செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

 இந்தியாவில்

ஒன்பது யூனியன்
பிரதேசங்கள்.
அரசியல் சாசனம் 1963
யூனியன் பிரதேச சட்டம்
விதி 239a (1)ன்
கீழ் அமைக்கப்படுகிறது
இதில் டெல்லி .
புதுச்சேரி
புதிதாக அமைக்கப்பட்ட
ஜம்மு - காஷ்மீர்,
இந்த மூன்று
இடங்களில்
மட்டுமே ,மக்களால்
வாக்களிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுகள்.
மற்ற டையூ ,டாமன்
அந்தமான்.
நிக்கோபார்
உள்ளிட்டவை
மத்திய அரசின்
நேரடி நிர்வாகத்தில்.
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல்வர் ,அமைச்சர்கள் ,
மந்திரிகள் என
தனி சட்டமன்றமாக
செயல்படும்.
மக்களுக்கு
சம்மந்தமே
‌‌இல்லாத
ஜனாதிபதி யின்
பிரதி நிதியாக
அனுப்பப்படும் துணைநிலை ஆளுநர்களின்
அலம்பல்கள்
தலைவலி களாய்.
இந்திய
அரசியல் சாசனம்
மத்திய அரசால்
நியமிக்கப்படும்
கவர்னர்கள்
அரசியல் கட்சியின்
பிரமுகர்களாக
இருக்கக் கூடாது
என்ற சரத்து சொல்கிறது.
நீண்ட நெடிய
காலமாக
மத்தியில்
ஆளும்
கட்சிகளின்
பொடி டப்பாக்கள்,
தலைவலி ,திருகுவலி
களையே கவர்னராக நியமிப்பது தொடரும் சாசன மீறல்.
நியமன
உறுப்பினர்களும்
கட்சி சார்ந்தவர்களாக
இருக்கக் கூடாது என்ற விதி.
புதுச்சேரி போன்ற
மாநிலத்தில்
பாஜகவில்
பொறுப்பிலுள்ள,
ஏற்கனவே பாஜகவின் சார்பில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த
சாமி நாதனையே
துணைநிலை
ஆளுநர் கிரண்பேடி
நியமன எம்எல்ஏ வாக
நியமித்துள்ளார்.
239.ஏ
விதியின் படி
சாமிநாதன் ,
செல்வகணபதி,
சங்கர் என 3 பாஜக
ஆட்களையே
நியமிக்கிறார்.
நியமன
எம்எல்ஏக்களுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டமன்ற
சபாநாயகர்தான்
பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.
அப்போதைய புதுவை
சபாநாயகர் ,
வைத்திலிங்கம்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
அமைச்சரவை யே
3 நியமன
உறுப்பினர்களையும்
தேர்வு செய்து அனுப்பி இருக்க வேண்டும். என வாதாடினார்.
கவர்னர்
தன்னிச்சையாக
மூன்று பேரை
நியமித்தது செல்லாது
என ஏற்றுக்கொள்ள
மறுத்து விடுகிறார்.
கவர்னர் கிரண்பேடியால்
மூவருக்கும் எம் எல் ஏ வாக
பதவிப் பிரமாணம்
செய்யப்பட்டது.
இதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மூவரும்
சென்னை
உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுதனர்..
உயர்நீதிமன்றத்திற்கு
முதல்வர்
நாராயணசாமியின்
பாராளுமன்ற பிரதிநிதி என்ற முறையில் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் பிரதிவாதி ஆனார்.
சென்னை
உயர்நீதிமன்றம்,
சாமிநாதன் உள்ளிட்ட மூவரை நியமித்தது சரியானது.
என்றது.
இவர்கள் மூவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில்
கலந்துகொண்டு
வாக்களிக்கும்
உரிமையும்
உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.
லட்சுமி நாராயணன்
புதுவை அரசு
சார்பில் உச்ச
நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றத்தின்
முதல் பெஞ்ச்
நீதிபதிகள்
இந்த நியமனத்தில்
மாநில அரசு
தலையிட முடியாது
என்றனர்.
3 நியமன
எம்எல்ஏக்களை
புதுவை ஆளுனர்
நியமித்தது சரி
என்ற தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பை
வழங்கினாலும்,
நியமன
எம்எல்ஏக்கள்
விஷயத்தில்
சரத்துகளிவ்
தெளிவான நடைமுறை
இல்லை.
நியமன
பரிந்துரை அதிகாரம்
யாருக்கு,
எந்த அலுவலகம்
நியமன
அதிகாரங்களை
க்கொண்டது.
இதனை
பாராளுமன்றம்
பரிசீலிக்க வேண்டும்
வேண்டும்.
அதிகாரத்தை
வரையறை செய்ய
வேண்டும் என்பதையும்
பெஞ்ச்
நாடாளுமன்றத்திற்கு
பரிந்துரை
வழங்கியுள்ளது.
பேரவையில்
நியமன
உறுப்பினர்கள்
வாக்களிக்க
உரிமை உண்டு எனவும்
உறுதியும் படுத்தியது.
மேலும்,
யூனியன்
பிரதேசங்களை
துணைநிலை
ஆளுநர்
மூலம் ஜனாதிபதியே
நிர்வகிக்கிறார்.
யூனியன் பிரதேச
கவர்னருக்கு
சுதந்திரமாக
செயல்பட ,நிர்வகிக்க
முழு அதிகாரம் உள்ளது.
எம்எல்ஏக்கள்
நியமனத்தை
செல்லாததாக்க
புதுச்சேரி சபாநாயகருக்கு
அதிகாரமில்லை.
என
தீர்ப்பை தீட்டியது நீதிமன்றம்
இந்த தீர்ப்பு
இப்படி
என்றால்,
இதே போன்ற
யூனியன்
பிரதேசமான
டெல்லியில் வேறுமாதிரி.
டெல்லி முதல்வர்
கெஜ்ரிவால்
சார்பில் ஆம் ஆத்மி கட்சி
கவர்னர் நஜீப் ஜங்
மீது புகார் கூறியது.
கவர்னரின்
அதிகார
துஷ்பிரயோகம்
குறித்தும்
டெல்லி உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தது.
புதுச்சேரி கிரண்பேடி
அரசு இயங்காமல் இருக்க
தொடர்ந்து
கோப்புகளை முடக்கினார்.
அதேபோல
டெல்லி துணைநிலை
ஆளுநரும்
செயல்பட
டெல்லி நீதிமன்ற தீர்ப்பு
வேறு மாதிரியானது.
டெல்லி ஆளுநருக்கு
தனி அதிகாரம் இல்லை.
ஆளுநர்
தன்னிச்சையாக
செயல்படக் கூடாது.
டெல்லி அமைச்சரவை
எடுக்கும்
முடிவுகளுக்கு
ஆளுநர் ஒப்புதல்
அளிக்க வேண்டும்.
அன்றாட முடிவுகளுக்கு
மத்திய அரசு
அனுமதி தேவையில்லை.
என உச்சநீதிமன்ற
ஐந்து பேர் அடங்கிய
சாசன அமர்வு
துணைநிலை ஆளுநர்
அதிகாரத்தை
கேள்வி படுத்தியுள்ளது.
முடக்கியுள்ளது.
தமிழக ஆளுநர்
பன்வாரிலால்
புரோகித்
தணிக்கை செய்வதாக
பல்வேறு மாவட்டங்களுக்கு
பாஜக பரிவாரங்களோடு சென்றபோது திமுக எதிர்த்தது.
கருப்புக் கொடி
ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நீதிமன்றத்திற்கு
போவதாகவும்
கருத்து சொல்லப்பட்டது.
அதன்பிறகு தமிழக
ஆளுநர் புரோகித்
ஆளுநர் மாளிகையை
விட்டு வெளியே
போவதை தொலைத்தார்.
2018 ல் கர்நாடக
காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டபோது கர்நாடக
ஆளுநர் வஜூபாய் வாலா
ஆங்கிலோ
இந்திய எம்எல்ஏ
வை நியமிக்க முயன்றார்.
நீதிமன்றம் சென்றபோது
ஆங்கிலோ இந்திய
நியமன எம்எல்ஏ வை
நியமிக்க
தடைவிதித்தது.
ஓட்டெடுப்பில் கலந்து
கொள்ளவும் மறுக்கப்பட்டது.
ஆயிரத்து
தொள்ளாயிரத்து
68 முதல்
1935 ஆங்கிலேய
சட்டப்படி ,
ஆங்கிலோ
இந்திய
நியமன எம்எல்ஏக்களை
எல்லா மாநிலங்களும்
நியமித்தன.
ஆங்கிலோ
இந்திய நியமன சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு
இந்தியா முழுவதும்
ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.
2020 பாஜக
ஆங்கிலோ இந்திய
நியமனத்தை தடை செய்தது.
இதேபோல் மாநிலத்துக்கு
மாநிலம்
யூனியன் பிரதேசம்
குறித்த சிக்கல்கள்
இன்னும் நீடித்து வருகிறது.
ஒரே நீதிமன்றங்கள்
இப்படி மாற்றி ,மாற்றி
நேரத்திற்கு தக்கவாறு
நபருக்கு
ஏற்றார்போல்
தீர்ப்பு வழங்குவது
நீதிமன்ற உள்குத்தோ.
புதுச்சேரியில்
கிரண் பேடி செய்தது
சரியா தவறா என்பதை
காலம் தான் பதில் சொல்லும்..
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக