புதுச்சேரிக் கயமை!
-----------------------------------
மொத்தம் = 30 பேர்
பதவியில் இல்லாதோர் = 7 பேர்
1) தனவேல் (காங்கிரஸ்)
2) நமச்சிவாயம் (காங்கிரஸ்)
3) தீப்பாய்ந்தான் (காங்கிரஸ்)
4) மல்லாடி கிருஷ்ணாராவ் (காங்கிரஸ்)
5) ஜான் குமார் (காங்கிரஸ்)
6) லட்சுமி நாராயணன் (காங்கிரஸ்)
7) வெங்கடேசன் (திமுக)
இந்த 7 பேரும் MLAக்கள். இவர்கள் தற்போது
பதவியில் இல்லை. இதன் விளைவாக
தேர்ந்தெடுக்கப்பட்ட MLAக்களின் எண்ணிக்கை
23 ஆகி விட்டது. இத்துடன் நியமன உறுப்பினர்கள்
3 பேரையும் சேர்த்தால், 23+3 = 26 ஆகிறது.
நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டு.
முன்பு 1990ல் நியமன உறுப்பினர்கள் வாக்களித்து
அரசைக் காப்பாற்றிய முன்னுதாரணம் உண்டு.
இந்த 26 பேரில் கட்சி ரீதியான பிரிவினை வருமாறு:
நாராயணசாமி தரப்பு = 12 மற்றும் எதிர்த்தரப்பு = 14.
(காங் = 9, திமுக = 2, சுயேச்சை = 1, மொத்தம் = 12.
இது நாராயணசாமி தரப்பு)
(என் ஆர் காங்கிரஸ் = 7, அதிமுக = 4, பாஜக = 3
மொத்தம் = 14. இது எதிர்த்தரப்பு).
இது போக சபாநாயகரே நாராயணசாமி தரப்புக்கு
ஆதரவாக இல்லை. எனவே அவர் regular voting
செய்ய மாட்டார். அதாவது casting vote செய்வார்.
ஆனால் casting voteக்கான நிலையே இல்லை.
ஆக நாராயணசாமி தரப்பு 12ல் இருந்து 11ஆகச்
சுருங்குகிறது.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு தினமான பெப்ரவரி 22
அன்று மேலும் பல காங்கிரஸ் MLAக்கள் தாங்கள்
காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை என்பதை
வெளிக்காட்டினர்.
ஆக நாராயணசாமி அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ் MLAக்கள்
6 பேரும் கூட்டணிக் கட்சியான திமுக MLA ஒருவரும்
ஆக மொத்தம் 7 பேர் நாராயணசாமிக்குக் கொள்ளி
வைத்தனர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. இந்த ஆட்சிக்
கவிழ்ப்பின் சூத்திரதாரி யார்? வேறு யார்? திமுகவைச்
சேர்ந்த சாராய ஆலை அதிபர் ஜகத் ரட்சகன்தான்.
*******************************************************
கையாலாகாத பாஜகவும்
சூத்திரதாரி ஜகத் ரட்சகனும்!
------------------------------------------------
நாராயணசாமி ஆட்சியை பாஜக கவிழ்த்து
விட்டது என்பதை ஏற்க இயலாது. ஏனெனில்
ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு பாஜகவுக்கு
ஆற்றல் கிடையாது. பாண்டிச்சேரியைப் பொறுத்த
மட்டில், பாஜக ஒரு கையாலாகாத கட்சி. பாஜகவுக்கு
ஆற்றல் இருக்குமானால், நாராயணசாமி ஆட்சியை
எப்போதோ கவிழ்த்து இருக்கலாம். ஆனால் பாஜக
ஒரு கையாலாகாத கட்சி. அக்கட்சியால் பாண்டிச்சேரி
ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.
அப்படியானால் நாராயணசாமியைக் கவிழ்த்தது
யார்? வேறு யார்? ஜெகத்ரட்சகன்தான்! அவருடைய
மாஸ்டர் பிளான் நாராயணசாமிக்குக் கொள்ளி
வைத்து விட்டது.
ஜகத் ரட்சகனை வெறும் திமுககாரராக பார்ப்பது
அறியாமை. ஜகத் அவர்கள் இந்தியாவின் பெருந்
தொழிலதிபர்களின் ஒருவர். இந்திய ஆளும் வர்க்கத்தின்
பிரிக்க முடியாத பகுதி அவர் (part and parcel of the ruling class).
இலங்கையில் ரூ 26,000 கோடி முதலீடு செய்வது என்றால்
எளிதானதா!
காங் பாஜக இரு கட்சிகளுக்கும் வேண்டியவர்தான் ஜகத்.
அண்மையில் அமலாக்கப் பிரிவு அவரிடம் விசாரணை
நடத்தியதில் அவர் புரிந்த பொருளாதாரக் குற்றங்கள்
வெளிப்பட்டன. எனினும் அவர் கைது செய்யப் படவில்லை.
மாறாக அவருக்கும் ஆளும் கட்சியான பாஜகவுக்கும்
இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஜகாத் ரட்சகன் படித்தவர். IQ அதிகம். வன்னிய சாதிப்
பின்புலம் மிக வலுவாக உண்டு. டாக்டர் ராமதாசுக்குப்
போட்டியாக வன்னியர்கள் மத்தியில் இருப்பவர்.
கோடி ரூபாய் என்பதை சர்வ சாதாரணமாக டீச்செலவுக்கு
ஒதுக்குபவர். இவருடைய மாஸ்டர் பிளான் படியே
நாராயணசாமி அரசுக்கு கொள்ளி வைக்கப் பட்டது.
இதற்கு திமுக தலைவரின் ஆசி உண்டு. திமுக தலைவர்
ஜகத் ரட்சகனைப் பகைக்க மாட்டார்.
நாராயணாசாமிக்கு பாண்டிச்சேரி காங்கிரசில் பலமான
எதிர்ப்பு. எனவே செல்வாக்கு இல்லாத நாராயணசாமியைத்
தூக்கிச் சுமக்க திமுகவும் தயாராக இல்லை.
எனவே ஜகத் ரட்சகனின் மாஸ்டர் பிளானால்
திமுகவுக்கும் லாபம்; பாஜகவுக்கும் லாபம்.
--------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக