நம்பரை சொல்ல வேண்டும், உங்கள் ACCOUNT ஐ, பிடித்து, அதில், பணம் உள்ளதா என்று பார்ப்பார்கள், இருந்தால், உங்களுக்கு, தேவை படும் பணத்தை சொல்ல வேண்டும், அவர்கள் உடனே அந்த , செயலியில், கொடுத்து விடுவார்கள், அதன் பிறகு, உங்கள் கட்டை விரல் ரேகை, அந்த செயலியில் வைக்க வேண்டும், அது, ஆதார் கார்டு உடன் சரி பார்த்து, உடனே, உங்கள் மொபைல் க்கு OTP வரும் அதை சொல்ல வேண்டும், அவ்வளவு தான். நீங்கள், கேட்ட பணத்தை, post office ல் கொடுத்து விடுவார்கள்.
"HAT'S OFF TO DIGITAL INDIA".
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக